நிலை

அந்த ஸ்கூட்டர் ஷெட்டில் ஒரு இரு சக்கர வாகனத்தை வைப்பது போக இன்னும் கொஞ்சம் இடம் இருந்தது. அங்கே அவன் ஒரு படுக்கையைச் சுருட்டி ஒரு மூலையில் ஒரு முக்காலி போட்டு அதன் மேல் அதை நிறுத்தி வைத்திருந்தான். அவன் அதை அங்கே கொண்டு போய் வைத்ததற்கான காரணங்கள் இப்போது இல்லை; ஆனால் இடம் பெயர்ந்தவை காரணம் இன்றி நிலைக்குத் திரும்புவதில்லை என்ற ஒரு நியதி இருக்கிறது.

வழக்கம் போல அன்று இரவும் தன் வாகனத்தை அந்த அறையில் வைத்துப் பூட்ட அதன் கதவைத் திறந்திருந்தான். மெல்ல ஒரு பூனை சத்தமில்லாமல் அந்தப் படுக்கையில் இருந்து எழுந்து அதையொட்டி இருந்த சிறு சன்னல் வழியாக வெளியே போனதை ஷெட்டின் அரையிருட்டில் கவனித்தான். சரி, ஏதோ சும்மா இருக்கிற மெத்தையில் சுகத்துக்கு படுத்துக் கொள்கிறது பூனை என்று விட்டு விட்டான்.

இந்த மாதிரி இரவு அவன் கதவைத் திறப்பதும் அந்தப் பூனை சத்தமில்லாமல் படுக்கையில் இருந்து எழுந்து செல்வதும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருக்கும். அவனுக்குத் தன் படுக்கையை தான் ஒரு பூனைக்குப் பயன்படுத்தக் கொடுத்ததை நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது.

ஆனால் பாருங்கள், ஒரு நாள் காலை ஷெட்டின் பூட்டி வைத்த கதவைத் திறந்தால் அங்கு தன் ஆக்டிவாவை ஒட்டி அதன் இடப்புறத்தில் மிகச் சிறிய பூனைக் குட்டிகள் இரண்டு ஒன்றன்மீதொன்று படுத்துக் கொண்டிருகின்றன. அவற்றுக்குப் பின்னால் அம்மா பூனை தன் கண்கள் பச்சையாய் ஒளிர நின்றுக் கொண்டிருகிறது.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதவை சாத்திவிட்டு யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் கதவைத் திரும்பத் திறக்கும்போது பூனையும் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.

இம்முறை அது தன் குட்டிகளைத் தாண்டி முன்வந்து நின்றுக் கொண்டிருந்தது. அதே கோபப் பச்சை கண்கள். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கதவைப் பாதி திறந்த நிலையில் நின்றுக் கொண்டிருந்தபோது அந்த அம்மாப் பூனை அவன் மேல் பாய்ந்தது.

அச்சமும் அவசரமுமாகக் கதவை அறைந்து சாத்தினான் அவன். பூனை தன் முதுகில் அடி வாங்கிக் கொண்டு அவனைத் தாண்டி ஓடியது. அந்த இரு பூனைக் குட்டிகளும் கண்கள் மூடிய நிலையில் அங்கேயே இருந்த இடத்தில் இருந்தன. அவன் அவற்றின்மேல் படாமல் ஜாக்கிரதையாக தன் ஆக்டிவாவை வெளியே எடுத்தான். அம்மா பூனை கொஞ்சம் தொலைவில் நின்றுக் கொண்டிருந்தது. அதே கோபப் பச்சை.

அதை அடுத்த சில இரவுகள் ஆக்டிவா அவனது வீட்டு வாசலில்தான் நின்றது.

Advertisements

11 thoughts on “நிலை

  1. மொங்கான் போடுவது என்றால் என்ன என்று இப்படி கவலைப்பட வைத்து விட்டீர்களே?

   ஒரு இடத்தில், “மொங்கான் போடுதல் (பள்ளத்தை நிரப்புதல்)” என்று சொல்கிறார்கள்.

   இன்னொரு இடத்தில், ” சும்மா படுத்திருக்கிறவன கல்ல கொண்டு அடிக்கிறதுல ஆரம்பிச்சி, ஆட்ட மொங்கான் பொட்டு சுட்டு தின்ற வரைக்கும் இவன் பண்ற அழிச்சாட்டியம் கணக்குல அடங்காது,” என்று எழுதுகிறார்கள்.

