ஒரு சிறு தகவல்

டிவிட்டரில் கதைப்பதை அடியேன் வானரம் ஒன்று என்ற புதிய தளத்தில் பார்வைக்கு வைக்க உள்ளேன். வாசக அன்பர்கள் கண்டு களிக்கவும். நன்றி.

என் நண்பர் ஒருவர் நம்மை வாழ்த்தும் முகமாக வீடியோ ஒன்று அனுப்பியிருக்கிறார். அன்னாருக்கு பல நன்றிகள். இந்தப் பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

Advertisements

20 thoughts on “ஒரு சிறு தகவல்

  1. நன்றி ஐயா.

   வாழ்த்துக்கள்னு பெரியவங்க நீங்க நல்ல மனசோட சொல்றீங்க, ஆனா ஒரு நண்பர் பாருங்க, என்னை வாழ்த்தி வீடியோ ஒண்ணு அனுப்பியிருக்கார். அதைப் பதிவுல சேக்கறேன்.

   நன்றி.

 1. நட்பாஸ் சார்,
  ரத்னவேலு சார் பிளாக் படிச்சிப் பாருங்க. அது ஒரு தனி அனுபவம். ஐயா ஸ்ரீவில்லிப்புத்தூரார். நம்ம பிளாக்’குல வந்து தவறாமல் படிச்சி, தவறாமல் கமென்ட் எழுதுபவர்.

  அகில் பிறந்தநாளுக்கு வில்லிப்புத்தூரில் இருந்து ஸ்பெஷல் பால்கோவா மற்றும் ஆண்டாள் புகைப்படம் அனுப்பியிருந்தார். ஓரிருமுறைகள் போன் பண்ணிப் பேசினவர். ரொம்பவும் பாசமானவர்.

  1. படிக்காம இருப்பேனா! எப்பவோ படிச்சாச்சே!

   பெரியவங்ககிட்ட விளையாடக்கூடாதுன்னு கம்னு இருக்கேன்.

   சூப்பரா எழுதியிருந்தார்- எனது நன்றிகள் அவருக்கு உரித்தாகுக.

  1. தாவறது நாங்கதான்- அது எப்பவாவதுதான் அப்டேட் ஆவும் 🙂

   “தனது கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் சலியாது காவிச் செல்லும் ஒரு நெடும் பயணம்,” அப்படின்னா என்னங்க?

 2. தண்ணி வைத்து வாழையிலையைப்போட்டு ஓரமா பொரியல் வைத்துவிட்டு நீங்க உள்ளே போயிடுவீங்க நாங்க பசியோடு காத்திருக்கணுமாக்கும்.

  காவிச்செல்லுதல் எப்படி?
  தனது கருத்துக்களை காத்துக்கொண்டு எதிர்க்கருத்துக்களை நிராகரித்தபடி பொதுக்கருத்தாகுவதை ஏற்றுக்கொண்டபடி நிகழும் பயணம்?

  அல்லது பதிவையும் பின்னூட்டத்தையும் சொல்லுகிறீர்களா?

  1. இலை முன்னால உட்கார்ந்துக்கிட்டு பசியோட காத்திருக்கறது யாரு? 🙂

   இல்லை, இந்த வாக்கியத்தில் அந்த சொல் வருகிறது, “வெ.சா. ஒரு தனிப்பயணம். பெரும்பாலான நேரங்களில் துணையின்றிய எதனோடும் சமரஞ் செய்யாத, தனது கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் சலியாது காவிச் செல்லும் ஒரு நெடும் பயணம்,” என்று படித்தேன்- இதில் ‘காவிச் செல்லும்’ என்பதன் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.

   நிற்க.

   நியாயமாய்ப் பார்த்தால் இதை தனி பதிவாகப் போடணும். அவ்வளவு பொருமையில்லாததால இங்கேயே பதிவு செய்கிறேன்-

   ௧ – “வால் போஸ்டர் பாத்தியா? கோவையில் முக்கிய நபர் கைதுன்னு போட்டிருக்கான்!’
   ௨ – “ஏன், சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?”

   பில்லூரான் என்பவர் பழைய குமுதம் இதழ் ஒன்றில் எழுதிய நகைச்சுவை துணுக்கு 🙂

 3. காவிச்செல்லும் என்றால் ஊடகம் என்ற பொருள்தானே வருகிறது.

  ஊடகம் எல்லாக்கருத்துக்களையும் காவிச்செல்லுகிறது.

  காவுதல் சுமந்து செல்லுதல் எனப்படுகிறபோது அங்கு உள்ளார ஈடுபடுதல் இல்லை.

