எச்சரிக்கை

நண்பர் ஒருவரின் வசீகரமான விமரிசனங்களால் கவரப்பட்டு முதல் முறையாக Vivaldiயின் The Four Seasons என்ற வயலின் கன்செர்டோக்களை (ஹி ஹி) தினப்படிக்கு குறைந்தது நான்கு முறைகளாவது கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது தவிர தலைக்குள் புகுந்த தவளை மாதிரி “தன்னத்தானனானா தன்னத்தானனானா தன்னன்னா தன்னன்னா தானனனா” என்று என் மானசீக வயலின் இரவும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் நேற்று நான் சாலையைக் கடக்கும்போது, “ஐயா, தங்கள் இல்லத்தில் விடை பெற்று வந்தீர்களா?” என்று ஒரு ஆட்டோக்காரரால் வினவப்பட நேர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது தான் தரவுகளைச் சேர்க்கத் துவங்கியிருக்கிறேன். தேவையான அளவில் அவை கிடைத்ததும் சூடான, சுவையான ஒரு இசை விமரிசனம் தயாராகி விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசை பற்றித் தெரிந்தவர்கள் இப்போதே ஓடிப் போய் விடலாம்- எதற்கும் துணிந்த அன்பர்கள், பொறுமையாய்க் காத்திருக்கவும்: என்னை கன்செர்டோ கேட்க வைத்த புண்ணியவான் பெயரை பிற்பாடு சொல்கிறேன்.

அப்போ வெச்சுக்கலாம் பாட்டு.

Advertisements

11 thoughts on “எச்சரிக்கை

  1. பாத்தீங்களா, என்னைப் பாத்து இப்படி யாரும் சந்தேகப்படக்கூடாதுன்னுதானே வீடியோ போட்டிருக்கேன்? அப்படியும் கேட்கிறீங்கன்னா நீங்க செம்மொழியாம் தமிழ்மொழி ஆர்வலர்னு நினைக்கறேன். இதுக்கும் தமிழ்ப்பெயர் கண்டுபிடிச்சுடுவோம், டோண்ட் ஒர்றீ!

   1. 🙂 எனக்கு இசை அறிவு மட்டு அதைத்தான் சொல்லவந்தேன். நீண்டகாலமாக தப்புத்தாளம் என்பதை ஒரு தாளவகை என்று நினைத்திருந்தேன். அபஸ்வரத்தை ஒரு ராகம் என்று நினைச்சிருந்தேன்.

    வயலினுக்கு பிடில் என்பதை தமிழ் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    கர்ண கடூரம் என்பதை அனுபவித்திருக்கிறீர்களா.

    1. அதை ஏன் கேட்கிறீர்கள்!

     இந்த கன்செர்டோக்களை கணினியில் நிறுவி, அதன்பின் கைபேசியில் நகலேடுக்கும்போது ஒரு பிழை நடந்துவிட்டிருக்கிறது- மொத்தம் பன்னிரெண்டு இசைக் கோப்புகள். அத்தனையும் வரிசை மாறி காப்பி ஆகியிருக்கின்றன.

     திடீரென்று. “என்னடா இது, கணினியில் ஒரு மாதிரியும் கைபேசியில் வேறு மாதிரியும் இந்த கன்செர்டோக்கள் கேக்குதே?” என்று தரவுகளை ஆறாய்ந்தபோதுதான் விதியின் சதிவலை புலப்பட்டது. ஆனாலும்கூட, இரண்டுமே நன்றாகத்தான் இருந்தன என்பதையும் சொல்ல வேண்டும், விவால்டியா கொக்கா!

     என்ன கேட்டீர்கள், கர்ண கடூரம் என்பதை அனுபவித்திருக்கிறேனா என்றுதானே?- இதுவரை நான் அந்த மாதிரியான சங்கீதத்தைக் கேட்டதில்லை. தரவுகள் கிடைத்தால் அனுப்பி வையுங்கள், நானும் கேட்டு மகிழ்கிறேன்.

     1. என்னைச்சூழ இருந்தவர்கள் அதை அனுபவித்திருக்கிறார்கள்.
      நான் பாடி ரெக்கார்ட்பண்ணலாம்.
      துன்பத்தை ரெக்கார்ட் பண்ணுவது நல்லதல்ல.

      மனசுக்கு இலக்கிய இனிமையைத்தந்துகொண்டிருந்த நீங்கள் செவிக்கும் கொஞ்சம் ஈயத்தொடங்கியிருக்கிறீர்கள் நன்றி

      1. 🙂

       உங்களுக்கு கர்ண கடூரம்னா என்னன்னே தெரியாதுன்னு சொன்னீங்களே, அதை இப்ப முழுக்க முழுக்க நம்பறேன்!

 1. ஹி ஹி… உஷாரா யூட்யூப்ல பாத்து கன்பர்ம் பண்ணிப்போம், எங்களை ஏமாத்த முடியாது (இந்த தடவை!) 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s