ஒன்றுமில்லாததற்கு ஒரு பதிவு….

வட்டங்களில் சிறந்த வட்டம் உங்கள் கூகுள் வட்டங்களில் இருக்கிறது. கூகுள் வட்டங்களில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் நாம் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டும் உரையாடலாம். டீக்கடை பெஞ்ச் அரட்டைக்கு சற்றும் சளைத்ததல்ல இணைய விவாதங்கள். ஆனால் டீக்கடை பெஞ்ச் விவாதங்கள் பதிவு செய்யப்பட்டு உலகுக்கு அறிவிக்கப்படுவதில்லை- ப்ளாக், டிவிட்டர், பஸ், பேஸ்புக் என்று நீங்கள் எங்கு எதை விவாதித்தாலும், நம்மைப் போல் இன்னொரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் எப்போது எதைத் தேடினாலும் நீங்கள் அது குறித்து எழுதியதை கூகுள் உடனே தேடிப் பிடித்துக் கொடுத்துவிடும். தப்பில்லை, ஆனால் டீக்கடை பெஞ்ச்சின் சிறப்பே மனசுக்குத் தோன்றியதையெல்லாம் சர்வ சுதந்திரத்துடன் பேச முடிகிறது என்பதுதானே?

இன்றைக்கான பதிவு எழுத வேண்டுமே என்ற கடமையை நிறைவேற்றும் நிர்பந்தத்தோடு அஜீரண கண அவஸ்தையும் சேர்ந்து கொண்ட ஒரு துரதிருஷ்டப் பொழுதில் சும்மா இருக்க முடியாமல் நீங்கள் பாட்டுக்கு ஒன்றாம் வகுப்பு மிஸ் சுஜாதாவைப் பற்றி எதையோ சொல்லப் போய் அது வரலாற்றுப் பதிவாகி, லண்டனில் இருக்கும் வரதாச்சாரி, “ஐயா, சுஜாதா மிஸ்ஸின் கணக்குப் பாடங்களை என்னால் மறக்க முடியாது- அவரது கணக்கு பாடங்கள் எனக்கு அளித்த ஆர்வத்தால்தான் இன்று நான் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று நல்ல வேலையில் மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். என் அறிவுக் கண்களைத் திறந்த ஆசான் அவர். உயர்கல்லூரியில் மொக்கை போட்ட பேராசிரியர்கள் பலரைவிட பன்மடங்கு உயர்ந்த அவரை நீங்கள் இப்படி மட்டம் தட்டுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ரிச்சர்ட் ஃபீன்மானின் ஹை ஸ்கூல் ஆசிரியை தன் கணித க்ளப்பில் பல பல்கலைக் கழகங்களைவிட அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு வென்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார் என்ற உண்மையை தங்களால் எப்படி மறக்க முடிந்தது?” என்று அழாக்குறையாக இரண்டு ஆண்டுகள் கழித்து பின்னூட்டம் போடக் கூடும். அஜீரணத் தொல்லையெல்லாம் ஸ்வஸ்தமான நிலையில் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது?

எனவே இணையத்தில் எதை எழுதினாலும் உலகளாவிய தமிழர்கள் அனைவரையும் மனதில் வைத்த்துக்கொண்டே அதைச் செய்ய வேண்டியிருக்கிறது- டீக்கடை பெஞ்சில் நீங்கள் பேசுகிற விஷயம் இப்படி உலக அளவில் விவாதிக்கப்படக் கூடும் என்ற நினைவிருந்தால், பன் உங்கள் தொண்டையில் சிக்கிக் கொண்டு பேச முடியாமல் செய்யுமா செய்யாதா?

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க கூகுலாண்டவர் கட்டித் தந்திருக்கும் பதுங்கு குழிகளே கூகுள் வட்டங்கள். யார் காதில் என்ன விழுந்து அவர்கள் சண்டைக்கு வந்து தொலைவார்களோ என்று பயப்படாமல் நாம் தேர்ந்தெடுத்த சிலருடன் சர்வ சுதந்திரத்துடன் விவாதிக்கலாம்.

அப்புறம், அதில் ஏதாவது பதிவு தேறுகிறதென்றால், அதை ப்ளாகில் போட்டு முப்பது ஹிட் பார்க்கலாம், இதோ இந்த மாதிரி.