  வெ சா செயற்பாடு ஒரு ஊடகம் போலவா ?
  உள்ளூர ஊறி ஆராயவில்லையா?

  சார்பின் இருளில் எழுத்து வீழ்ந்து கிடக்க அவர் சமரசமற்ற விமர்சன விளக்கேந்திய தனிப்பயணம்.

  தலையையும் வாலையும் வெட்டி எறிந்து கறிவைத்தால் அது பார்க்க மீன்கறி ;தலையைக்காட்டினால்தான் பாம்புக்கறி

  இந்த ஜோக்குக்கு நன்றி.வெளிவந்தபோது படித்தேன் அப்போது படித்துவிட்டு சொல்லிச்சிரித்தோம்

  1. ஜோக்கைப் படித்த காலம் நினைவிருக்கிறதா? உங்களுக்கு அபார நினைவுத்திறன்.

   ஊடகம் காவிச் செல்கிறது என்பது அருமையான கருத்துரு ஐயா, மிக்க நன்றி.

   உங்கள் உதவியால் நான் கூகுள் பண்ணி தமிழின் அருமையான வாசிப்பின்பம் பெற்றேன்- ரெண்டாவது தடவையாக நன்றி.

   http://www.varalaaru.com/Default.asp?articleid=1047 என்ற தளத்தில், “காவுதல், தோளில் கவ்விச் சுமத்தலைக் குறிக்கும். அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் வரும் ‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ என்ற குறளுக்குப் பொருள் கூறும் இடத்தில் காவுதல் என்ற சொல்லைப் பரிமேலழகர் பெய்துள்ளார்” என்று எழுதுகிறார் மு. நளினி அவர்கள்.

   http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3053 என்ற தளத்தில்,
   வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
   தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான்
   என்ற பன்னிரு திருமுறை பாடல் வரிகளுக்குப் பொருள் கூறுமிடத்து, “வானை – செவ்வானத்தை ; கா – காத்திருத்தல்போல . வெண் மதி , மல்கு – ஒளிமிகும் . புல்கு – பொருந்திய . வார்சடை , செவ்வானம் சடைக்கு உவமை . கா – முதனிலைத் தொழிற்பெயர் . இல் – ஐந்தன் உருபு ஒப்புப்பொருள் . தேனைக்காவில் இன்மொழி – தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி . ( காவில் காவுதலில் உள்ள இனிமை . காவுதல் – கலந்திருத்தல் ). ” என்று மிக அழகாக விளக்கம் தருகின்றனர்.

   கா- என்பது சுமத்தல் என்பதனால், காவல்- சுமந்து நிற்றல், காத்திருத்தல், என்று பொருள் தருகின்றது போலும். அதைவிட, காவுதல் என்பதற்கு கலந்திருத்தல் என்பது எவ்வளவு அழகான சொல்லாக்கம்! ஒருவரை ஒருவர் இவர் வேறு அவர் வேறு என்று பிரித்தறியாவண்ணம் சுமந்திருப்பதையே காதல் என்று சொல்கிறார்கள் போலும்- தேனைக்காவில் இன்மொழி என்று சொல்லும்போது, தேன் எது மொழி எது என்று பிரித்தறியாதபடிக்கு குரலில் இனிமை கலந்திருக்கிறது: எவ்வளவு அழகிய கற்பனை, இல்லையா?

   கா என்ற இந்த அழகிய சொல், இங்கே “வரூவியா வர மாட்டியா நீ வராட்டி உன் பேச்சு கா! கா! கா!” என்று ஒலிப்பதை என்ன சொல்ல? 😦

   ஆனால், வெ. சா. குறித்து முன்னுரையில் எப்படி இந்த காவிச் செல்தல் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார்கள் என்பது இந்த பத்தியைப் படித்தால் வெள்ளிடை மலை (அது என்ன வெள்ளிடை மலை!) போல் தெளிவாகிறது: ” காவினெம் கலனே (புறம். 206)- புறநானூற்றின் பாடலில் இடம் பெறும் “கா அல்லது காவுதல்” என்னும் சொல் இரு முனைகளிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு தண்டினைத் தோளில் வைத்துச் சுமத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. காவுத் தண்டு அல்லது காவுதடி என்னும் சொற்கள் காவடியின் தண்டு அல்லது காவடித்தண்டு என்றாயிருக்கலாம் என்று தமிழ்க் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இச்சொல்லே பின்னர்க் காவடி என்று சுருக்கமாக வழங்கப்படுகிறது.” (http://kaiman-alavu.blogspot.com/2007/09/1.html)

