நல்லா இருக்கே நியாயம்!

நியாயமாகப் பார்த்தால் இதை நான் டிவிட்டரிலோ பேஸ்புக்கிலோ ஸ்டேட்டஸாகப் பதிவு செய்ய வேண்டும்- ஆனால் எதையாவது சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே வருவது பழகிப்போய் விட்டது.

அது தவிர சொந்தமாக சிந்தித்து எதையும் எழுதுவதில்லை என்ற குறை எனக்கே இருக்கிறது- எதற்கெடுத்தாலும் நாலு தரவுகளைக் கொடுத்து அங்கே அப்படி சொல்லியிருக்கிறார்கள்,  இங்கே இப்படி சொல்லியிருக்கிறார்கள் ஆனால் நான் இப்படி நினைக்கிறேன், அதற்காக அது அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு பிழைப்பா?

அதனால்- ரூம் போட்டு யோசித்தேன் என்று சொல்ல முடியாது, மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்- ஏனென்றால் இது அவ்வளவு குட்டியான சிந்தனை- அதை இங்கு ஒரு பதிவாகப் பகிர்ந்து நண்பர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-

ஒருத்தர் நம்மைப் புகழ்கிறார் என்றால் அவர்தான் நம்மை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதனால் அவர் மேல் நமக்குப் பரிவு வருவது நியாயம்தான். ஆனால் திட்டுபவர்கள் நம்மைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்- அதனால்தான் அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது என்பதால் நம் கோபமும் நியாயமே.

பின்னூட்டங்களில் தஞ்சாவூர் கல்வெட்டு என்ற சொற்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6 thoughts on “நல்லா இருக்கே நியாயம்!

 1. self-serving bias ஐ விளக்கியிருக்கிறீர்கள்

  நினைவின் வேர்கள் புனைவில் கிரியின் கேள்வியும் உங்கள் பதிலும் நன்று.

  confabulation- இற்கு பொருத்தமான சொற்றொடர் போல இருக்கிறது.

  எஸ் ரா சொன்ன இயற்கை எதையும் நினைவு வைத்துக்கொள்வதில்லை என்பது தவறுபோல தென்படுகிறது.
  இந்த உடலும் நினைவுகளும் இயற்கைதானே.இன்றுலவும் டைனோசர் கூட இயற்கையின் நினைவுப்படிவுக்ளிலிருந்து மீட்கப்பட்டதே

  நன்றி

 2. நானே இதைப் பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன், நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க.

  நான் எழுதினது confirmation bias அப்படின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க சொன்னப்புறம்தான் தெரியுது இது self serving bias அப்படின்னு. இரண்டுக்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் இருக்குன்னு ஒரு குழப்பமும் இருக்கு.

  நிற்க.

  இதைப் படிச்சீங்களா? – http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1698090

  “Reasoning is generally seen as a means to improve knowledge and make better decisions. However, much evidence shows that reasoning often leads to epistemic distortions and poor decisions. This suggests that the function of reasoning should be rethought. Our hypothesis is that the function of reasoning is argumentative. It is to devise and evaluate arguments intended to persuade….”

  இப்படி சொன்ன ஆய்வை வெச்சுக்கிட்டு,

  “”The article,” Haidt said, “is a review of a puzzle that has bedeviled researchers in cognitive psychology and social cognition for a long time. The puzzle is, why are humans so amazingly bad at reasoning in some contexts, and so amazingly good in others?”

  “Reasoning was not designed to pursue the truth. Reasoning was designed by evolution to help us win arguments. That’s why they call it The Argumentative Theory of Reasoning. So, as they put it, “The evidence reviewed here shows not only that reasoning falls quite short of reliably delivering rational beliefs and rational decisions. It may even be, in a variety of cases, detrimental to rationality. Reasoning can lead to poor outcomes, not because humans are bad at it, but because they systematically strive for arguments that justify their beliefs or their actions. This explains the confirmation bias, motivated reasoning, and reason-based choice, among other things.””

  இப்படி சொல்றாங்க- http://edge.org/conversation/the-argumentative-theory

  இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

  confabulation, புனைவு- நினைவு பத்தியெல்லாம் நிறைய பேசலாம், அது அப்புறம், ஆனா இப்ப இந்த விஷயத்தை நான் முக்கியமா நினைக்கறேன்.

  இது குறித்த உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  நன்றி.

 3. இந்த reasoning பற்றிய தகவல் இப்போதுதான் படிக்கிறேன்.

  confirmation bias என்பது இங்கு பரவலாக காணப்படும் விஷயம் நாங்கள் எழுதுபவைகளிலும் அது கலந்து கிடக்கிறது.
  நாங்கள் நம்புகிற கருத்துக்கள் சார்பான தகவல்களை எப்போதும் சேகரிப்போம்.அதை எழுதக்கூடச்செய்வோம். எதிரான கருத்துக்களை இயல்பாகவே தவிர்த்துவிடுவோம்.

  அப்படியாயின் உண்மை எப்படித்தெரியவரும்.

  எங்கள் கருத்தை வலுப்படுத்தும் காரணங்களும் எங்கள் கருத்துக்களுமாக அது மட்டுப்படுத்தப்பட்டுவிடும்தானே.
  இந்த confirmation bias இலிருந்து யாரும் தப்பிவிடுவது சுலபமல்ல. கதைகள் பத்திரிகைகள் பதிவுகள்.எங்கும் இது இருக்கிறது

  அதிலிருந்து யாரும் தப்பவில்லை என்று நினைக்கிறேன்.

  நீங்கள் தந்த சிந்தனைக்குறிப்பில் புகழுக்கான காரணம் தான் என்ற அர்த்தம் வருகிறது.அதாவது புகழப்படக்கூடிய இயல்பு தன்னில் இருக்கிறது அதை புகழபவர் புரிந்து கொள்கிறார்.
  திட்டக்கூடிய இயல்பு தன்னில் இல்லை திட்டுபவரில் தவறு.attribution

  வெற்றிக்கு நான் காரணம் தோல்விக்கு மற்றவர்காரணம்
  ஆடத்தெரியாவிட்டால் மேடைசரியில்லை என்பார்கள்.

  எல்லாக்கருதுகோள்களும் கிட்டத்தட்ட சிறுவேறுபாடுகள்தான் போலிருக்கிறது.
  reasoning பற்றிய கருத்து ஒருவர் தம்முடைய நம்பிக்கை பற்றி வைக்கும் காரணங்கள் மற்றவர் வைக்கும் காரணங்களை விட சிறப்பாக இருந்தால்
  இவர் தன்னுடைய நம்பிக்கையை மாற்றிக்கொள்வாரா?
  மேலும் வாசிக்கவேண்டும் எனக்கும் விளக்கம் ஆழமாகவில்லை

  1. நல்லா இருக்கே நியாயம்!

   நீங்க விளக்கமா எழுதுவீங்க, அதை வெச்சு பதிவு தேத்தலாம்னு ஒரு நைப்பாசையில போட்டு வாங்கப் பாத்தேன், இப்படி ஆழமா புரியலைன்னு சொல்லிட்டீங்களே 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s