காலத்தைக் கடந்த படைப்புகள்

இந்த நிமிஷக்கதையை எழுதியவர் ஷெல்லி என்ற ஒரு கவிஞர். இந்தப் படைப்பு காலத்தைக் கடந்து நிற்குமா என்ன என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்- அல்லது, இந்தக் கதையில் உங்களுக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம், நாம் கேள்விகளை மட்டுமே எழுப்ப முடியும். இனி கதை.

நான் புராதான தேசம் ஒன்று போய் வந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்னது இது:

“ஐயா, பாலைவன வெளி ஒன்றில் உடலற்ற இரு மாபெரும் கற்கால்கள் நிற்கின்றன. அவையருகே மணலில், பாதி புதைந்த நிலையில், சிதைந்த முகமொன்று கிடக்கிறது. அதன் சுருக்கங்கள் நிறைந்த உதடுகளின் ஈரமற்ற அதிகாரத்தின் எக்காளச் சிரிப்பு, சிற்பி அந்த அகோர உணர்ச்சிகளை நன்றாவே வாசித்தான் என்பதை உணர்த்துகின்றன. தன்னை ஏளனம் செய்த கைகளையும் தன்னால் உண்ட இதயத்தையும் கடந்து இன்றும் வாழ்கின்றன, உயிரற்ற பொருட்களில் பொறிக்கப்பட்ட அந்த அகோர உணர்ச்சிகள். சிதைந்த சிற்பத்தின் பீடத்தில் இச்சொற்கள் இருக்கின்றன: “அரசர்களுக்கு அரசன், நான் ஓஸிமண்டியஸ். என் சாதனைகளைப் பாருங்கள், பராக்கிரமசாலிகளே, உங்கள் போதாமையை உணருங்கள்.”

அங்கு வேறொன்றும் இல்லை. அந்த மகோன்னதச் சிதிலத்தைச் சூழ, எல்லையற்ற பாழில், தனியொரு சீர்தளமாய் நெடுக நீண்டு விரிகின்றன மணற்துகள்கள்”

================================================

பிற்சேர்க்கை –

இது காலத்தைக் கடந்து நிற்கக்கூடிய பதிவு என்பதால், இந்தக் கதையை அடியேன் எழுத நேர்ந்த பின்கதை சுருக்கத்தையும் பதிவு செய்ய வேண்டிய தேவையை மறுப்பதற்கில்லை. அடுத்த நூற்றாண்டு விமரிசகர்களின் கவனத்துக்கு-

http://twitter.com/#!/vNattu/status/121816256465739777

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s