   வெ.சா. குறித்து இப்படி எழுதியிருக்கிறார்கள்- இதை எழுதியவர் திரு அகிலனாகதான் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்- “, “வெ.சா. ஒரு தனிப்பயணம். பெரும்பாலான நேரங்களில் துணையின்றிய எதனோடும் சமரஞ் செய்யாத, தனது கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் சலியாது காவிச் செல்லும் ஒரு நெடும் பயணம்,” ”

   சீர்தூக்கிப் பாரத்தல் என்று சொல்கிறார்களே, அதை இது எவ்வளவு அழகாக சொல்கிறது: ‘தனது கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் காவிச் செல்லும் ஒரு நெடும் பயணம்’ என்ற சொற்கள் எவ்வளவு ஆழமான, ஒரு விமரிசகன் இரு வேறு மாற்று கருத்துகளையும் ஒரு காவடியைத் தூக்குவதுபோல் சமதளத்தில் வைத்து எடுத்துச் செல்கிறான், என்ற காட்சியை நம் மனக்கண் முன் விரிக்கின்றன!

   இதை எழுதியவர் எவராக இருந்தாலும், அவர் வரையும் கவிச்சித்திரம் மறக்கக்கூடியதாக இல்லை. இதைப் படித்துவிட்டு, நீங்கள் சொல்கிற, “சார்பின் இருளில் எழுத்து வீழ்ந்து கிடக்க அவர் சமரசமற்ற விமர்சன விளக்கேந்திய தனிப்பயணம்.” என்ற கருத்தை சேர்த்து படித்தால், எவ்வளவு ஆழமான பொருள் தருகின்றன இந்த வாக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

   இந்த ‘காவுதல்’ என்ற சொல் உங்களிடையே புழக்கத்தில் இருக்கிறதா?- எவ்வளவு அருமையான விஷயத்தை கண்மூடித்தனமாக நாம் இழந்து விட்டோம்.

   அற்புதமாக எழுதி எனக்கு ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

   இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் நாக்கு இன்னொரு பதிவும் ரெடியாகி விடும்!

   மிக்க நன்றி.

 4. ஆச்சரியமாக இருக்கிறது. காவுதல் என்கிற சொல் சாதாரணமாய் புழக்கத்தில் இருக்கிறது. பிரக்ஞை இன்றி உபயோகிக்கிறோம் நாங்கள்.

  நீங்கள் அர்த்தங்கேட்டபோது நேரடி அர்த்தத்தை கேட்டிருந்தீர்களா.நான் வசனத்தில் அது என்ன அர்த்தத்தைக்கொண்டு வருகிறது என்று கேட்கிறீர்கள் என்று நினைத்தேன்.

  காவுதல் சுமந்து செல்லுதல் போல இப்படியும்

  ‘” அவனிட்டை சொல்லிப்போடாதை, எல்லா இடமும் காவிக்கொண்டு திரிவான்’’

  அதுதான் எனக்கு காவுதல் என்பது சுமை மாத்திரமல்ல கருத்து செய்தி எல்லாம் காவப்படுவதான விளக்கம் தோன்றுகிறது.

  ”சீர்தூக்கிப் பாரத்தல் என்று சொல்கிறார்களே, அதை இது எவ்வளவு அழகாக சொல்கிறது: ‘தனது கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் காவிச் செல்லும் ஒரு நெடும் பயணம்’ என்ற சொற்கள் எவ்வளவு ஆழமான, ஒரு விமரிசகன் இரு வேறு மாற்று கருத்துகளையும் ஒரு காவடியைத் தூக்குவதுபோல் சமதளத்தில் வைத்து எடுத்துச் செல்கிறான்”

  இதில் எனக்கு வேறுபாடு தோன்றுகிறது.
  விமர்சகன் இரு வேறு கருத்துக்களை சமதளத்தில் வைத்துக்காவிச்செல்லமுடியும்?
  விமர்சகன் ஆராய்ந்து உண்மையானதை சிறந்ததை சுட்டிக்காட்டி மற்றதை நிராகரிக்கிறானல்லவா?
  ஒரு நல்ல இலக்கிய விமர்சகன் இலக்கியத்தை முன்னிறுத்துகிறான்.
  புகழ்பெற்ற பின்புலமும் செல்வாக்கும் படைத்த எழுத்தாளனையும் புதிதாக எழுதத்தொடங்கிய எழுத்தாளனை அல்லது குரலற்ற எழுத்தாளனையும்
  சமதளத்தில் நிறுத்துகிறான்.

