விரகு

மருத்துவம் –  ஐவான் பெலோசொவ் 

ஆண்டன் பாவ்லோவிச் நெருப்பின் கணப்பின்முன் அமர்ந்திருந்தார், அதன் பிழம்புகளைப் பார்த்தபடி. அவர் தன் முன் இருந்த பிர்ச் மரக்கட்டையில் இருந்து ஒரு சிராயைப் பிய்த்து நெருப்பில் எறிந்தார், எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.

வெளியிலிருந்து அவரை அவரது பணிப்பெண் அழைத்தாள். அவர் சிறிது நேரம் எங்களை விட்டகன்றார். வெகு நேரம் கழித்து அவர் திரும்பினார், நாங்கள் ஏன் அவர் தாமதிக்க நேர்ந்தது என்று கேட்டதற்கு ஒரு சிறு தயக்கத்துக்குப்பின் அவர் பதிலளித்தார், “எனக்காக ஒரு மருத்துவப் பிணியாளர் காத்திருந்தார்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது, “இவ்வளவு தாமதமாகவா? அவர் ஒரு நண்பரா?”

செகாவ் பதிலளித்தார், “அப்படியெல்லாம் இல்லை. நான் அவளை என் வாழ்வில் முதல் முறையாகப் பார்க்கிறேன். விஷமாக இருக்கக்கூடிய ஒரு மருந்துக்கான பிரிஸ்க்ரிப்ஷன் வேண்டுமென்று கேட்டாள். பிரிஸ்க்ரிப்ஷன் இருந்தால்தான் அது மருந்துக் கடையில் கிடைக்கும்”

“நீங்கள் எழுதிக் கொடுக்கவில்லைதானே?”

ஆண்டன் பவ்லோவிச் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் கணப்பருகில் அமர்ந்திருந்தார். நெருப்பில் இன்னும் கொஞ்சம் விறகைச் சேர்த்தார். அதன் பின், ஒரு நீண்ட மௌனத்தைத் தொடர்ந்து, அவர் அமைதியான குரலில் பதில் அளித்தார், “இதுவே அவளுக்கு நல்லதாகவும் இருக்கலாம். நான் அவளது கண்களைப் பார்த்தேன், அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டேன். இங்கிருந்து சற்று தொலைவில் ஒரு பெரிய ஆறு ஓடுகிறது, அங்கே ஒரு கற்பாலமும் இருக்கிறது. அவள் அங்கிருந்து குதித்தால், சாவதற்குமுன் பெரும் துயர் அனுபவிப்பாள். விஷம் அவளுக்கு அதனினும் நன்மையாக இருக்கும்”

அவர் அமைதியாக இருந்தார். நாங்களும் அமைதியாக இருந்தோம். அதன்பின், பேச்சை மாற்றி, இலக்கியம் குறித்து விவாதிக்கலானோம்.

கதை இங்கே.

 

 

 

 

3 thoughts on “விரகு

    • அதுவும் செகாவ் எழுதியிருக்கக்கூடிய கதை போலவே இருக்கிறது, அந்தப் பெண்ணின் கண்களின் ஆழத்தில் கொந்தளித்தோடும் ஆற்றையும் கோர முடிவையும் பார்த்திருக்கிறாரே அவர்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s