லச்சுமி

(நண்பர் ஸஸரிரி கிரி தோள் கொடுப்பான் தோழன் என்பதை மெய்ப்படுத்தும் வகையில் இந்த அருமையான நிமிஷக்கதையை எழுதிக் கொடுத்து உதவியிருக்கிறார்)

”ராகவன், செக் புக் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வாங்க”

தனக்கானத் தனி அறையில் பெரியதொரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர். வலது இடது புறங்களில் ட்ரேக்களில் ஃபைல்கள் தேங்கிக் கிடந்தன.

”மன்த் எண்ட் வந்துடுச்சி. நெக்ஸ்ட் மன்த் பெட்டி எக்ஸ்பென்சஸுக்கு கேஷ் ட்ரா பண்ணி வெச்சுக்கலாமே”

“பண்ணிடலாம் சார்”

”ஆபீஸ் எக்ஸ்பென்சஸ் ஃபோர்காஸ்ட் போட்டீங்களா?”

“இந்த மாசம் எதும் மாற்றம் இல்லை சார். போன மாசம் போலவே ஒன் பாய்ண்ட் டூ வேணும். நம்ம கிட்ட க்ளோஸ் ஒரு ஃபைவ் தவுசண்ட் இருக்கும். எனிவே, ஸேஃபா ஒன் பாய்ண்ட் டூ ஃபைவ் எடுத்துக்கலாம்”

“ஓகே, செக் எழுதுங்க. சீனியர் நாளைக்கு ஊருக்குப் போறாரு. இன்னைக்கே பாத்து செக்ல ஸைன் வாங்கிடுங்க”

செக் எழுதி மேனேஜர் ஒப்பம் வாங்கிக் கொண்டு, மேனேஜர் பார்த்து முடித்த தனக்கான ஃபைல்களை அவர் மேஜையிலிருந்து அள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான் ராகவன்.

“க்ரிஷ்ணா, கொஞ்சம் மேல வர்றியா?”

இருபது செகண்ட்களில் க்ரிஷ்ணன் எதிரில் ப்ரசன்னமானான்.

“என்னய்யா? படியேறி வருவியா? இல்ல காத்துல பறந்து வருவியா?”, வழக்கமான பதிலற்ற சிரிப்பு சிரித்தான் க்ரிஷ்ணன்.

“இந்தா செக்கு, சீனியர் கிட்ட ஸைன் வாங்கிக்கோ. ராபர்ட்டை அழைச்சிட்டு பேங்க் போயி, ஒண்ணேகால் லட்சம், ட்ரா பண்ணிட்டு வந்துடு. சீக்கிரம் போயிட்டு வந்துடு, நான் இன்னைக்கு நேரத்துக்குப் போலாம்னு பாக்கறேன்”

அரை மணியில் கேஷ் செஸ்டில் ஒண்ணேகால் லட்சம் தஞ்சம் புகுந்தது.

ஃபோன் அடித்தது.

“சொல்லு பத்து”

“என்னங்க, சின்னவனுக்கு ஏதோ ஸ்கூல்ல ஃபேன்சி ஷோ’வாம்”

ஃபேன்சி ட்ரஸ் காம்படிஷனா?”

“ஆமாமா, அதுதான். நாளைக்குள்ள ஒரு ஐநூறு ரூபா கட்டணுமாம். வரும்போது ட்ரா பண்ணிட்டு வந்துடுங்க”

“பேங்க்’ல நாப்பத்தி ரெண்டு ரூபாதான் இருக்கு பத்து. கைலயும் நூத்தம்பதைத் தாண்டாது. உன்கிட்ட ஏதும் இல்லையா?”

“அதான் போனவாரம் மொத்தமா இருந்ததெல்லாம் வழிச்சித்தானே எடுத்துத் தந்தேன்”

”ரெண்டு நாள் பொறுக்கச் சொல்லேன் அவனை. சம்பளம் வந்துடும்”

“அதெல்லாம் பேசிட்டேன். அவன் நாளைக்குன்னா நாளைக்குன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்”

“சரி சரி. இரு யார்கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன். கட் பண்ணு”

நண்பர்கள் சீனு, மனோஜ், ரவி – மூன்று பேருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். “ஐநூறு ரூபாய் கிடைக்குமா? நான்கு நாட்களில் திருப்பித் தருகிறேன்”

image credit : business.rediff.com

Advertisements

7 thoughts on “லச்சுமி

 1. கதை நன்றாக இருக்கிறது.

  பொதுவான அவதானிப்பை கதையாக்கியிருக்கிறீர்கள்.இன்னும் நுணுக்கமான தருணங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.

  கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் ஒரு பாடல்
  ”வீடு கட்டும் ஒரு கொத்தன் .. இதை வேறொரு வகையில் சொல்கிறது.

  நன்றி

 2. நட்பாஸ்

  கவிமணி? எழுதியதாக நினைவிலிருந்துதான் எழுதுகிறேன் அந்த முழுப்பாடல் எங்கிருக்கிறது?

  கிரியின் கதைகளோடு உங்கள் நிமிஷக்கதைகளையும் படிக்க ஆவலாயிருக்கிறோம் ரசிகர்கள்

  1. ரசிகர்கள் வேறையா ஹிஹி… நானே அடியார்க்கு அடியார்கள் மாதிரி, கதை எழுதறவங்களைப் பற்றி கதை எழுதறவங்களுக்கும் ரசிகனாயிருக்கற கற்பனை வரண்ட இறுகிய நெஞ்சன் 😦 பாடலைத் தேடிப் படித்து பகிர முயற்சிக்கறேன்

 3. பாடு படுவர்க்கே – இந்தப்
  பாரிடம் சொந்தமையா!
  காடு திருத்தி நல்ல – நாடு
  காண்ப தவராலவோ?

  மந்திர மோதுவதால் – எங்கும்
  வயல்வி ளைவதுண்டோ?
  தந்திரப் பேச்சாலே – அரிசி
  சாதமாயிடுமோ?

  கட்டும் ஆடையாகப் – பருத்தி
  காய்த் தளிப்ப துண்டோ?
  சட்டி பானையெலாம் – மண்ணில்
  தாமே எழுவதுண்டோ?

  உழுது பயிர்செய்வோன் – வயிற்றுக்
  குணவு பற்றாமல்,
  அழுத முதுநிதம் – நிற்ப
  தறியீ ரோ! ஐயா!

  ஆடை நெய்திடுவோன் – போர்க்கும்
  ஆடை யில்லாமல்
  வாடை கொண்டுநிதம் – கிடந்து
  வருந்த லாமோ? ஐயா!

  வீடு கட்டுமொரு – கொத்தன்
  விடுதி யில்லாமல்,
  ஆடு மாடுகள்போல் – உலகில்
  அலைய லாமோ? ஐயா!

  http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=126

 4. அருமையான பாடல்.

  இவர் போன்ற கவிஞர்களை சமயம் கிடைக்கும்போது அறிமுகப்படுத்துங்கள், மிக்க நன்றி.

  கிரி எழுதிய நிமிஷக்கதைக்கு இவ்வளவு ஆழமான பொருள் இருக்கக்கூடும் என்பதை உணர்த்தியதற்கு கூடுதல் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s