   வேறு இடத்தில், “அடுத்த கணம், அத்திவாரத்திற்கு மொங்கான் போட்டது போல ஒரு சப்பாத்துக்கால் அடி வயிற்றில் ஓங்கி பொதக்கென மிதித்து….
   “ஐயோ !”, என்று அலறினான்..” என்று எழுதுகிறார்கள்.

   நான் எந்த மொங்கான் போட்டேனோ? திட்டுறீங்களா?

   1. எங்கள் வீடுகளில் கூட குழந்தைகளைச் செல்லமாக ”யே மொங்கான்” என்பார்கள். நானும் கூட சில நேரங்களில் என் மகனை அழைக்கிறேனோ என்னவோ. ஆனால் அர்த்தம் பற்றி இதுவரை யோசித்ததில்லை.

    நான் யோசித்து “மொங்கான்” என்றால் “பம்க்கா” போல ‘ச்சப்பி”யாக இருக்கும் பொதுக்கா’க் குழந்தைகள் :)))))))))))

      1. என்ன கொடுமை சார் இது! இந்தக் கதைக்கு ஏன் நிலைன்னு தலைப்பு கொடுத்திருக்கு? அதுல ஏன் பூனை வருது? அந்தப் பூனை ஏன் குட்டி போடுது? ஆக்டிவா ஏன் வெளியில நிக்குது? இந்தப் பதிவோட உரலில ஏன் postureனு சொல்லியிருக்கு? உலக வரலாற்றுலயே இத்தனைக் குறியீடோட நிலைன்னு ஒரு தமிழ்க் கதையை இதுவரைக்கும் யாரும் எழுதினது கிடையாது. மனிதத்தின், உயிர்களின் நிலை கொள்ளாத் தவிப்பை எழுதினா மொங்கான் போட்டுகிட்டே இருங்க சார்னு ரெண்டு பேரும் ஸ்மைலி போடறீங்களே, உங்களுக்கெல்லாம் கமெண்ட் போட காசு குடுத்து என்ன பிரயோசனம்? 😦

 1. சாரி சார்

  மொங்கான் போடச்சொல்லிவிட்டு் காணாமல் போனது என் தப்பு.

  அத்திவாரக்கட்டுக்குள் மண்ணைபோட்டு மொங்கு மொங்கு என்று மொங்குவார்கள்.அதாவது ஒரு கனமான இரும்புக்குற்றியால் தரையைக் குற்றி இறுக்குவார்கள் தளம் நன்றாய் இறுகி வரும்.இறுகிய பின்பு கொங்கிறீற் கரைத்து ஊற்றுவார்கள்.

  வசனங்களைக் கொஞ்சம் இறுக்கலாம் போலத்தோன்றியது எனக்கு.

  1. ரொம்ப வளவளவென்று இருக்கிறதோ? இனி இறுக்கி எழுதுகிறேன், நான் ஒரு சரியான கல்லுளி மொங்கான், நீங்க சொல்றதை சரியா புரிஞ்சுக்காம உளறிட்டேன். மன்னிச்சுக்குங்க.

   தங்கள் வழிகாட்டுதலுக்கு உளமார்ந்த நன்றிகள்.

   1. உடனே ‘’ரொம்ப” என்கிற அளவுக்கு போய்விட்டீர்கள். வள வளா என்று உங்களை நினைக்கவைத்துவிட்டேனென்றால் அது படு பாதகம்…அநியாயம்.

    ஓரிரு காரட் குறைகிறது என்று சொல்லலாம்.வாழ்க்கையின் எளியவிஷயங்களில் மறைந்திருக்கிற அர்த்தங்களை உணரவைப்பது சிரமமானது…கொண்டுவருகிறீர்கள்.

    உங்களுக்குச்சொல்லவேண்டுமா.உலக இலக்கியகாரர்……அசோகமித்திலன் ஆகுகிறீர்கள்

    1. ஐயோ! இது என்ன அபாண்டம்!

     தங்கள் அனுமதியில்லாமல் தங்கள் பின்னூட்டத்தில் ஒரு சிறு மாற்றம் செய்திருக்கிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்.

     நீங்கள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை நினைவில் வைத்துக் கொள்கிறேன்… அவற்றை நான் மிகவும் முக்கியமாக நினைக்கிறேன். தொடர்ந்து இடித்துரைக்கவும். 🙂

     நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s