  வேண்டப்பட்டவர் வேண்டப்படாதவரும் அங்கே சமம்
  ஆண்டி எழுதிய கதை போற்றுவான் அரசனாயிருந்தாலும் தரமற்றதை நிராகரிப்பான். ஆண்டியும் அரசனும் சமம்

  அவன் அடையும் லாபமும் நட்டமும் ஒன்றே
  அதனால்தான் நெற்றிக்கண்ணை நீர் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பான்

  அடையும் லாபத்தையும் நட்டத்தையும் அவன் சுமப்பான்
  புகழையும் பழியையும் சுமந்து சொல்வான்.

  தன்மீது விழும் ஆதரவுக்கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும்தான் அவன் காவிச்செல்லுவான் சலிக்காமல்

  நடுநிலைமை தான் எல்லாக்கருத்துக்களையும் சமதளத்தில் காவிச்செல்லமுடியும். விமர்சனம் தரத்தையும் தரமற்றதையும் பிரித்துக்கொடுக்கிறது

  ஆனால் தரத்துக்கான உரைகல் தரமாயிருக்கவேண்டுமே!

  1. ௧. “அவனிட்டை சொல்லிப்போடாதை, எல்லா இடமும் காவிக்கொண்டு திரிவான்’’- அழகான பதப்பிரயோகம், இல்லையா? செய்தியை போகிற இடமெல்லாம் மறைக்கத் தெரியாமல் சொல்லிவிடுவான் என்று பொருள்பட வருகிறதா? “உன் நினைவுகளை சுமக்கிறது என் மனது,” என்று சொல்லும்போது அங்கே ஒரு இறுக்கம் இருக்கிறது, என் சுமை மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், “உன் நினைவுகளைக் காவிச் செல்கிறான் உன் பிள்ளை,” என்று ஒரு பெண் தன்னைப் பிரிந்திருக்கும் கணவனிடம் சொல்லும்போது, உன்னை வெளிப்படுத்துபவனாக உன் மகன் எனக்கு இருக்கிறான் என்ற பொருள் வருமா? காவுதல் என்று சொல்லும்போது, சுமந்து சென்று சொல்லுதல் என்பதைவிட, transparentஆக இருத்தல் என்ற பொருள் வருமா?

   இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக, எந்தெந்த பொருளில், இப்பதம் கையாளப்படுகிறது என்று எழுதினால் நன்றாக இருக்கும்- ஆனால் அதற்கு அவகாசம் கிடைக்க வேண்டுமே!

   ௨. விமரிசகன் பற்றி நம் பேசுவது ஒரு ஆதர்ச நிலை. ஆனால், எல்லா விமரிசகர்களுக்கு விருப்பு வெறுப்பு, மனச்சாய்வுகள் இருக்கும், இல்லையா? அதை நினைவில் வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்பை, அல்லது கருத்துகளை நிராகரிக்கிறீர்கள் என்றால் அதை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள், இல்லையா? இனி அதைப் பரிசீலிக்கவே போவதில்லை என்ற பொருள்தரும் ஒட்டுமொத்த நிராகரிப்பாக அது இருந்தால், அந்த விமரிசகனின் பார்வை பிழைபட்ட ஒன்றாக இருக்குமல்லவா?

   இரு கருத்துகள், அல்லது கருதுகோல்களில் ஒன்றை நிராகரித்து மற்றொன்றை முன்வைக்கும்போதும்கூட, அவனது விமரிசனப்பார்வையில் நிராகரிக்கப்பட்ட கருத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொருத்திப் பார்க்கிறான் என்றுதான் நினைக்கிறேன். ஜார்ஜ் ஆர்வெல் கம்யூனிசத்தை எப்போதோ நிராகரித்த பின்னும், தான் வாழ்நாள் எல்லாம் அதை விவாதித்துக் கொண்டுதான் இருந்தார் என்று நினைக்கிறேன்.

   தெளிவு தரும் உரையாடலாக இது இருக்கிறது, மிக்க நன்றி.

  1. மீரு ஏமி காவாலா?

   ஐ மீன், இன்னும் விரிவா சொல்ல வந்த விஷயத்தைக் காவி இருக்கலாமே?-

   டொட்டோடைங்னு காவினா நாங்க என்னன்னு புரிஞ்சுக்கறது? 😦

 5. சுமந்து சென்று சொல்லுதல் என்று பொருள்படும் .மொழி பற்றி இப்படி ஆராய்ந்ததெல்லாம் கிடையாது.புலமையும் மட்டு.நீங்கள் கேட்கத்தோன்றியதைச்சொன்னேன். 🙂

  விமர்சனம் பற்றிய குறிப்பில் நிராகரிப்பதென்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்திவிட்டேன். நிராகரிப்பது அதீதம்.
  மிகச்சிறந்தது சிறந்தது வாசிக்கலாம் பரவாயில்லை என்று போய் கடைசியில் குப்பை என்று முடிகிறது.
  நிறை குறைகளை ஆராய்கிற விமர்சனத்தின் விளைவு வளர்ச்சியே.

