சோதனைப் பதிவு

என்ன சோதனையோ தெரியவில்லை எவ்வளவு முயன்றும் பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. ஏதாவது ஒரு இலக்கியவாதியின் சாபமாக இருக்குமா என்று சந்தேகம். செட்டிங்க்ஸில் எல்லாம் சரியாக இருக்கிறது, ஆனால் பின்னூட்டமிட வழி கிடைப்பதாயில்லை. கடைசி முயற்சியாய் உச்சி முதல் உள்ளங்கால் வரை செக் செய்து விட்டு இந்த பதிவை இடுகிறேன். இதற்கும் சரி வராவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.

Advertisements

10 thoughts on “சோதனைப் பதிவு

 1. அட கள்ளி! திறக்க முடியவில்லையா?
  பண்டோரா பெட்டியோ?
  விமானத்தில் உள்ள கறுப்பு பெட்டியோ?
  மனப் பூட்டைத் திறக்கும் சாவி தேவையோ?

 2. கிண்டல்?

  அப்புறம் தொடர்ந்து எழுதறதை நிறுத்திட்டீங்களே?

  மணிமேகலையில் கணிதம் மட்டுமாவது முழுசா எழுதி முடிங்க வீரா, முனைவர் பட்டம் வாங்க நினைக்க ஏதாவது ஒரு மாணவருக்கு உதவும் 🙂

  தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

 3. பின்னூட்டப்பெட்டி பத்மநாதசாமி கோயில் பாதாள அறைக்கதவு போல மூடப்பட்டு முன்னூறுவருஷம் கழித்து திறக்கப்படுமோ என்று நினைத்துவிட்டேன்.

  உங்கள் படைப்புகள் வெளிவருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.நிமிஷக்கதைகள் மணித்தியாலக்கதைகளாக வளர வாழ்த்துக்கள். பின்னர் வருஷங்கள் கழிந்தாலும் பெறுமதி மிக்க பொக்கிஷமாகட்டும்

  1. வாழ்த்துகளுக்கு நன்றி.

   இங்கே வர்ட்பிரஸில் பின்னூட்டப் பெட்டிகளுக்கு மூன்று தாழ்ப்பாள்கள் இருக்கின்றன. மூன்றையும் தனித்தனியாகவே திறக்க வேண்டும். எங்கே என்ன இருக்கிறது என்று தேடிக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டேன்.

   உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதும்போது பேச்சை வளர்த்தால் சேதம் அதிகமாகும் என்று பதிவு போடுவதோடு நிறுத்திக் கொள்ள நினைத்தேன்- இனி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பதிவிடுகையைத் தவிர்க்க வேண்டும் 🙂

   பார்ப்போம், முயற்சி செய்தால் முடியாமலா போய் விடும்?

   நன்றி.

   நீங்கள் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களே? நீங்களும் நிமிஷக் கதைகள் எழுதலாமே? இப்போதும் அந்த கருங்கூந்தல் அணிந்த தலை நரைத்த அம்மணி என் நினைவில் தினமும் நிழலாடுகிறாள். நான் ஏன் சிரிக்கிறேன் என்று என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

 4. மூழ்கிக்கொண்டிருக்கிறவனுக்கு மூச்சே முக்கியம் போல எனக்கு தொழில் ஆகிக்கொண்டிருக்கிறது.
  எழுத முயற்சிக்கிறேன் உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

  நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியதில் தவறேதும் இல்லையே.உங்கள் கருத்தைச்சொல்லுவதுதானே உங்கள் தனித்தன்மை.அதுதான் எங்கள் போன்ற உங்கள் வாசகர்களுக்குத்தேவை.

  அண்மையில் ஒரு ஆங்கிலப்படத்தின் சில காட்சிகள் பார்த்தேன். semibiographical.வளரும் இசை விமர்சகன் பற்றியது. அவனுக்கு வழங்கப்படும் அறிவுரை ‘ be honest and unmerciful”.

  இயற்கையும் மிக நேர்மையானது. இரக்கமில்லாதது.

  இங்க்ய் மனித முரண்பாடுகள் எப்படி வருகின்றன என்றால் தனது துறைசார்ந்த விமர்சனத்தில் நேர்மையையும் இரக்கமின்மையையும் காட்டுகிற ஒரு விமரிசகர் , வாழ்வின் மற்றைய பக்கங்களில் பக்கச்சார்பையும் கயமையும் காட்டமுடியும் என்பதுதான்.அதை ஏற்றுக்கொள்வது சிரமமாயிருந்தாலும் அது ‘’மனிதர்களில் இயற்கை”.

