ஒரு சிறு அற்பத்தனம்

தலையறுந்த சிக்கன் என்றொரு ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான சிறுகதையைத் தேர்வு செய்து தினம் ஒன்றிரண்டு பத்திகளாக மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தவிர்க்க முடியாத அற்ப காரியம் குறுக்கிட்டு சண்டே ஸ்பெஷலுக்குத் தடை போட்டு விட்டது. வாசக அன்பர்கள் மன்னிக்கவும்.

அந்த அற்ப காரியம் இங்கே இருக்கிறது:  பேனாக்கள் வண்ணத் தூரிகைகளா கில்லட்டின் கத்திகளா? – இந்தா பிடி சாபம்!
 

பின்குறிப்பு:

இன்று முதல் இந்த ப்ளாக்கின் பெயர் கள்ளிப் பெட்டி என்று மாற்றப்படுகிறது. ரசனை முதிர்ந்த வாசகர்கள் தயவு செய்து விலகிக் கொள்ளவும். உங்கள் உடல்நலனுக்கோ உயிருக்கோ இங்கு உத்தரவாதமில்லை.

Advertisements

4 thoughts on “ஒரு சிறு அற்பத்தனம்

 1. கள்ளிப்பெட்டி புத்தக நினைவுகளைக்கிளறிவிடுகிறது.
  ராமபாணம் என்கிற பூச்சி, அது நசியுண்டு விட்டுச்செல்லும் வெள்ளித்தடம்,பல்லிமுட்டைகள், தொடக்கமும் முடிவும் கிழிந்த பார்த்திபன்கனவு, பழையபுத்தகவாசனை….:)

  ரசனை முதிர்ந்த பாவனை,கற்பிதங்கள் நிறைந்த வாழ்வு.

  1. உங்க ஊரிலும் ராமபாணம் உண்டா?! 🙂 என் நண்பர் ஒருவர் இப்படிதான் ஏதோ குப்பையைக் கிளறப் போய் கழுத்தை ராமபாணம் உரசியதில் அலர்ஜியாகி பெரிய அளவில் புண்ணாகி விட்டது 🙂

 2. பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது தான் இந்தப் பெயரை கேள்விப்படுகிறேன். கள்ளிப்பெட்டியே என்று நீங்கள் ஒரு பதிவு எழுது அதை ஏனோ அழித்துவிட்டீர்கள். ஆனால் அது ரொம்ப நன்றாகவே இருந்தது.

  ராமபாணம் என்பது http://en.wikipedia.org/wiki/Silverfish – ஸில்வர் ஃபிஷ்ஷா?

  1. அதேதான் போலிருக்கிறது. அதற்கு ராமபாணம் என்று பெயர் வரக் காரணம் தெரியவில்லை. ஒரு வேளை ராமரின் அம்புகள் வெள்ளிபோல் மின்னுமோ என்னவோ…

   கள்ளிப்பெட்டி இதிகாசத்தை மீண்டும் வலையேற்றுகிறேன். எழுதியதை அற்பக் காரணங்களுக்காக ஏன் வீணாக்க வேண்டும்?

   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s