கழைக்கூத்தாடியும் மாயாவியும்- ஐந்து சிறு குறிப்புகள்

  1. அவனது கல்லறை வாசகம்- “ஓவியமே வாழ்வு, நிஜ வாழ்வு, என் வாழ்வு”
  2. தான் ஒரு கழைக்கூத்தாடியைப் போல் பஞ்சபூதங்களையும் வசப்படுத்தி வைத்திருப்பதாய் நம்பினான்: ஒரு இறகின் அசைவில் சூரியனின் தகிப்பைத் தணித்தான். தன் விரல் அசைவில் நீர்மாளிகைகள் செய்தான். அவனால் முடியாததில்லை. “பஞ்ச பூதங்களையும் வீசி விளையாடுபவன்- இறவாமை என் இயல்பு” என்று எழுதி தன் நெற்றியில் ஒட்டிக் கொண்டான். அவன் ஒரு மாயன். அவனால் ஆகாததில்லை. அவனது பார்வையில், கீற்றலில் உலகங்கள் உயிர்த்தன.
  3. ஒரு முறை அவனது நண்பர்கள் இருவரின் சண்டைக்கு சமாதானம் பேசப் போனான். ஒரு கண்ணாடித் துண்டம் தாக்கி தன் இடக்கண்ணின் பார்வையை இழந்தான்.
  4. இன்றல்ல. இங்கல்ல. காலம் நீண்டு விரித்த கம்பளத்தின் ஓரிடத்தில் அவன் ஒரு மலரை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தான். ஏனென்று கேட்டவனிடம் சொன்னான், “கருகாமல் பொசுக்காமல் இந்த மலரை நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்க வேண்டும்: ஒரு நாள் இது காலம் தொடா வாடா மலராகும்”
  5. அவன் ஒரு யூதன். ருமானியாவில் பிறந்தவன். ஆஸ்திரியாவில் படித்தவன். பிரான்சில் குடி புகுந்தவன். ஹிட்லர் பிரான்சைக் கைப்பற்றியபோது தப்பிப் பிழைத்தவன்.

நன்றி: guggenheim

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s