கொலைவலி- (மொங்கான் போட்ட பின்பு)

(ஒரு நல்ல சிறுகதை மற்றவர்களையும் எழுதத் தூண்டுவதாக இருக்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நண்பர் @rsgiriயின் நிமிஷக்கதை சிந்திக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. என் மதிப்புக்குரிய நண்பர் வீரா எழுதியுள்ள நிமிஷக்கதையை இங்கே பதிவேற்றுவதில் பேருவகை கொள்கிறேன்)

இவனை எனக்குத் தெரியும். சென்ற வாரம் வந்து தலைவலிக்கு மருந்து வாங்கிப் போனவன். அப்போதே ஏதோ பூடகமாகப் பேசினான், கொஞ்சம் ஏடாகூடமாகக் கூட.

எனக்கும் அன்று தலைவலி இருந்ததால் அவன் பேச்சில் ரொம்பவெல்லாம் சிரத்தை காட்டாமல் வழக்கமான பாரசிட்டமால் மூன்று நாட்களுக்கு எழுதித் தந்து, “இதை சாப்டுங்க, சரியாகிடும். மேலும் பிரச்னைன்னா மட்டும் வாங்க போதும்”, என்று அனுப்பினேன். இப்போது மறுபடி வந்து நிற்கிறான்.

“எப்டி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் டாக்டர்?”

“அப்போ எனக்கு வேலையில்லை, போயிட்டு வாங்க”, வெடித்துச் சிரித்த என் சிரிப்பில் அவன் கலந்து கொள்வான் எனப் பார்த்தால், அசுவாரசியமாக, “சேந்த” என ஒரு பார்வை பார்த்தான்.

”மாத்திரையை திருப்பி கொடுக்கலாமின்னு வந்தேன் டாக்டர். மேலே இருக்கிற உறை மட்டும் போதும்”

“அப்போ மாத்திரையை சாப்பிடலையா? வெரிகுட். ஆனா உறை எதுக்கு?”

”அதிலே போட்டிருக்கிறமாதிரி நடந்துகிட்டேன். தலைவலி போயிடுச்சு”

”புரியலை”.

“செய்யறதுக்கு நிறைய வேலை இருந்துச்சு. தலைவலியும் தாங்க முடியலே. அதிலே போட்டிருந்தது என்னன்னா, “இரண்டு மட்டும் இப்போது போதும். குழந்தைகளிடமிருந்து தள்ளி வைக்கவும்.” அதன்படி இரண்டு வேலை மட்டும் செய்தேன். குழந்தைகளிடமிருந்து தள்ளி நிற்கிறேன்…

எனக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் கொலைக் கோபம் வரும். அப்படியொரு கோபம் வந்து இன்றோடு ஆறு மாதங்கள் நிறைந்திட்டதை நாள்காட்டியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

Advertisements

4 thoughts on “கொலைவலி- (மொங்கான் போட்ட பின்பு)

  1. […] காண்க: ஒரு கொலைவலி டாக்டரின் கோபம், கொலைவலி- மொங்கான் போட்ட பிறகு. இது குறித்து எனக்கு சில தனி மடல்கள் […]

  2. கதைகள் நன்றாக இருக்கின்றன.

    படித்து பிழியப்பிழிய அழுதேன். 🙂

    அது சரி எழுத்தாளர் பெயர்கள் ஏன் திரைப்படப்பெயர்களாக இருக்கின்றன ( கிரி, வீரா)

  3. அழுதேன் அப்படின்னு சொல்லிட்டு சிரிக்கறீங்க?

    அப்புறம் அந்த பெயர் விவகாரம்- சினிமா பேர்னு நினைக்காதீங்க, இவங்க தமிழ் இலக்கியத்தைக் கைப்பற்றப் போறாங்களாம்- அதுதான் இப்படி. காண்க: https://livelyplanet.wordpress.com/2010/06/24/oddnames/

    நீங்ககூட உங்க பேரை வசி என்று மாற்றிக் கொள்ளலாமே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s