அம்மா தாயே, போதுமம்மா உன் திருவிளையாடல்

இவர் இன்னார் என்ற அடையாளம் கிடைத்ததென்னவோ தமிழால்தான். ஆனால் வேற்றுமை என்று ஒன்று வந்துவிட்டால் தமிழ் டமீலாகி விடுகிறது. நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், யார் யார் நாம் எழுதுவதைப் படிக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அக்கறையேயில்லாமல் ஒரு இலக்கியவாதி மயிர் என்கிறார், ஒரு இலக்கியப்பிரதிவாதி மலம்தாங்கிகள் என்கிறார். இவர்களையும் ஒரு பொருட்டாகக் கருதி கடைக்கண் பாலித்தாயே, அம்மா தமிழ்த்தாயே, உன் பிள்ளைகள் பட்டது போதாது, அவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீயேனும் நல்லாயிருந்தா செரி.

(இதுதான் சாக்குன்னு கள்ளிப்பெட்டியை கொளுத்திட வேண்டியதுதான், முடியலடா சாமி!)