  பரீட்சைகளில் ஒரு புள்ளியால் பாஸைத்தவறவிடுபவர்கள் அவர்களுக்கு கடும் முயற்சியும் மிகப்பரிதாபமான குடும்பப்பின்ணணியும் இருந்தாலும் நேர்மையானதும் இரக்கமற்றதுமான தேர்வுமுறை தேர்ச்சியடைய அனுமதிப்பதில்லை. பரிதாபப்பட்டாலும் இந்த அமைப்பை ஏற்றுக்கொள்கிறோம்.

  இப்படி பல முரண்பாடுகள்.

  பொதுவாகப்பார்க்கபோனால் இலக்கியக்கொள்கைகள் கோட்பாடுகள் என்பதை விட தன் தனித்துவம் காப்பதில்தான் ஒரு போராட்டம் நடக்கிறது என்பது புரியும்.ஒரு கோட்பாடு ஒரு கொள்கையூடாக அது நடக்கிறது.
  அது ‘’மனிதர்களில் இயற்கை”.
  நீங்கள் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல ஒரு காலத்துக்கு தேவையானதை அது முன்னிறுத்துகிறது.

  இது இலக்கியத்தில் மாத்திரமல்ல. உளவியல் மருத்துவத்தில் சிக்மண்ட் பிராய்ட் ஒரு காலகட்டத்தில் பிரபலமாயிருந்தார் அவரது கருத்துக்கள் கலைத்துறையிலும் இலக்கியத்திலும் கூட செல்வாக்குச்செலுத்தின. பொதுமக்கள் அவரை அறிந்திருந்தனர்.அவரது சமகாலத்தினாரன emil Kraeplin பெரிதாக அறியப்படவில்லை அவரது கோட்பாடுகள் கவர்ச்சியற்றவை ஆனால் உண்மையானவை. அதனால் அவர் இன்றைய நவீனஉளவியல்மருத்துவத்தின் மிக முக்கியமானவராக போற்றப்படுகிறார்.
  ( சுவையான கட்டுரை படித்துப்பாருங்கள்:Sigmund Freud and Emil Kraepelin: 150 Years Old
  http://pn.psychiatryonline.org/content/41/8/31.full)

  காலம் தோற்றுவிக்கும் மாயைகள் இவை.வளர்ச்சி என்றும் சொல்லலாம்.

  அதுவும் இலக்கியத்தில் தனித்துவத்தை மின்னிறுத்துவது மிக உக்கிரமாக நடக்கிறது.நீங்களும் அதைத்தான் செய்யவேண்டும் இல்லையா? இல்லாவிட்டால் வாசகர்கள் என்ன வித்தியாசமான அனுபவத்தை பெறப்போகிறார்கள் உங்களிடம் இருந்து?
  .
  உங்கள் நிமிஷக்கதைகள் உங்கள் மனந்திறந்த கருத்துக்களைப்படிக்கின்ற போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்கள் விசாலமான வாசிப்பனுபவங்களிலிருந்தும் வாழ்பனுபவங்களிலிருந்தும் உங்கள் இதயம் உணர்ந்து பெற்றுக்கொண்டவற்றை உங்கள் உலகத்தை உங்கள் தனித்துவப்பார்வையைத்தாருங்கள்.
  காத்திருக்கிறோம்.

  1. Kraepelin குறித்த அறிமுகத்துக்கு நன்றி. நான் என் நண்பர் ஒருவருடன் இங்கே பிரபலமாக இருக்கும் ஒரு மருத்துவரிடம் சென்றிருந்தேன். அவர் தன் அச்சத்தைப் பற்றிப் பேசிவிட்டு இந்த அச்சத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, என்று துவங்கினார். அவரைக் கையமர்த்திவிட்டு மருத்துவர், “இந்தக் கதையை எல்லாம் தாண்டி வந்து விட்டோம்- இப்போது எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரைதான். எல்லாம் மூளையின் ரசாயனத்தில் இருக்கிறது” என்று சொல்லி, மருந்து சீட்டை எழுதத் துவங்கி விட்டார்! அது வேலை செய்கிறது என்பது சந்தோஷமான விஷயம்தானே? இப்போது Kraepelinஇன் கை ஓங்கியிருப்பது நல்ல செய்தி: என் மகனின் நிலை குறித்து நான் குற்ற உணர்ச்சியில் கஷ்டப்பட வேண்டாம், அவனும் தன் தந்தையைத் தான் தன்னையும் அறியாமல் கொல்ல நினைத்தது குறித்து வருந்த வேண்டாம்….

