விவாதங்களின் ஆபாசம்

இன்று படித்ததில் இது பிடித்திருக்கிறது- நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமியைக் குறித்து எழுதிய, “எனக்குச் சில கற்பித்தவர்”

நான் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பும் வாக்கியங்கள் இவை-

ஞான. ராஜசேகரனின் ‘வயிறு’ நாடகம் பற்றி எனக்கும் அவருக்கும் நடந்த சிறு விவாதமும் தொடர்ந்த கடிதப் போக்குவரத்தும் அவரது பார்வை எவ்வளவு தீவிரமானது என்றும் நேர்மையானது என்றும் எனக்குப் புலப்படுத்தியது. “சேகரின் நாடகத்தைக் குறித்து நான் உங்களிடம் பேசினேன், நீங்கள் கேட்டதின் விளைவாக, என் பதில் ஆத்மார்த்தமானது. நீங்கள் நான் பதில் சொல்லி முடித்ததும் சும்மா போய்விட்டீர்கள் என்றால்? இதைத்தான் ஆபாசம் ஏன்றேன். உங்களுக்கு பதில் சொல்லும் நிலை உண்டு. நீங்கள் எழுதும்போது மூன்று விஷயங்கள் உங்கள் முன் நிற்கின்றன.

  1. கையெழுத்துப் பிரதியை நீங்கள் படித்ததில் பெற்ற அனுபவம்.
  2. என் கருத்துக்கள்.
  3. மேடையேற்றத்தின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவம்.

இந்தப் பின்னணியில் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு, என் கருத்துக்களைப் பற்றி ஏதும் எதிரொலிக்கவில்லை என்றால் அது ஆபாசம்தான். எதிராளியின் பதிலுக்கு ஆதங்கப்படும் மனசுக்குத்தான் இது ஆபாசமாகப் படும். இதற்குப் பின்னால் நிற்பது உங்கள் குரலுக்குக் கொடுக்கும் மதிப்பு. விமர்சனம் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அல்ல. அது தொடரும், தொடரவேண்டிய ஒரு சம்பாஷணை என்ற எண்ணம்.”

ஆபாசம் என்ற சொல் பெரும்பாலும் தன்னையுள்ளடக்கிய தோற்றம், சாயல் என்ற பொருளில்தான் சமஸ்கிருதத்தில் கையாளப்படுவதாக நினைக்கிறேன். சுந்தர ராமசாமி விவாதங்களில் சரியான பதில் தரப்படாமல் வேறொன்றைச் சொல்லி விலகிச் செல்லப்படுவதை ஆபாசம் என்று சொல்வது அவருக்கு விவாதத்தில் மீதிருக்கும் ஈடுபாட்டைக் குறித்த பிரமிப்பைத் தருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாஞ்சில் நாடன் தன் கட்டுரையை இப்படி முடிக்கிறார்-

எனக்குத் தோன்றுவதெல்லாம்- எந்த இலக்கியக் கருத்துக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். ஆனால் எந்தக் கருத்தும் உரிய மரியாதையுடன் கையாளப்படவேண்டும் என்பது முக்கியமானது. எனக்கு அதைக் கற்பித்தவர் சுந்தர ராமசாமி.

Advertisements

2 thoughts on “விவாதங்களின் ஆபாசம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s