ஒளிந்து கொள்ள ஒரு பெட்டி

!!!சண்டே ஸ்பெஷல்!!!

(“A Box to Hide in” by James Thurber)

ஒளிந்து கொள்ள ஒரு பெட்டி
.

கண்றாவியான தொப்பி அணிந்த அந்த குண்டுப் பெண் தன் மளிகை சாமான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியேறும் வரைக் காத்திருந்தேன். அவள் வழியில் இருந்த தக்காளிகளையும் கீரைகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டே வெளியே போனாள். உனக்கு என்ன வேண்டும் என்று கடைக்காரக் கிளார்க் கேட்டான்.

“உன்னிடம் பெட்டி இருக்கிறதா?” என்று நான் கேட்டேன், “பெரிய ஒரு பெட்டி? ஒளிந்து கொள்ள எனக்கு ஒரு பெட்டி வேண்டும்”

“உனக்கு பெட்டி வேண்டுமா?” என்று அவன் கேட்டான்.

“ஒளிந்து கொள்ள எனக்கு ஒரு பெட்டி வேண்டும்” என்று நான் சொன்னேன்.

“என்ன சொல்கிறாய்?” என்றான் அவன். “அவ்வளவு பெரியதாக ஒரு பெட்டி வேண்டுமா?”

பெரிய ஒரு பெட்டியைத்தான் நான் கேட்கிறேன், என்றேன், என்னை கொள்ளுமளவு பெரிய பெட்டி.

“என்னிடம் அவ்வளவு பெரிய பெட்டிகள் இல்லை,” என்றான் அவன். “கேன்களைக் கொண்டு வரும் சிறு அட்டைப் பெட்டிகள்தான் இருக்கின்றன”

நான் வேறு பல மளிகைக் கடைகளையும் முயற்சித்தேன், எவரிடமும் நான் ஒளிந்து கொள்ளுமளவுக்கு பெரிய பெட்டிஇருக்கவில்லை. வேறு வழியில்லை. வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியதுதான். எனக்கு அதற்கான தெம்பில்லை, ஒரு பெட்டியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பேரவா ரொம்ப காலமாகவே என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

“என்ன சொல்கிறாய்? எதற்காக நீ இப்படி ஒரு பெட்டியில் ஒளிந்து கொள்ள வேண்டுமேன்கிறாய்?” என்று ஒரு மளிகைக்கடைக்காரர் என்னிடம் கேட்டார்.

“அது ஒரு தப்பிக்கும் வழி,” ன்று நான் பதில் சொன்னேன், “பெட்டியில் ஒளிந்து கொண்டு தப்பிக்கலாம். அது உன் கவலைகளின் விஸ்தீரணத்தைக் கட்டுப்படுத்துகிறது, உன் ஆவலாதிகளுக்கு ஒரு எல்லை வகுக்கிறது. நீ யாரையும் பார்க்கவும் வேண்டியதில்லை”

“நீ இந்தப் பெட்டியில் இருக்கும்போது சாப்பாட்டுக்கு என்ன எழவுய்யா செய்வாய்?” என்று கேட்டார் அந்த மளிகைக் கடைக்காரர். “உனக்கு சாப்பிட என்ன எழவு எப்படி கிடைக்கப் போகிறது?” நான் இதுவரை பெட்டியில் இருந்ததில்லை, அதனால் எனக்கு இது பற்றித் தெரியாது என்று பதில் சொன்னேன், எல்லாம் தானாக நடக்கும் என்றேன்.

“சரி,” என்றார் அவர் இறுதியாக, “என்னிடம் பெட்டிகள் எதுவும் இல்லை. கேன்கள் வரும் ஒட்ட வைத்த சிறு அட்டைப் பெட்டிகள்தான் இருக்கின்றன”

எங்கும் இதேதான். இருட்டியதும் மளிகைக் கடைகள் மூடப்பட்டதும் நான் என் முயற்சிகளை கைவிட்டேன். மீண்டும் என் அறையில் ஒளிந்து கொண்டேன். விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்திருந்தேன். இருட்டினால் மனம் கொஞ்சம் சுகம் பெறுகிறது. நான் பீரோவில் (closet) ஒளிந்து கொண்டிருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆனால் அனைவரும் கதவுகளை மீண்டும் மீண்டும் திறந்து கொண்டிருக்கிறார்கள். யாராவது உன்னை பீரோவில் வைத்துப் பார்த்து விடுவார்கள். அவர்களுக்குத் தூக்கி வாரிப் போடக் கூடும். ஏன் நீ பீரோவில் இருக்கிறாய் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கும். தரையில் கிடக்கும் பெரிய பெட்டியை யாரும் கவனிப்பதில்லை. அதில் நீ நாட்கணக்காக இருக்கலாம். யாருக்கும் அதற்குள் பார்க்கத் தோன்றாது, சுத்தம் செய்ய வரும் பெண்ணுக்கும் கூட.