   வாசிப்பனுபவம் வாழ்வனுபவம் என்று ஏதேதோ சொல்கிறீர்கள், என்னைத் தெரிந்தவர்கள் சிரிப்பதை என்னால் இங்கிருந்தே இப்போதே கேட்க நினைக்கிறது: நான் ஒரு கிணற்றுத் தவளை என்பதுதான் உண்மை 🙂

   —–

   கறாராக இருந்து என்ன கட்டிக் கொண்டு போகப் போகிறோம்? ஒரு தலைமுறையின் குப்பை அடுத்த தலைமுறையின் செல்வமாக இருக்கிறது: ஓவிய உலகில் இதைப் பார்க்கிறோம், ஆங்கில இலக்கியத்திலும் டி ஹெச் லாரன்ஸ் ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் கதை நமக்குத் தெரியும்…

   நமது தந்தையோ சகோதரனோ தவறு செய்தால் நாம் எப்படி அதை அணுகுவோமோ அதைப் போல் விமரிசகனும் தோல்வியடைந்த ஒரு ஆக்கத்தை அணுகினால் நன்றாக இருக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லை. நீங்கள் சொன்னதுதான் காரணமாக இருக்கும் என்று இப்பொது தோன்றுகிறது.

   ——–

   ஒரு நண்பர் விமரிசனம் செய்தால் கோபப்படுகிறீர்களே, நீங்கள்தான் விமரிசனம் செய்து பாருங்கள் என்று சொன்னார். முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. சரி துவங்கி விட்டோமே என்று நிமிஷக்கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன், இதுதான் உண்மை.

   இதை நீங்கள் விரும்புவது குறித்து சந்தோஷம். ஒரு ஐந்து நிமிடம் என்னால் உங்களுக்குப் பொழுது போனாலும் எனக்கு மகிழ்ச்சியே.

   உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.

   நான் சொன்னேன் என்று எழுத வேண்டாம், காலம் வரும். அப்போது எழுதாமல் இருக்க முடியாது, இல்லையா?

   மீண்டும் என் நன்றிகள்.

 5. நன்றி நட்பாஸ்.

  ஒவ்வொருவரும் ஒவ்வொருகிணற்றில் வாழுகிறோம்.உங்கள் கிணற்றைப்பற்றி நீங்கள் எழுதுங்கள் என் கிணற்றைப்பற்றி நான் எழுதுகிறேன்.

  உங்கள் தூண்டுதலுக்கு மிக்கநன்றி. 🙂

  1. இப்போதுதான் உங்கள் கிணற்றிலிருந்து வருகிறேன். அது கிணறு இல்லை, உலகம்.

   ஒரு கிணற்றுக்குள் உலகத்தையே நிறைத்து மாயம் செய்து விட்டீர்கள். அருமையான கதை.

   மிக்க நன்றி.

   எனது தூண்டுதல் இந்தக் கதையை எழுதக் காரணமாக இருந்தால் அதற்காக பெருமைப் படுகிறேன்.

   நன்றி.

 6. சார்

  எனது ஒன்று விட்ட அக்காவுக்கு ஒரு பையன் இருந்தான்.எனக்கும்அவனுக்கும் ஒன்பது வயது வித்தியாசம். நான் நிறையக்கதைகள் சொல்லியிருக்கிறேன்.அவனும் நானும் சேர்ந்து நடிக்கவும் செய்வோம்.இந்தக்கதை ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்குச்சொன்னது.அப்போது அது நகைச்சுவையாக சொன்னது.
  அவனுக்கு 17 வயதில் ஒரு கல்விச்சுற்றுலாவில் அவனோடு சேர்த்து நான்குபேர் கடலில் மூழ்கி இறந்துபோய்விட்டார்கள்.
  அதற்குப்பிறகும் இந்தக்கதையை மற்ற அக்கா பிள்ளைகளுக்குச்சொல்லியிருக்கிறேன்.
  உங்கள் கிணற்றுத்தவளை இந்தக்கதையைக்கிளப்பியது.நிமிஷத்தில் எழுதலாம் என்று நினைத்தேன்.
  எழுதத்தொடங்கி இப்படிப்போய் சோகமாய் முடிந்துவிட்டது

  நன்றி

  1. இப்போதுதான் அந்த சோக முடிவு எவ்வளவு பொருத்தமான ஒன்று என்று புரிகிறது. கதை அப்படி முடிவதுதான் சரியாக இருக்கும்.

   தங்கள் சோக நினைவுகளைக் கிளறியமைக்கு என் வருத்தங்கள்.

   கதை கதை என்று சொல்லுகிறோம், அதற்குப் பின்னால் எத்தனை கதைகள் இருக்கின்றன என்பது யாருக்குத் தெரியும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s