இருக்கை

அன்பர்களுக்கு ஒரு அறிவிப்பு:

நானும் எனது டிவிட்டர் நண்பர் திரு vNattu அவர்களும் இணைந்து டம்ப்ளரில் இயங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். இனி துக்கடா பதிவுகளை காப்பி டம்ப்ளரில் கண்டு மகிழுங்கள்.

oOoOoOo

அப்படியானால் இங்கு என்ன செய்வது என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது, இல்லையா?

டிவிட்டர் பெருந்தகை திரு மண்குதிரை அவர்கள் அழியாச் சுடர்களில் என்ற தளத்தில் வெளியான ஜி நாகராஜனின் “நிமிஷக் கதைகள்” குறித்து ஒரு பகிர்வு செய்திருந்தார். இனி இங்கு அது போன்ற கதைகளை (ஹிஹி) அரங்கேற்றுவதாக இருக்கிறேன்… அன்பர்கள் மன்னிக்கவும்.

OoOoOoOoO

இருக்கை

நான் நேற்று வழக்கத்திலில்லாத வழக்கமாக ஆபீசுக்கு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன். வழக்கத்திலில்லாத வழக்கமாக ஏகப்பட்ட வேலை சேர்ந்துவிட்டது.

அதனால் எட்டரைக்கே டெப்போ போய் பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கொஞ்ச நேரத்தில் கூட்டம் சேர்ந்து விட்டது. அப்படி சேர்ந்த கூட்டத்தில் ஒரு பெண் என் இருக்கையின் அருகே அடித்து வரப்பட்டாள்.

முன்னெல்லாம் பெண்கள் ஆண்களின் இருக்கைப் பக்கம் ஒதுங்கத் தயங்குவார்கள். இப்போது ஏராளமானவர்களை இப்படி பார்க்க முடிகிறது.

இந்தப் பெண்ணின் விரல் நகங்களின் பொன்வண்ணப் பூச்சைத்தான் முதலில் பார்த்தேன். அவள் ப்ரௌன் கலர் பர்ஸ் வைத்திருந்தாள். ஏனோ சாவிக் கொத்தையும் கையில் வைத்திருந்தாள். அதன் வாலில் “என்” என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட இதய வடிவ வில்லை ஆடிக் கொண்டிருந்தது. மாநிறம். சந்தன வண்ணப் புடவை. இளைத்த உருவம். இருபது வயதிருக்கும். வட்ட முகத்தில் குவிந்த உதடுகள். நெற்றியில் சற்றே பெரிய ஆச்சரியக் குறி வடிவ ஸ்டிக்கர் பொட்டு.

நான் சாலையில் போகிறவர்கள் வருகிறவர்களை ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போயிருப்பேன் போலிருக்கிறது, “ஏன்யா, இடம் இருந்தா உள்ள போக மாட்டாங்களா?” என்ற தடித்த குரல் என்னை எழுப்பியது. தடியன் ஒருவன் அந்தப் பெண்ணை இடித்து நின்றுக் கொண்டிருந்தான்.

அவனை ஒரு ஆள், “சார், கோவப்படாம உள்ள போங்க சார், பப்ளிக் நெருக்கறாங்க,” என்றார்.

“ஏன்யா, உள்ள போ முடிஞ்சா போ மாட்டேன்? என்னமோ, இடிச்சிக்கிட்டு நிக்கறான்னு சொல்றியே, நான் உன்ன இடிச்சனா?”

“போங்க சார், போங்க,” என்று வேறொரு குரல் குறுக்கிட்டது.

அந்த தடியன் என்னவோ முனகிக் கொண்டே,  கடைசி முறையாக அந்தப் பெண்ணை அழுத்தித் தள்ளித் தாண்டிச் சென்றான். அவள் முகத்தைப் பார்த்தேன். அவளது இறுகிய முகத்தின் உதடுகள் இன்னும் குவிந்திருந்தன.

அடுத்த இரண்டு ஸ்டாப் தாண்டியதும் எனக்கு வலப்புறம் உட்கார்ந்திருந்தவர் எழுந்து போனார்.  அவள் என்னருகே அமர்ந்தாள்.

Advertisements

8 thoughts on “இருக்கை

 1. மிக்க நன்றி. பெரிய உதவி.

  உங்கள் பதிவுகள் எனக்கு முக்கியமானவை.உங்கள் அனேக பதிவுகள் சுயத்தின் நீட்சி என்பதை விட சுயத்தின் கழித்தல்களாக தரிசனமாக இருக்கின்றன.உங்கள் பரந்த வாசிப்பறிவும் மொழியாற்றலும் முக்கியமாக கருத்துக்களுக்கு இடமளிக்கும் தன்மையும் பாசாங்கற்ற தன்மையும் இதைச்சாத்தியமாக்குகின்றன.
  சுயலாபம் நட்டம் போன்ற விசைகளால் இயக்கப்படுகின்ற உலகில் உண்மையில் பயணிக்கும் மேலும் பதிவுகள் தேவை.

  உங்கள் தேடல்களை இங்கு தானம் செய்கிறீர்கள்.அதற்குக்கடமைப்பட்டிருக்கிறேன்

  1. இதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை- இதற்கு நான் முற்றிலும் தகுதியற்றவன் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.

   உலகம் ரொம்ப குழப்பமானது. எது எப்படி எதனால் என்ன நடக்கிறது என்பதை அவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது. அதன் இயல்பில் chaos இருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கைக் கண்டுபிடித்து இயற்கை விதிகளை புலப்படுத்துபவன் விஞ்ஞானி.

   இந்த மாதிரி உங்களைப் பேச வைத்த குற்றத்துக்காக என் மேற்படி பின்னூட்டத்தை மட்டறுகிறேன்.

   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s