அடுத்த நாள் காலை என் அறையை சுத்தம் செய்பவள் வந்து என்னை எழுப்பி விட்டாள். நான் அப்போதும் மோசமாகத்தான் இருந்தேன். எனக்கு எங்கே ஒரு பெரிய பெட்டி கிடைக்கக்கூடும் என்பது அவளுக்குத் தெரியுமா என்று அவளிடம் கேட்டேன்.

“உனக்கு எவ்வளவு பெரிய பெட்டி வேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

“நான் உள்ளே போகுமளவுக்கு பெரிய ஒரு பெட்டி எனக்கு வேண்டும்.” என்று நான் சொன்னேன். அவள் தன் பெரிய, கலங்கிய கண்களால் என்னைப் பார்த்தாள். அவளது சுரப்பிகளில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அவள் பிரயோசனமே இல்லாதவள், ஆனால் நல்ல இதயம் கொண்டவள், அது இன்னும் மோசம். அவளை சகித்துக் கொள்வது கஷ்டம்- அவளது கணவனுக்கு உடம்பு சரியில்லை, அவளது குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை, அவளுக்கும் உடம்பு சரியில்லை. இப்போது நான் ஒரு பெட்டியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தேன், அவளைப் பார்க்க வேண்டியதில்லை. நான் இதே அறையில் இங்கேயே ஒரு பெட்டியில் இருப்பேன், அவளுக்கு அது தெரியாது. நீ இருக்கும் பெட்டிக்கு அருகில் தெரியாமல் யாராவது வந்து நடந்து போகும்போது உனக்கு குலைக்கவோ சிரிக்கவோ ஆசை வருமா என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அப்படி ஏதாவது நான் செய்தால் இவளுக்கு இதயம் படபடத்து வரக்கூடும். இவள் இங்கேயே செத்துப் போய் விடுவாள். போலிஸ்காரர்களும் லிப்ட் ஓட்டுபவனும் மிஸ்டர் க்ராமாட்ஜும் எங்களைப் பார்ப்பார்கள். “பயங்கரமான ஜோக் ஒன்று எங்கள் பில்டிங்கில் நேற்று இரவு நடந்தது,” என்பான் எங்கள் காவலாளி தன் மனைவியிடம், “நான் இந்தப் பெண்ணை 10F பிளாட்டை சுத்தம் செய்ய உள்ளே விடுகிறேன், என்ன, அவள் வெளியே வரவேயில்லை. அவள் ஒரு மணி நேரம் கூட உள்ள இருக்கவில்லை, ஆனால் அவள் வெளியே வருவதாயில்லை, என்ன? எனக்கு ட்யூட்டி டைம் முடிந்ததும் நான் போய் லிப்ட் ஓட்டிக் கொண்டிருக்கும் மிஸ்டர் க்ரென்னிக்கிடம் என்ன சொல்கிறேன், 10F பிளாட்டை சுத்தப்படுத்தப் போன அந்தப் பெண்ணுக்கு என்ன எழவு ஆச்சு என்று ஏதாவது உனக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறான், மேலே கொண்டு போய் விட்டபின் அவளை அவன் திரும்பப் பார்க்கவேயில்லை. அதனால் அப்புறம் நான் மிஸ்டர் க்ராமாட்ஜிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன். “மிஸ்டர் க்ராமாட்ஜ், உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று நான் சொல்கிறேன், “10F பிளாட்டை சுத்தம் பண்ணச் சென்ற பெண் விஷயத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்திருக்கிறது”. ஆக அவரிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அடுத்து அவர் நாம் போய் ஒரு தடவை பார்த்து விட்டு வரலாம் என்று சொல்கிறார். நாங்கள் மூன்று பேரும் மேலே போய் கதவைத் தட்டுகிறோம், வாசல் மணியை அடிக்கிறோம் பாரேன், யாருமே எங்களை உள்ளே விடவில்லை. அதனால் நாம்தான் உள்ளே போயாக வேண்டும் என்று சொல்லிவிட்டு மிஸ்டர் க்ரென்னிக் கதவைத் திறந்தார், நாங்கள் எல்லாரும் உள்ளே போனால், அந்த பிளாட்டைச் சுத்தம் செய்யும் பெண் காய்ந்த கருவாடாய் அங்கே தரையில் செத்துக் கிடக்கிறாள். அந்த பிளாட்டில் இருக்கும் கனவானானால் பெட்டிக்குள் இருக்கிறான்.”….

