பேசிக் கொண்டிருக்கிறார்கள்

பிரவாகமாகப் பொங்கியோடிய ஆற்றுப் பாதையில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டேயிருந்தார்கள்- அவர்களுடைய பேச்சின் உரத்த குரல்களும் கொண்டாட்டச் சிரிப்பிலும் தடித்த வார்த்தைகளிலும் சில சமயம் ஒலியே வெள்ளமாய்ப் பெருகிப் பாய்ந்ததோ என்றெண்ண வைத்ததது. இத்தனைக்கும் அவர்கள் சுழித்தோடும் அந்த ஆற்றுக்கும் பயணத்துக்கும் புதியவர்கள். எங்கிருந்துதான் இந்த நெருக்கம் வந்ததோ என்று தெரியாதபடி வெளி உலகை மறந்து எதிரொலிப்பில் திளைத்தனர். ஆற்றுப் பயணம் என்றால் விபத்தின்றி இருக்குமா?- மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வின் விள்ளலாய் ஒரு பயணியின் அசந்தர்ப்பக் குரலின் எதிரொலி விண்ணைத் தொட்டு நிறைத்தது. அந்தப் பயணியைத் தவிர மற்ற அனைவருக்கும் அது பொருட்படுத்தத்தக்க அதிர்வாய்க்கூட இருக்கவில்லை. எதிரொலியின் வியாபகத்தில் தன் குரலை இழந்த அந்தப் பயணி மௌனத்தில் கரைந்தும் அவரோடிருந்தவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல்

பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் கணத்துக்கு கணம் தோன்றியவையனைத்தையும் மறக்கக் கூடாத நிகழ்வுகளின் பரப்புரையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இழப்பும் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்றால் மனிதனின் துயரங்களுக்கு முடிவேயில்லை என்பதை அறிந்தும் எதுவும் நடக்காதது போல், தங்கள் குரல்களின் ஒலியில் தங்களை இழந்து, கண்ணாடி மனிதர்களாய், ஒருவரையொருவர் பிரதிபலித்து, புதுப் புது பாவனைகளுடன் ஒவ்வொருவரும் ஒரு தனிக் கடலாய் பெருகிப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்: ஒலியோடு ஒலியாக- மகிழ்ச்சியில் திளைக்கும்போதும் இழப்புகளுக்கு வருந்தும்போதும் தங்கள் சப்தத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு.

Advertisements

20 thoughts on “பேசிக் கொண்டிருக்கிறார்கள்

  1. இந்தக் கதை காமெடியாவா இருக்கு? அடிவயிற்றைப் பிசையும்மின்னே நினைச்சேன்!

   1. இங்கே பேசுபவர்கள், தங்கள் பேசுவது மற்றவர்களுக்கும் புரியவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பேசவும்.

    1. பயனுள்ள அறிவுரை. நன்றி. யாருக்கு புரியும்படிப் பேச வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினால் மேலும் பயனுள்ள அறிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

     தெளிவிப்பீர்களா?

 1. என்ன கொடுமை இது நான் மறுமொழி போட்டா மட்டும் இந்த ப்ளாக்ல வரவேமாட்டேங்குது

  1. ஆமாங்க, ஒவ்வொரு தடவை ஒவ்வொரு மின் அஞ்சல்ல வாங்க. அதான் நம்ம ப்ளாக்கு நீங்க நல்லவரா கெட்டவரான்னு கன்பூஸ் ஆயிடுது.

 2. இந்தக் கதைக்கும் அண்ணன் கிரிக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் அப்படிக் கேட்கிறார். நீங்க ஏன் ’வயித்தைப் பிசையறமாதிரி கதை இல்லியான்னு கேக்கறீங்க?’ அப்புறம் டாக்டர் என்னவோ புரிஞ்சிடுத்துங்கிறார், அது என்னனு உங்களுக்கும் புரியலை எனக்கும் புரியலை.

