திருப்புமுனைத் தருணம்

மதியம் சரியாக மூன்றரை மணியளவில் ஞானத்தின் கண் பார்வை குறைந்தது. அவன் அப்போது கணினியில் தட்டச்சிக் கொண்டிருந்தான், சரியாக மூன்றரை மணிக்கு அவனது இருக்கைக்கு வரும் நண்பர் வந்து அவனது தோளைத் தொட்டார். அவரை “இரு” என்று கையமர்த்திவிட்டு கணினிக்குத் தன் பார்வையைத் திருப்பினான் ஞானம்.

கண்ணில் நீர் புகுந்தது போல் எழுத்துக்கள் மங்கி ஒளிர்ந்தன. கண்ணைக் கசக்கிக் கொண்டு தட்டச்சி முடித்து விட்டு அவன் தன் நண்பருடன் சாலையில் நடந்தான். ஆறடி தொலைவில் வருபவர்களையே அடையாளம் தெரியவில்லை. யாராவது சிரித்துத் தொலைத்து நமக்கு அது தெரியாவிட்டால் என்ன செய்வது என்று தலையைக் குனிந்து கொண்டு தன் நண்பருடன் பேசிக் கொண்டே டீக்கடைக்குச் சென்று ஒரு டீ குடித்துவிட்டு அலுவலகம் திரும்பினான்.

இரவு காய்கறி வாங்கப் போகும்போதுதான் தன் வாழ்நாளில் இது ஒரு திருப்புமுனைத் தருணம் என்பதை உணர்ந்தான். எதிரில் வரும் வாகனங்களின் முகப்பொளிகள் அபரிதமாய் அலங்கரித்துக் கொண்ட மயில் தொகை போல் வானவில்லின் சகல வர்ணங்களையும் தம்மைச் சுற்றி விரித்து வந்தன. ஒளியிறகின் திரைக்குப் பின் இருப்பது எதுவும் தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான் ஞானம். ஒரு வழியாக நின்று நிதானித்து வீடு வந்து சேர்ந்தான்.

ஞானத்துக்கு இன்னும் தன் பதினான்காவது வயதில் எழுதிய ஒரு கதை நினைவில் இருக்கிறது. பேச்சற்று, செவியடைத்து பார்வையடங்கிய ஒருவரின் மனநிலையை கற்பனை செய்திருந்தான்- பதினான்கு வயது என்பது கள்ளம் கபடற்ற பருவமல்ல, இருந்தாலும் அவன் அந்த நிலையை ஒரு உன்னதமான ஆனந்த நிலையாக விவரித்திருந்தான்.

வானவில்லின் நிறங்களை விசிறியடித்த வாகனங்களின் முகப்பொளித் தோகைகளின் ஒளிவெள்ளம் அவன் நெஞ்சில் இப்போது இருளை நிறைத்தது- இது ஒரு துவக்கம் என்று ஞானம் தெளிவாக உணர்ந்தான்: அவனது பால்ய கால கற்பிதங்கள் பொய்ப்பதை முடிவில் தான் உணர நேரிடும் என்று அஞ்சினான்- புலன்கள் அடங்கிய நிலையில் அவனது அகக்கண் தன் காட்சிகளில் தன்னை இழக்கும், கேளாச்செவி தோன்றி மறையா ஒலிகளைத் தேடும்: நா மௌனித்திருந்தாலும் அடங்குதலின்றி ஓயாதோலமிடும் அவனது பொய்யுள்ளம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s