எழுத்தாள இலக்கணம்

என்னிடம் சா கந்தசாமி தொகுத்த ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள் என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அதன் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் அவர்: சா கந்தசாமி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று சொன்ன ஒரு நண்பருக்கு இதை நேற்று தட்டச்சி அனுப்பினேன்- இப்போதுதான் இதை ப்ளாகில் போட்டு வைத்தால் ஒரு பதிவு பார்த்த மாதிரியும் இருக்குமே என்ற ஞானோதயம் உதித்தது- எழுதியது எழுதியாயிற்று, அதை வீண் போக விடுவானேன்?

“இத்தொகுப்பில் இடம் பெரும் எழுத்தாளர்கள், ஒரே சிந்தனை, ஒரே நோக்கம், ஒரே குரல், கொண்டவர்கள் என்பதற்காக இல்லாமல் அவர்களின் தனிக் குரலுக்காகவும், தனித்தன்மைக்காகவும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளில் இலக்கியம் பற்றிய கோட்பாட்டை மட்டுமல்ல – வாழ்க்கையைப் பற்றிய சித்தாந்தங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக மொழியை அதன் பூரணமான அழகுடன் கையாளும் நேர்த்தி, கருத்தைச் சொல்வதில் உள்ள தீவிரம், காட்சிப்படுத்துவதில் உள்ள ஈடுபாடு, மனதை அலசிப் பார்ப்பதில் உள்ள நம்பிக்கை, சமூகத்தை எள்ளி நகையாடும் பாங்கு, தன்னையே விமர்சனித்துக் கொள்ளும் பக்குவம், அதிகாரத்தின் கோர முகத்தை வெளிக்காட்டுவதில் உள்ள ஆர்வம், நியாயம், தர்மம் என்பதின் அநியாயம், அதர்மம், கும்பல் கலாச்சாரத்தின் வன்முறை, தனி மனிதனின் அகங்காரம்- என்பதை எல்லாம் படைப்பு எழுத்தாளர்கள் கண்டும், உணர்ந்தும், அனுபவித்தும், சமூகம் முழுவதற்குமாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் படைப்பு வழியாகப் பார்க்கும் ஒரு முயற்சிதான்….”

இப்படிப்பட்ட எழுத்தைப் படைக்க ஒவ்வொருத்தனும் ஆசைப்பட வேண்டும், இல்லையா?

Advertisements

2 thoughts on “எழுத்தாள இலக்கணம்

 1. கிரி தன் பதிவில் உங்களை இருட்டடிப்பு செய்திருப்பதைக்கண்டு ஏமாற்றங்கொண்டேன். 😦

  சார் இவர் உங்கள் கருத்தை ஒட்டிப்பேசுகிறார் போலிருக்கிறது….:)

  ’’அது முதலில் வாசிப்பை மேலும் மேலும் பூடகமாக்காமல், வாசிக்கும் முறையை வெளிப்படையாக்குகிறது. வாசகன் இலக்கியப் பிரதியோடு கொள்ளும் ஊடாட்டத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆசிரியர் மற்றும் விமர்சகர்களின் விசேஷ அதிகார பீடங்களில்லாமலேயே நமது வாசக அனுபவத்தை முதன்மைப்படுத்தியே இலக்கியப்பிரதிகளை படிக்கலாம் என்கிறது’’

  1. இருட்டடிப்பு செய்து கொள்வதுதான் நல்லது- நாளை நம்மைத் திட்டுபவர்கள் எட்டடிக்கு எட்டடி அளவு புகைப்படத்தை வெளியிட்டு பூச்சாண்டி காட்டக்கூடாதல்லவா! 🙂

   Ian McEwanனின் நாவலொன்றை விமரிசித்தவர், அதெப்படி, கதாநாயகனின் மனைவி வாய் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு நாளைப்போல கலவிக்குத் தயாராக இருக்கிறாள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு McEwan, இந்த விமரிசனம் கதையையோ மனிதர்களையோ கேள்விக்குள்ளாக்கவில்லை- இந்த விமரிசகரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது என்றார்.

   நம் விமரிசனங்கள் நம்மைக் காட்டிக் கொடுக்கின்றன. ரசனை விமரிசகனுக்கு ஒரு மாதிரி என்றால் கோட்பாட்டு விமரிசகனுக்கு வேறு மாதிரி.

   உத்தம ரசனை விமரிசகன் (கவனியுங்கள், நான் குரிப்பிடும் விமரிசகன் உரவி, அதம ரசனை விமரிசகன் அல்ல)- எலி வளர்ப்பவன் போல- நாலு எலி இருந்தால் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவான்: அவனுக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கும், ஆனால் அவை அனைத்தையும் விட அவன் வளர்க்கும் எலிகளிடத்தில் அவனது அன்புதான் வெளிப்படும், இல்லையா?

   எலி என்பது நன்றாக இல்லை என்றால் கிளி என்று வைத்துக் கொள்ளுங்கள்.

   ஆனால் கோட்பாடு விமரிசகர்கள் ஆய்வுக் கூடத்தில் அந்த கிளியை மல்லாக்கக் கிடத்தி அதன் உள்ளுறுப்புகளை வெட்டி எடுத்து அந்தக் கிளியைப் புரிந்து கொள்பவர்கள். இரண்டு பேருமே புரிதலை நோக்கியே செல்கிறார்கள். ஆனால் வெவ்வேறு வகை புரிதல்கள்.

   ரசனை விமரிசகன் தன் ரசனையின் எல்லைகளைப் புரிந்து கொள்ள முயன்றால், நேர்மையான கோட்பாடு விமரிசகன் தன் கோட்பாட்டின் மெய்ம்மையை, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறான்.

   ரசனை விமரிசகன் பிரதியின் ஆகக்கூடிய அண்மையை அணுகுகிறான்: கோட்பாட்டு விமரிசகன் பிரதியின் ஆகச் சிறந்த பயன்பாட்டைத் தேடுகிறான்: ஆனால் எப்போதும் போல பிரதி இவர்கள் இருவரும் இல்லாத வெளியில் மறைந்திருக்கிறது, எப்போதும்.

   🙂

   இப்போது ஒரு நிமிஷக்கதை பதிவு செய்திருக்கிறேன், பின்னூட்டங்கள் இருக்கும், கதை ஓரிரு நாட்களில் மறைந்து விடும்.

   நீங்கள் படித்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொன்னால் சந்தோஷப்படுவேன். உங்களை முன்னிட்டே அந்தக் கதையைப் பதிப்பிக்கிறேன்.

   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s