பண்டியும் பப்ளியும்

நகரச் சாலைகளின் தார்களை உருக்கும் கடும் கோடை கால உச்சி வெயில் வேளையின் வறட்சியைத் தணிக்க வந்த சிறுமழை போல் நண்பர் ஸஸரிரி கிரி ஒரு நிமிஷக்கதை கொடுத்து உதவியிருக்கிறார். நானூறாவது பதிவை எழுதிய கையோடு அடியேனையும் பொருட்படுத்தி கதை தந்தமைக்கு நன்றி கிரி. பிலேட்டட் வாழ்த்துகளும்.

அந்த ஏஸி அறைக் குளிரை மீறி பண்டி முகத்தில் வேர்வை முத்துக்கள் பூத்தன. பப்ளி இவன் சீட் நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பாஸ் கொடுத்த பஸ்’ஸை அலட்சியப்படுத்தியாயிற்று. ஆஃபீஸ் மெசெஞ்சரில் “ஹாய்” என்ற அவர் கூப்பிடலுக்கு, “இப்போ காலில் இருக்கிறேன், ஐந்து நிமிடத்தில் அழைக்கிறேன்”, என சால்ஜாப்பு சொல்லியாயிற்று.

பப்ளி நெருங்கிவிட்டாள். சட்டைப்பையில் இருந்த ஐஃபோனை வெளியே எடுத்து பக்கவாட்டில் ஸ்டைலாக மேஜை மீது வைத்தான் பண்டி. தொண்டையை வெளிக்கேட்காமல் செருமிக்கொண்டு தயாரானான். வெண்ணெய்த் தேகம் என்பார்களே அதை இதுவரை புத்தகத்தில் மட்டுமே வாசித்தவன் இப்போதுதான் கொஞ்ச நாட்களாக பப்ளி ரூபத்தில் பார்க்கிறான். இவள்தான் பண்டிக்கு இப்ப்போதைய டார்கெட். “பாஷ்” ஆக வலம் வரும் பயல்கள் பக்கம்தான் அவள் பார்வை படும் என்று பப்ளி பற்றி எல்லோரும் சொன்னார்கள். எனவே முடிந்தவரை தன் அவுட்லுக்கை அவளுக்காக மாற்றிக் கொண்டான்.

“ஹே பண்டி!”

“ஹேய் யூ!”

“வாட்… நோ வொர்க்?”

“இருக்கு! நோ ப்ராப்ளம் சொல்லு!”

“ஒண்ணுமில்லை. ஜஸ் த்தாட் ஆஃப் எ ப்ரேக். சரி உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்”

”பேசலாமே”

“ஏய்! நியூ வாட்ச்? குட் ஒன் மேன்”

“ம்ம்…. மை ப்ரதர் இஸ் இன் யு.எஸ் அவர் அனுப்பி வெச்சது”

“குட் ப்ரதர்! எனக்கும் ஒருத்தன் இருக்கானே”

ஜஸ்ட் எ மினிட்”, தூங்கிக் கிடந்த ஐஃபோனை எடுத்து ஏதோ செக் செய்யும் பாவனையில் ஈடுபட்டான்.

“மேன்! ஐஃபோன்…. வெல் வெல்… கலக்கறே போ!”

“ஓ ய்யா! இதுவும் என் அண்ணன் அனுப்பினார்! ஜஸ்ட் ஜெய்ல்ப்ரோகென்”

“ம்ம்ம்ம் அகெய்ன் யுவர் ப்ரதர்! பை தி வே! உங்க அண்ணனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

ஐஃபோன் கை நழுவிக் கீழே விழப் பார்த்தது!

Advertisements

17 thoughts on “பண்டியும் பப்ளியும்

  1. இல்லிங்க, அவங்கதான புண்ணியவதிங்க, சார் சொல்றதுதான் ரைட்டு. அது சரி, சார் டிவிட்டரை விட்டு விலகிட்டாராமே, அதைக் கேக்க மாட்டிங்களா? இனி அவரோட கீச்சொலியை நாம் எங்கு கேட்போம்? 😦

     1. ஓ! அப்டியா! நான் என்னைப்போல ஆபீஸ்ல ட்விட்டர் எல்லைக்கு வெளியில வேலை பாக்கரவருன்னு நெனச்சேன்.

      ஓய் நட்டு! என்ன ஓய்!! ஏதும் ஸ்பெசல் விரதமா? யாருக்கேனும் டிவிட்டர்ல நொழைய மாட்டேன்னு வாக்குக் கொடுத்தீரா?

       1. வாரும் வோய்! நானே 12k ட்விட் போட்டவுடனே ட்விட்டரை வுட்டு ஓடிடலாம்னுதான் பாத்தேன்! நம்ம நட்பாஸ் சார்தான் நல்ல (!!!௦) புத்தி சொல்லி என்னை திரும்ப ட்விட்ட வெச்சாரு!

  2. //ஆணியவாதிகள்// ???? ஓ! அப்பிராணிகளைச் சொல்கிறீர்களா? கோவப்பட்டா முடியுமா?

   (அண்ணன் நட்பாஸ் வலைதளத்துக்கு பெண் வாசகர்கள் வராத வரை நாம இப்படி ஏதாவது பேசலாம்.) 🙂

    1. இதெல்லாம் நமக்குப் புதுசா!?

     இன் ஃபாக்ட் இன்னைக்குக் காலைல அப்படித்தான் ஆகிப் போச்சு! வழக்கம் போல ஒரு சின்ன உரசல். “போய்யா போக்கத்த மனுஷா, ஹோட்டல்ல தின்னுக்கோ”, என்னும் அளவுக்கு பேச்சு (!!!) நீண்டுத் தொலைச்சு, பெறகு எப்படியோ மதியம் ஒரு வழியா வீட்டுச் சாப்பாட்டைத் தின்னுத் தொலச்சேன்னு வைங்க….

     சரி சரி! பப்ளிக் பப்ளிக்… இத்தோட நிறுத்திக்கறேன்!

     1. இதைப் பின்னூட்டமா போடறதுக்கு பதிலா நிமிஷக் கதையா எழுதியிருந்தா நாம ஒரு பதிவு தேத்தியிருப்போமில்ல? என்ன சார் இது இப்படி செஞ்சுட்டீங்க 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s