———————

நண்பர் ஒருவர் தன் பேஸ்புக்கில் அசோகமித்திரனின் பம்பாய் 1944! என்ற தொடர்கதைக்கு சுட்டி தந்து அதிலிருந்த “ஒரு மைல் தூரத்தில் ஒரு பார்ஸிக்காரர் கூரையைப் பொத்துக் கொண்டு ஒரு செங்கல் விழுந்தது. முதல் மாடியில் சீமை ஓட்டு வீடு. செங்கல்லைப் பரிசோதித்ததில் அது ஒரு தங்கப் பாளம். ….. சுமார் 70 கிலோ……” என்ற வரிகளை மேற்கோள் காட்டி சிரித்திருந்தார்.

முதல் வாசிப்பில் அபத்தமாகதான் இருந்தது- கதையில் ஒருவர் இன்னொருத்தரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு எழுபது கிலோ எடையுள்ள தங்கத்தை போர்வையில் போர்த்து தூக்கிக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார்!

அப்புறம் மறுபடி வாசித்துப் பார்த்தேன்- இதுதான் பதில்:

என்னைக் கேட்டால் அசொகமித்திரனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் அப்படின்னு சொல்லுவேன்.

நீங்க சொல்ற வாக்கியங்களை அசோகமித்திரன் ironicalஆ எழுதியிருக்கார். இப்பக் கூட பம்பாய் குண்டு வெடிப்புல கிலோ கணக்கான வைரங்களை அங்க இருந்த வியாபாரிகள் சட்டைப் பையில் போட்டுச் சென்றதாகவும், குண்டு வெடிப்பில் அவை தெருவெங்கும் சிதறியதாகவும் செய்திகளில் படித்திருப்பீர்கள், இல்லியா? அதுல கொஞ்சம் கூடவே மிகைப்படுத்தல் இருக்கும்.

யுத்த சமயத்துல அந்த ஊர்ல எப்படி பேசிக்கிட்டாங்கன்னு எழுதறார் அமி. இந்த தங்கக் கட்டி ஒரு urban myth.

இதுக்கு முந்தைய பத்தியைப் படிச்சுப் பாருங்களேன்-

“புதுப்புதுச் செய்திகள் வெடி விபத்து பற்றி வந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இவ்வளவு ஆட்சேதமும் பொருட்சேதமும் புத்தகத்தில் கூட நடக்கவில்லை என்று கூறினார்கள். இரு ஜெர்மன் நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் ‘கம்பளி குண்டு வீச்சு’ நடத்திய போதுதான் இப்படிச் சேதம் மற்றும் நாசம் நேர்ந்தது என்று சொன்னார்கள். இவ்வளவு சேதத்திலும் சாலைகள் பழுதடையவில்லை.”

அவர் சொல்ற அந்த ரெண்டு ஜெர்மன் நகரங்களும் இவைதான்-

http://en.wikipedia.org/wiki/Bombing_of_Dresden_in_World_War_II
http://en.wikipedia.org/wiki/Bombing_of_Hamburg_in_World_War_II

உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இதுல dresden மேல குண்டு போட்டதுல செத்தவங்க மற்றும் பொருட்சேதம் ஜப்பான்ல அணுகுண்டு வீசி ஏற்பட்டதைவிட அதிகம்.

இப்படிப்பட்ட சேதம்தான் மும்பையில் நடந்ததா சொல்லிக்கறாங்க அந்த ஊர்க்காரங்க. அந்த கடைசி வரியைப் பாருங்க, ” இவ்வளவு சேதத்திலும் சாலைகள் பழுதடையவில்லை.”

:))

அசோகமித்திரன் பம்பாய் மக்களின் மிகைப்படுத்தப்பட்ட பீதி, மற்றும் அச்சம், கூடவே அது பற்றிய பெருமை, வியப்பு- இதையெல்லாம் வெளிப்படையா சொல்லாம, இந்த மாதிரி free indirect speechல சொல்லிக்கிட்டே போறார்.

நான்கே பத்திகள்தான், அதில war hysteria, அது சம்பந்தப்பட்ட irrational beliefs எல்லாத்தையும் கொண்டு வந்துட்டார்.

அதுக்கப்புறம் பாருங்க, “பெரும் சூட்டுடன் வெடி விபத்து நிகழ்ந்திருந்ததால் சிதறி விழுந்த உடல்களும் உடல் உறுப்புகளும் கருகி எங்கெங்கோ விழுந்திருந்தன.” அப்படின்னு ஆரம்பிச்சு நம்பக்கூடிய விஷயங்களை எழுதறார்.

எனக்கு அசோகமித்திரனைப் படிக்கப் படிக்க வியப்பா இருக்கு. எழுதறதுனா எவ்வளவோ எழுதலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s