நண்பர்களுக்கு நன்றி

இன்று இந்த ப்ளாக் தனது இருபதாயிரமாவது ஹிட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நாம் பத்தாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதிவை அனைத்தும் இன்றும் பொருந்தும்.

௧. சாய் இங்கு பின்னூட்டம் போடுவதில்லை. ஆனால், நேரிலும் தொலைபேசியிலும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்க்றார்.

௨. கிரி- அவ்வப்போது பின்னூட்டம் போட்டாலும், பதிவுலகில் நான் பழகிய ஒரே நண்பர் என்ற வகையில் துணையாக இருக்கிறார்.

௩. அபராஜிதன்- வளர்ந்து விட்டார்- அவரது பகிர்வுகளை ரீடரில் பார்க்கும்போது, நன்றாக இருக்கிறார் என்று அறிந்து மகிழ்கிறேன்.

௪. வரசித்தன்- மனச்சோர்வடைந்து இடைவெளி வரும்போதும், வேறு காரணங்களால் அமைதியாக இருக்கும்போதும் வரசித்தன் அவர்கள் எனக்கு புத்துணர்வு தரும் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

௫. ஜெயமோகன்- விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இந்த பிளாகின் நீண்ட நாள் வாசகர்கள் 🙂 உண்மையை அறிவார்கள்.

———————–

நான் யாருக்காக எழுதுகிறேன்? எழுதி எதையும் கிழிக்கப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். எழுதுவதில் ஏறத்தாழ எல்லாமே ஏதோ ஒரு வகையில் குறைபட்டிருக்கிறது என்பதும் நன்றாகவே தெரியும். இந்தப் பதிவுகள் பொழுதுபோக்கும் அல்ல, தகவல்களோ சிந்தனைச் செறிவோ எதுவும் இவற்றில் கிடையாது. படைப்பூக்கம் என்று சொன்னால் நீங்களே உங்கள் கீபோர்டை கீழே போட்டு மிதித்து ஒவ்வொரு எழுத்தையும் பிரித்தெடுத்தும் கோபம் தீராமல், மானிட்டரை உடைத்துவிட்டுக் குப்புறப் படுத்து அழுவீர்கள்- அந்த பாபம் எனக்கு வேண்டாம்.

யோசித்துப் பார்த்தால், என் தனிமைக்கு ஒரு தீர்வாகவே எழுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டுதான் இருக்கிறேன், ஆனால், மனதில் உள்ளதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தம் மிகுந்திருக்கிற நேரங்களில், இப்படி ப்ளாகில் எதையாவது எழுதுவது ஒரு ஆறுதலாக இருக்கிறது. Self-indulgence என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதைப் பகிரந்துகொள்ள நண்பர்கள் கிடைத்தது உழைக்காமல் கிடைத்த, தகுதியற்ற ஊக்க ஊதியம்.

அதனால்தான் நண்பர்களுக்கு நன்றி என்று சொல்லவேண்டி வருகிறது. யாரும் நான் எழுதியதைப் படிக்கத் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டாலும், யாரோ ஒருவர் படிக்கிறார் என்ற எண்ணம் உணர்வுகள் வெளிப்பட ஒரு பாலமாக இருக்கிறது.

அந்த யாரோ ஒருவர் நாம் மிகவும் மதிக்கிற ஒருவராக இருந்தால், முகமறியாத நூறு பேரால் கிடைக்காத திருப்தி நமக்குக்கூடும். அந்த வகையில் நான் தினமும் ஐநூறு பேர் படிக்கிறார்கள் என்று நிறைவடைகிறேன்.

(ஹிஹி… வேற வழி?!) – எல்லாரும் நல்லா இருங்கப்பா!

Advertisements

12 thoughts on “நண்பர்களுக்கு நன்றி

  1. //அந்த யாரோ ஒருவர் நாம் மிகவும் மதிக்கிற ஒருவராக இருந்தால், முகமறியாத நூறு பேரால் கிடைக்காத திருப்தி நமக்குக்கூடும். அந்த வகையில் நான் தினமும் ஐநூறு பேர் படிக்கிறார்கள் என்று நிறைவடைகிறேன்.//

    நேனு ஒக சாரி ச்சதுவின்னானண்டே…. ஒக வந்தலு சாரி சதிவினட்லா….

  2. அ ட க் க ம் “

    பாருங்க அடக்கத்தையே அடக்கமாய் எழுத முடியவில்லை . நீங்கள் எப்படி சார்

    உங்கள் எழுத்தின் பலம் உங்களுக்குத் தெரியாது

    வாழ்த்துக்கள்

    • 🙂

      அடுத்த ஆராய்ச்சி இந்த அடக்கம்னு சொல்றாங்களே, அதுக்கு அந்த இன்னொரு பொருள் எப்படி வந்ததுன்னுதான்….

      நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s