  வளர்ச்சிக்கு குந்தகமான போக்கைத்தான் நல்ல விமர்சகர்கள் நிராகரிக்கிறார்கள்.

  நிராகரிப்பதென்பதை விட தரம் தர மற்றதென் பதை அலசுவதுதான் நிகழுகிறது.

  கருத்துக்கள் சமநிலையில் வைத்துக்காவிச்செல்லபடுவதில்லை.

  அப்படியானால் சிறந்தது பரவாயில்லை குப்பை இப்படி வேறுபாடு இருக்காதே

  விமர்சகன் நல்லதைக்கொண்டாடுகிறான். குப்பையைத்தான் நிராகரிக்கிறான்.இரண்டுக்குமிடையில் பல்வேறுதரங்கள்.

  ஜோஜ் வெல் தன் கருத்தையும் எதிர்க்கருத்தையும் சமதளத்தில் வைத்திருந்திருப்பாரா? தன் நிராகரிப்பைத்தான் அவர் சுமந்து சென்றார்.

  அவர் நிராகரித்தவுடன் கொம்யூனிசம் அற்றுப்போயிருந்தால் அவருடைய நிராகரிப்பு பரிபூரணமடைந்திருக்கும் . விவாதம் தொடர்ந்திருக்காது.
  கம்ம்யூனிசம் தொடர்ந்ததால் நிராகரிப்பைத்தொடர்ந்திருப்பார்.
  அவரிடம் இரண்டு கருத்துத்தளம் கொண்டாடும் தளம் நிராகரிக்கும் தளம்
  சமநிலையில் இருந்திருக்குமோ?

  இலக்கிய விமர்சனம் வேறு. குப்பைகள் காலத்தோடு மட்கி விடுகின்றன.

  அவற்றைத்தொடர்ந்து நிராகரிக்கத்தேவையில்லை.

  பரிசீலிக்காத ஒன்றை எப்படி விமர்சிக்கமுடியும். நல்ல விமர்சகன் படைப்பை பரிசிலீக்காமல் விமர்சிக்கமாட்டான் எழுத்தாளனை வைத்து படைப்பை விமர்சிப்பதில்லை அவன்.
  ஏதோ சும்மா ஒரு வாதத்துக்காக எழுதுகிறேன்

  இது பதிவுக்கு திருவண்ணாமலை கிரி. பதிவுப் பக்தியில் ஊறி

  இப்படி இடையிடையே கிரிவலம் வருவோம்.

  என்னவோ சாருங்க இங்கு நடுநிசி
  ஆக இத்துடன் ……நன்றி வணக்கம்

  தயாரிப்பு உதவி : ஆலந்தூர் ராஜா.

   1. சந்தேகமே இல்லை. அதுவும் திருவண்ணாமலை கிரிவல மகிமையைப் பத்தி சொல்லவே வேணாம். 🙂

    வாழ்த்துகளுக்கு நன்றி.

  1. //ஜோஜ் வெல் தன் கருத்தையும் எதிர்க்கருத்தையும் சமதளத்தில் வைத்திருந்திருப்பாரா? தன் நிராகரிப்பைத்தான் அவர் சுமந்து சென்றார்.//

   சரியாக சொன்னீர்கள், நாமெல்லோரும் நம் நிராகரிப்புகளை சுமந்திருக்கிறோம், இல்லையா? அதற்கான தேவை இருக்கிறது என்பது வேறு விஷயம்.

   சரி, இந்த விஷயத்தில் நம்மிருவர் நிலைப்பாடுகளும் வேறுபடுகிறது- நீங்கள் யோசிக்க வேண்டிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள், இதற்கெல்லாம் அவசரப்பட்டு பதில் சொல்லிவிட முடியாது. உங்கள் கேள்விகளைக் கொஞ்ச நாட்கள் காவிச் செல்ல வேண்டியிருக்கிறது, அவகாசம் கொடுங்கள்.

   நன்றி.

   அது யார் ஆலந்தூர் ராஜா? ஆலந்தூர் மள்ளன் உங்க அவையில் தான் இருக்காரா? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s