கைதி

நண்பர்களின் மன்னிப்பை வேண்டுகிறேன் 🙂

ரொம்ப சின்சியராக ஒரு கதையை வைத்துக்கொண்டு தினம் இத்தனை சொற்கள் என்று மொழிபெயர்த்து வந்தேன். ஆனால் எதிர்பாராத நிகழ்வொன்று எனக்கு மிகுந்த தடுமாற்றத்தைத் தந்து விட்டது. அதனால் மேற்கொண்டு எதையும் எழுதும் முனைப்பு இல்லாமல் போய் விட்டது. இப்போது அந்த சிறுகதையைப் பார்த்தால்கூட அலுப்பாக இருக்கிறது. வேறோன்றைத்தான் எடுக்க வேண்டும்.

o0o0o0o0o

எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு தேற்றவேண்டி வெகு காலமாக தொடப்படாமல் இருந்த கலீல் கிப்ரான் புத்தகத்தை தூசுதட்டி எடுத்தேன்.

இரு கூண்டுகள்

என் தந்தையின் தோட்டத்தில் இரு கூண்டுகள் இருக்கின்றன. நினவே பாலைவனத்திலிருந்து அவரது அடிமைகளால் கொண்டு வரப்பட்ட சிங்கம் ஒரு கூண்டில் இருக்கிறது. மற்றொன்றில் பாடாத குருவி.

தினமும் விடியலில் குருவி சிங்கத்தை அழைத்துச் சொல்கிறது, “இந்த நாள் உனக்கு நன்னாளாயிருக்கட்டும், சகோதர கைதியே!”

o0o0o0oo0o0o

எனக்கும் இந்தக் கதை புரியவில்லை.

ஒன்றுமில்லாததற்கு இதுவாவது இருக்கட்டும்.

Advertisements

14 thoughts on “கைதி

    • பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடு என்கிற பழமொழியைக் கடைபிடிக்கிறீர்கள் போலிருக்கிறது…

      கிடைச்ச அளவுக்கு நன்றி. :))

  1. அது சும்மா..

    தும்மலை எப்படி விளங்கப்படுத்துவது…??

    தும்மல் சும்மா தானே வரும் அதையெல்லாம் அனுபவிச்சுப்பார்க்கவேண்டும்

    கலீல் கிப்ரானை பார்த்தீர்கள் தூசு தட்ட தும்மல் வந்திருக்கும்.பதிவர்கள் தும்மினாலும் பதிவாகத்தானே தும்முவார்கள்.அது தான் ஒரு சிறுபதிவு அதச்சொன்னேன்.

    சிறை பொது ..பேதங்களை மறக்கச்செய்கிறது?

  2. 🙂 கிரி நீங்க சொல்லறது சரி எல்லா ஊரிலையும் இருக்கு.ஜெயிலில் நீங்கசொன்னபேதங்களைவிட ஆயுள்தண்டனைக்கைதி தூக்குக்கைதி மாசம் வருஷம் எல்லாம் இருக்கிறது.

    சும்மா எந்தக்குற்றமும் செய்யாமல் பிடித்து அடைத்துவைத்தால் ஒரு பொது உணர்வு வரும். ……..அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

    அடைக்கப்படுவதற்கான பொதுக்காரணத்தின் கீழ் அந்த அடையாளத்தின் ஒன்று திரளுவார்கள்.

    மனித உணர்வை விலங்குகளில் ஏற்றி உருவகித்தால் …மேலே சிங்கமும் குருவியும் ஒன்று திரளக்கூடியது அடைக்கப்பட்ட விலங்குகள் எதிர் மனிதர்கள் என்ற ரீதியில்

    பிரித்தாளவும் செய்யலாம்

        • உண்மைதான். நாம் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் கைதிகள்தான்- என்ன ஆச்சரியம் என்றால், நாமே சில பேருக்கு சிறையாக இருக்கிறோம் 😦

    • குருவி ஏன் சிங்கத்தைப் பார்த்து நட்பாக குட் மார்னிங் சொன்னது என்பது நீங்கள் சொல்வதைப் படித்தபின்தான் புரிந்தது. எப்படி குருவி பாட்டை நிறுத்திவிட்டதோ, அதே போல் சிங்கமும் உறுமலை நிறுத்தி இருக்கும், இல்லையா?

      சிறை மனிதர்களின் தனித்தன்மையை மழுங்கடித்துவிடுக்றது. அவர்கள் நட்பாக இருப்பது நண்பர்களாக அல்ல, சக கைதிகளாக.

      கிப்ரான் சொல்லியிருப்பது அருமையான கதை. உங்கள் விளக்கம் சூப்பர்.

      நன்றி.

  3. சரிங்க இன்னொரு பார்வையும் இருக்கிறதே.

    சிங்கம் பேசவில்லை.குருவி பேசுகிறது. குருவி பேசும் நிலை பலம் படைத்த சிங்கம் பலமிழந்தபோது பேசக்கூடியதாக இருக்கிறது.

    அதிகாரத்தில் இருக்கும்போது பேசமுடியாது

    • ஆமாம், இதே மாதிரி வேறொரு சூழ்நிலையில் “கருடா சௌக்கியமா?” என்று ஒரு பாம்பு கேட்டதாம். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s