(பலவீனமான இதயமுள்ளவர்களும் மருத்துவர்களும் படிக்கக்கூடாத இந்த மர்மக் கதையை எழுதியவர் நம் அன்புக்குரிய நண்பர் திரு @rsgiri அவர்கள். அன்பர்கள் தங்கள் பாராட்டுகளை நண்பரிடம் டிவிட்டரில் பகிர்ந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். நன்றி).
இவனை எனக்குத் தெரியும். சென்ற வாரம் வந்து தலைவலிக்கு மருந்து வாங்கிப் போனவன். அப்போதே ஏதோ பூடகமாகப் பேசினான், கொஞ்சம் ஏடாகூடமாகக் கூட.
எனக்கும் அன்று தலைவலி இருந்ததால் அவன் பேச்சில் ரொம்பவெல்லாம் சிரத்தை காட்டாமல் வழக்கமான பாரசிட்டமால் மூன்று நாட்களுக்கு எழுதித் தந்து, “இதை சாப்டுங்க, சரியாகிடும். மேலும் பிரச்னைன்னா மட்டும் வாங்க போதும்”, என்று அனுப்பினேன்.
இப்போது மறுபடி வந்து நிற்கிறான்.
“எப்டி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் டாக்டர்?”
“அப்போ எனக்கு வேலையில்லை, போயிட்டு வாங்க”, வெடித்துச் சிரித்த என் சிரிப்பில் அவன் கலந்து கொள்வான் எனப் பார்த்தால், அசுவாரசியமாக, “சேந்த” என ஒரு பார்வை பார்த்தான்.
“தலைவலி திரும்ப வந்துடுச்சி டாக்டர்”
“இப்போதான் நல்லா இருக்கேன்னு சொன்னீங்க”
“ஆமாம் டாக்டர். நான் நல்லாத்தான் இருக்கேன். ஆனா தலைவலி திரும்பி வந்துடிச்சி”
“கொழப்பறீங்களே”
“போன வாரம் நீங்க தந்த மாத்திரையை போட்டுக்கிட்ட உடனே என் பொஞ்சாதி ஊருக்குப் போனா. ஆனா, இந்த வாரம் திரும்பி வந்துட்டா. அதான், திரும்ப அவளை இன்னும் நிறைய நாள் ஊருக்கு அனுப்பிவெக்க கொஞ்சம் ஸ்ட்ராங்’கா மாத்திரை எழுதி வாங்க வந்தேன்”
எனக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் கொலைக்கோபம் வரும். அப்படியொரு கோபம் வந்து இன்றோடு ஆறு மாதங்கள் நிறைந்திட்டதை நாள்காட்டியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.
2 thoughts on “ஒரு கொலைவலி டாக்டரின் கோபம்”