சுத்தம் செய்யும் பெண் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் இன்னும் சாகவில்லை என்பதை நம்புவதே கஷ்டமாக இருந்தது. “இது ஒரு தப்பிக்கும் வழி,” என்று நான் முனகினேன். “என்ன சொன்னாய்?” என்று அவள் கேட்டாள், சுரத்தே இல்லாமல்.

“பாக் செய்வார்களே, அதற்குப் பயன்படும் பெரிய பெட்டிகள் எதுவும் உனக்குத் தெரியாதா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை, எனக்குத் தெரியாது,” என்றாள் அவள்.

எனக்கு இன்னும் அப்படி ஒரு பெட்டி கிடைக்கவில்லை. ஆனால் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளும் பேரவா என்னை இன்னமும் உந்திக் கொண்டே இருக்கிறது. அந்த ஆசை போனாலும் போய் விடும், நான் சரியாகி விடுவேன். அல்லது இது இன்னும் மோசமாகக் கூடும். ஒன்றும் சொல்ல முடியவில்லை.

Advertisements

6 thoughts on “ஒளிந்து கொள்ள ஒரு பெட்டி

  1. நன்றி சார்- அகோராபோபியா இல்லை என்று நினைக்கிறேன்- இவர் தேடும் பெட்டி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்- ஆறடிக்கு இரண்டடி இருக்குமா?! :)))

   Jokes are grievances, என்று Marshall McLuhan கூரியிருப்பதாக அண்மையில் படித்தேன். தர்பரின் எழுத்துகள் அதற்குச் சான்று, குறிப்பாக இந்தக் கதை.

   மீண்டும் எனது நன்றிகள்.

 1. சீனாவில் என்ன இங்கும் இப்படி கபின்களில் இருக்கிறார்கள். ஹாஸ்பிட்டல் கட்டுகிறார்கள் இப்படி பெட்டிகளைகொண்டு வந்து வைத்து… ஆபீஸ் வேலை அங்கிட்டுத்தான்

  என் இணைப்பில் உள்ள உரையாடலை காப்பி பண்ணி இட்டாந்திருக்கேன்
  பார்த்துக்குங்க

  Living in a Box:
  Hi everyone,

  I’ve never posted on anything like this before… I guess it would be the same as telling strangers on the street your innermost feelings. I just thought maybe someone out there might understand me. I’ve struggled with anxiety all my life. My main symptoms have been difficult in breathing or the ability to have any rational feeling.. I just want to run away and hide. I’m so tired of living this way, being afraid of people and what they may think of me. Even my closest friends do not know about all of my anxiety/depression struggles… it puts me in such a vulnerable position.

  I’ve read books and visited a psychologist for about three years, and thought that perhaps it was all a phase. But it seems that I’m stuck in an emotional rut that has prevented me from doing what many people my age have accomplished. I’m 26, and going to college night classes is a struggle. Sometimes, I don’t want to get out of the car and go inside. I avoid all eye contact, always looking down and away. I talk to no one. I still live at home, terrified that if I should move out that I would simply disappear from the world and retreat into hiding. I avoid going out with the friends I do have; I make up excuses because I can’t bear the thought of having to be judged by what I wear or the things I say.

  I’m rambling, sorry. I guess I just wish I knew a way to live… because I know I’m not living! But each day, I feel like I’m sinking farther away from the outside world… and I’m scared. Why is it so easy for some people to get up and do things? I spend so much time anxious and analyzing how or what might make me even more anxious/depressed that I end up doing nothing… yet I can’t seem to push myself to do any differently.

  Please, if possible, someone tell me how you overcame living this way, in a box… thanks for reading my message. God bless to everyone on this board!

  1. இதற்கெல்லாம் எளிய பதில்கள் இல்லை. ஆனா இதைப் படிக்கும்போது நீல வண்ணம் நிறைய இடத்தில் வரும் உங்க கதை ஒண்ணு நினைவுக்கு வருது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s