கள்ளிப்பெட்டி இதிகாசம்

அ!

வெயிலில் காய்ந்திருந்திருக்கிறது, மழையில் ஊறியிருந்திருக்கிறது- எப்போதும் என்னால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் இந்த விலைபோகாத கள்ளிப்பெட்டி இன்று தினசரிகளைத் தாங்கி நிற்கிறது. அதனுள் நான் வைத்து மறந்த புத்தகங்களைக் கரையான்கள் அரித்துத் தின்றிருக்கின்றன, கரப்பான் பூச்சிகள் கத்தரித்துப் போட்டிருக்கின்றன, ஏன், எலிகள்கூட தங்கள் வேலையைக் காட்டியிருக்கின்றன. ஆனாலும், நான் அதிலிருந்து புதிய புதையல்களைக் கண்டெடுத்திருக்கிறேன். என் ஆசானே, என்று நான் இன்று என் கள்ளிப் பெட்டியை வணங்குகிறேன்:

உன் இருட்டு அறையில் என் நாளைய வெளிச்சங்களைக் காத்து வைத்திருக்கிறாய்: உன் அற்ப உருவில் உன்னதங்கள் புதைந்து கிடக்கின்றன: எழுதுபவன் ஒவ்வொருவனுக்கும் நீயே ரட்சகன்- யார் மதிக்காவிட்டாலும் அவனுக்கு உன் மடியில் இடமுண்டு. கோபுரத்தின் உச்சியில் நிற்கும் கலசம்தான் கோபுரத்தைத் தாங்கி நிற்கிறது என்று நினைப்பதுபோல் எழுத்தின் சிகரங்களைத் தொட்டவர்கள் இன்று கொண்டாடப்பட்டாலும், உன்னுள் அடங்கியிருப்பவர்களே எழுத்தின் ஆதாரம்- உண்மையின் வெளிச்சம் உரியவர்களைச் சேரும்வரை அனைவரையும் காப்பாற்று: எங்கள் இன்றைய கொண்டாட்டம் இன்றோடு- நாளைய திறப்புகள் உன்னோடு. என் அலட்சியத்தால் நீ பாழ்போனாலும், கரையான், கரப்பான்பூச்சி, பெருச்சாளி போன்ற ஜந்துக்களிடமிருந்து என் புதையல்களைக் காப்பாற்று, என் தெய்வமே!

Advertisements

8 thoughts on “கள்ளிப்பெட்டி இதிகாசம்

 1. When people see some things as beautiful,
  other things become ugly.
  When people see some things as good,
  other things become bad.

  Being and non-being create each other.
  Difficult and easy support each other.
  Long and short define each other.
  High and low depend on each other.
  Before and after follow each other.
  ************************************************

  A good traveler has no fixed plans
  and is not intent upon arriving.
  A good artist lets his intuition
  lead him wherever it wants.
  A good scientist has freed himself of concepts
  and keeps his mind open to what is.

  Thus the Master is available to all people
  and doesn’t reject anyone.
  He is ready to use all situations
  and doesn’t waste anything.
  This is called embodying the light.

  —Lao Tsu–

  நன்றி சார். உங்கள் சிந்தனைத்தளம் ஆழமானது.

  1. நான் ஒரு காலத்தில் Arthur Waley மொழிபெயர்த்த இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். இப்போது, அவரது மொழிபெயர்ப்பைவிட அவர் அந்தப் புத்தகத்துக்கு எழுதியிருந்த முன்னுரையே முக்கியமானதாகத் தோன்றுகிறது.

   எனக்கு இவற்றுள் மிகவும் பிடித்த பாடல் இங்கிருக்கிறது:

   http://emptyseatzendo.blogspot.com/2011/02/affirming-faith-in-mind.html

   “In Emptiness these are not two,
   yet in each are contained all forms.
   Once coarse and fine are seen no more,
   then how can there be taking sides?”

   எனக்கு மிகவும் பிடித்த பாடல். முடிந்தால் படித்துப் பாருங்கள். 🙂

  1. என் வாசிப்பு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. 🙂

   என் ஒரு நண்பர், நல்ல எழுத்தில் உருவகங்கள், குறியீடுகள் மற்றும் சொற்படிமங்கள் தாமாகவே அமைத்து விடுகின்றன என்று எழுதினார். ஒரு சமூகத்தின் மொழியை எழுத்தில் பிரதிபலிக்கும்போது அவற்றோடிணைந்த உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது. அதை வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்பதில்லை. இயல்பிலேயே ஒரு நல்ல எழுத்தாளரின் மொழியுலகம் அப்படிப்பட்ட சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

   எனக்கு நீலம் என்பது ஒரு வண்ணமாகவும் விஷத்தின் குறியீடாகவும் தெரியும். ஆனால் அதை நீங்கள் எழுதும்போது அவை ஒரு சூழலின் நச்சுத்தன்மையை உணர்வுகளின் வண்ணமாக வெளிப்படுத்துகின்றன, இல்லையா?

   இது உரைநடைக்கும் கவிதைக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்று நினைக்கிறேன். நல்ல எழுத்து என்பது சொற்களோடு நின்றுவிடுவதில்லை- அதையும் தாண்டி தேடி உணர்வைதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது அது.

   எதற்கு சொல்கிறேன் என்றால், என் வாசிப்பு என்று எதையும் பெரிதாக சொல்ல முடியாது: நீங்கள் ஒரு கதை எழுதினால், அதற்கு நான் என்னாலான வகையில் தெரிவிக்கும் நன்றி அது என்ற அளவில் மட்டும் அது நின்று விட வேண்டுமென்று நினைக்கிறேன் (ஆங்கிலத்தில் tribute என்ற அழகான சொல் இருக்கிறது: இது கப்பத்தையும் குறிக்கும், இல்லையா?)

   வாசகன் தன் வாசிப்பை நெறிப்படுத்தி கொள்கிறான், விமரிசகன் தன் பரந்த வாசிப்பனுபவத்தால் ஒரு மொழியின் படைப்புகளின் வாசிப்பை நெறிபடுத்துக்கிறான்: அதற்கு அவனது இலக்கிய வரலாற்று உணர்வு துணை செய்கிறது. யாராயிருந்தாலும், ஒரு நதியை கால்வாய்களாகப் பிரிப்பவன், தன்னை மொழியின் போக்கைத் தீர்மானிப்பவனாக நினைத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்: அவன் அதை அழிக்க முடியும்; ஆனால் அதன் மூலவேர் வேறிடத்தில் இருப்பதால், அதன் வளர்ச்சிக்கு அவன் எதையும் செய்ய முடியாது.

   எந்த ஒரு வாசகனாலும், விமரிசகனாலும் உங்களைப் போன்ற ஒருவரை ஒரு அருமையான கதையை எழுத வைக்க முடியாது: அதைச் செய்யக்கூடியது வேறொரு நல்ல கதை மட்டுமே.

   அதைப் படிக்க முயற்சி செய்யும் அற்பர்கள் மட்டுமே வாசகர்களாகிய நாங்கள்.

   நன்றி.

 2. கள்ளிப்பெட்டி என்று நீங்கள் சொல்வது space.கள்ளிப்பலகை சூழ் வெளி. அதிலிருந்து உங்கள் அகவெளிக்குள் பெற்றுக்கொண்டது.
  outer space ஐ inner space ஓடு தொடர்பு படுத்துகிறீர்கள்.

  ஆழம்

  1. 🙂

   நீங்கள் இதை ஒரு நிமிஷக்கதையாக மட்டுமாவது எழுதுங்களேன், நான் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்கிறேன். 🙂

   நன்றி.,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s