மயக்கமா கலக்கமா…

(இந்த நிமிஷக்கதையை எழுதியவர் விநட்டு. அன்னாருக்கு என் நன்றிகள்)

நானும் இந்தச் சோகத்தை பற்றி என்னென்னவோ யோசித்திருக்கிறேன். மனிதனுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறது போலும். சமீபகாலங்களில் வந்த ஒன்றிரண்டு படங்கள் இறுதிவரை சாதாரண படங்களே. ஆனால் கடைசியில் நெஞ்சை அதிரவைக்கும் படி எதையாவது காட்சிப்படுத்தி மிக நேர்த்தியான படம் என்று பெயர் வாங்கிவிட்டார்கள். சிலபல இலக்கியப் படைப்புகளும் இப்படித்தான் பெயர் பெறுகிறதோ?

ஒரு விமர்சகர் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிறுகதைகளைப் பற்றி எழுதும்போது, அவரின் கதைகள் எதுவுமே ‘அறைவது போல் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். மனிதர்களுக்கு சோகம் வேண்டியிருக்கிறது. கற்பனை அளவிலாவது வேண்டியிருக்கிறது.

சோகமான இருப்பது எனக்குமேகூட பிடித்துதான் இருக்கிறது. சில நேரம் என்னைப் பற்றிய கவலை. வேறு சில நேரம் மற்றவர்களைப் பற்றிய கவலை. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தால் அல்லது சத்தம் போட்டு பாட்டு பாடத் தோன்றினால், ‘என்ன இது கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறோமே?’ என்று மனசு பதறுகிறது. 🙂 😦

Advertisements

16 thoughts on “மயக்கமா கலக்கமா…

    1. உண்மைதான் சார், மூன்று பொருளும் பொருந்தும்.

      இப்போது எனக்கு ஒரு கவலை- நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

      இந்த ப்ளாகை எந்த திசையில் கொண்டு போகலாம்? எனக்கு கைக்குக் கிடைத்த புத்தகங்களை வசித்து தினம் ஒன்று என்று அவற்றைப் பற்றி எழுதும் பக்குவம் இல்லை. பேசாமல் அசோகமித்திரன் புனைவுகளை ஒவ்வொன்றாகப் படிக்கலாமா?

      அல்லது வேறென்ன செய்யலாம்?

      நன்றி. :))

        1. ஐயோ, அதுவா! :))

          சில விஷயங்கள் சீரியசாகத் துவங்கி விளையாட்டாய்ப் போய்விடுகின்றன…… சில விஷயங்கள் விளையாட்டாய்த் துவங்கி சீரியசாகி விடுகின்றன… அந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

          நீங்கள் சொல்வது போலவே மெய்யையும் பொய்யையும் கலந்து பேசுவதைத் தொடர முடியுமா என்று முயற்சிக்கிறேன். நன்றி.

    1. ஓர் ஆசிரியர் அதைப் புனைகதை என்று சொல்லிக் கொண்டாரென்றால் அதைப் பிறகு தன்வரலாறாகக் கொள்ளக்கூடாது. தன் வரலாற்று அம்சம் பெரும்பாலும் எல்லாப் புனைகதைகளிலும் இருக்கும்.” என்று தமிழ் மற்றும் இந்திய மற்றும் உலக இலக்கியங்களையும் காவியங்களையும் நுட்பமாக அவதானிக்கும் நம் மதிப்புகுரிய திரு ஜெயமோகன் அவர்கள் கூறியிருப்பதைத் தங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.

      இது புனைவுதான் என்று தங்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்புங்க, சார்.

      நன்றி.

      1. boss @nan_tri போலவே ஒரு கமெண்ட், நினைச்சேன், பாத்த உங்க வலைப்பூ தான். உங்களக்கு நினைவு இருந்தால்,இலக்கியம் எது என்பதற்கு ட்விட்டரில் விளக்கம் குடுத்தீங்களே @naganadhiக்கு
        நான் தான் ஹ்ம்ம்

              1. நான் எது சொன்னாலும் அது தவறாக போய் விடுகிறது
                மன்னிக்கவும். அடுத்த முறை கமெண்ட் செய்யும் போது பல முறை யோசித்து செய்கிறேன். நன்றி

                1. உங்கள் மனதை ஆழமாகப் புண்படுத்தி விட்டேன் போலிருக்கிறது, தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் விளையாட்டாகப் பேசி விட்டேன். இனி நானும் யோசித்துப் பேசுகிறேன்.

                  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s