  இது எல்லாத்தையும் சேர்த்து தான் சொன்னேன். நீங்க கோபப்படறீங்க 🙂

  1. ஒரு பிரதியை முன்வைப்பதொடு எழுத்தாளனின் கடமை முடிந்து விடுகிறது. அதன் வாசகர்கள் தங்களுக்குரிய பொருளை அதில் கண்டடைகிறார்கள். கிரி படித்த கதையும் நட்பாஸ் படித்த கதையும் டாக்டர் படித்த கதையும் ஒரே விஷயத்தைப் பேச வேண்டுமென்பதில்லை. ஏன் நீங்கள் எது புரியவில்லை என்று சொல்கிறீர்களோ அதுவே கதையாகவும் இருக்கலாம், இல்லையா?

   வெளங்கிடுச்சு என்று நினைக்கிறேன் 🙂

    1. ஆகா! செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணன் நம் அனைவருக்கும் ஆதர்சமல்லவா! அருமையான பாடல்! அரிதான பாடம்! அட்டகாசம்! அட்டகாசம்!

     1. துரியோதனனுக்கு. சகுனிக்கு. ஏன், தினமும் எட்டு மணி நேரம் நிம்மதியா தூங்கறவங்களாவும் இருக்கலாம் 🙂

  1. கடைசியில எல்லாம் பேச்சா முடிஞ்சுடுச்சு பாத்தீங்களா? இதுதான் மானுடத்தின் சோகம்.

   பின்னூட்டப் பெட்டியை மூடி விடலாமா? )

 3. உங்கள் கதைக்கு பின்னூட்டம் இடப்போக அது கொஞ்சம் பெரிதாகிவிட இன்னும் கொஞ்சம் சதை சேர்த்து கதையாக்கி பதிவாக்கிவிட்டேன். நன்றி.

  1. அது ஒரு அருமையான பின்நவீனத்துவ கதையாச்சே! உங்க கதை deconstruction சம்பந்தப்பட்ட ஒரு பிரஞ்சு பதத்தின் விளக்கம், ஆனா என்ன, அந்த வார்த்தை மறந்து போச்சு 😦

  2. “என்னைச் சுற்றி எழுத்துக்கள் சுழிகொண்டு சுழலத்தொடங்கின. நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்.மூச்சோடு எழுத்துக்கள் உட்சென்று வெளிவந்து கொண்டிருந்தன. படர்ந்தும் மூச்சோடு ஊடுருவியும் எழுத்துக்கள் என் உடலெங்கும் பரவத் தொடங்கியிருந்தன.

   ’எழுத்துக்களில் என்னைத் தேடுங்கள்’ என்று எழுதவேண்டும் போல கடைசிக் கணத்தில் எனக்குத் தோன்றியது…”

   என்று உங்கள் கதையை முடிக்கிறீர்கள்.

   Differance பற்றிய தன் உரையில் Derrida சொல்கிறார்,

   “…. if we accepted the form of the question, in its meaning and its syntax (“what is?” “who is?” “who is it that?”), we would have to conclude that différance has been derived, has happened, is to be mastered and governed on the basis of the point of a present being, which itself could be some thing, a form, a state, a power in the world to which all kinds of names might be given, a what, or a present being as a subject, a who. And in this last case, notably, one would conclude implicitly that this present being, for example a being present to itself, as consciousness, eventually would come to defer or to differ: whether by delaying and turning away from the fulfillment of a “need” or a “desire,” or by differing from itself. But in neither of these cases would such a present being be “constituted” by this différance.

   Now if we refer, once again, to semiological difference, of what does Saussure, in particular, remind us? That “language [which only consists of differences] is not a function of the speaking subject implies that the subject (in its identity with itself, or eventually in its consciousness of its identity with itself, its self-consciousness) is inscribed in language, is a “function” of language, becomes a speaking subject only by making its speech conform–even in so-called “creation,” or in so-called “transgression”–to the system of the rules of language as a system of differences, or at very least by conforming to the general law of différance, or by adhering to the principle of language which Saussure says is “spoken language minus speech.”

   http://www.stanford.edu/class/history34q/readings/Derrida/Differance.html

   (இதுக்கு மேல தாங்காது. பின்னூட்டப் பெட்டியை மூடிட்டு உங்க தளத்துல தொடருவோம்!)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.