ஒரு நீதிக் கதை

நண்பர் வீரா எழுதிய நிமிஷக்கதை வாழ்க்கையின் வேறொரு மூலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நன்றி வீரா!

டில்லி ரயில் நிலையம். பிளாட்பாரத்தில் ஞானம் ஒரு பெட்டி மீது வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான்.

அவன் தந்தை மாணிக்கத்திற்கு ஞானம் தொலை தூரம் போய் வேலை பார்ப்பதில் இஷ்டமேயில்லை. ஞானம் கணித நுண்ணறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, குழு விவாதத்தில் ஒரு மாதிரி தடுமாறி படிப் படியாக அனைத்து தேர்வுப் படிகளையும் கடந்து இறுதி நேர்முகத் தேர்விற்காக டில்லிக்கு அழைக்கப் பட்டிருந்தான்.

தேர்வில் அனைத்துக் கேள்விகளும் சுலபமாகவே அவனுக்கு இருந்தது அந்தப் பாழாப் போன பேண்டின் ஜிப் பிய்ந்து விட்டது தெரியாமல் உட்கார்ந்திருந்ததைத் தவிர. (இராசியான பேண்ட் என்று ஐந்து வருடம் பத்திரபடுத்தி வைத்திருந்தது காலை வாரிவிட்டது. ).

“சார் குட் யூ கிவ் மீ பைவ் ரூபீஸ்?” என்ற குரல் கேட்டதும் திடுக்கிட்டு பார்த்தான்.

கேட்டவர் டீக்காக உடை உடுத்தியிருந்தார். சரிதான், 5 பைசா, 10 பைசாவிலிருந்து 5 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டே ஐந்து ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டு மறுபடியும் யோசனையில் மூழ்கினான் ஞானம்.

‘இவ்வளவு தூரம் வந்ததுதான் வந்தோம். ஆக்ரா, மதுரா இடங்களையெல்லாம் பார்த்துவிட்டுப் போனால் என்ன!’ என்பதுதான் யோசனை.

சில நிமிடங்களுக்குப் பின் மறுபடி அதே நபரின் குரல். ‘ நூறு ரூபாய் நோட்டாக இருந்தது. போர்ட்டருக்கு கொடுப்பதற்காக கேட்டேன். சேஞ் பண்ணியாச்சு. இந்தாங்க’ என்று கூறி ஞானம் மறுத்தும் பிடிவாதமாக திருப்பித் தந்து விட்டார்.

இப்படித்தான் பழக்கம் ஆரம்பித்தது. ஞானத்தைப் பற்றி விசாரித்தார். ஞானம் அதற்குத்தான் காத்துக் கொண்டிருந்ததைப்போல் ஒளிவு மறைவு இல்லாமல் ஏமாற்றம் ஏற்பட்டது உட்பட, எல்லா விவரங்களையும் சொன்னான்.

‘அட அசடே. இதற்குப் போய் கலங்கலாமா? கடவுள் உனக்கு இதைவிட சிறந்த பதவி அளிக்க நினைத்திருக்கிறாரோ என்னவோ, விடு கவலையை. என்னுடன் வா. நான் உனக்கு ஆக்ரா, மதுரா எல்லா இடங்களையும் காண்பிக்கிறேன். முதலில் போய் மதுராவிற்கு ஒரு டிக்கெட் வாங்கிட்டு வா என்றார்.

முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப் போனவனை தடுத்து, ‘ நான் ஆபீஸ் செலவில் முதல் வகுப்பில் போகிறேன். நீ இந்த சின்ன வயதில் சிக்கனமாய் இருக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் வா’ என்று சொல்லி விட்டார்.

இரயில் வந்தது. ”இரண்டாம் வகுப்பில் கூட்டமாக இருக்கும். உன் பெட்டி படுக்கைகளை என்னிடம் வைத்து விட்டு நீ மட்டும் தனியாக வா” என்று சொன்னார். “சரி. இவர் அன்பே சிவம் உத்தமன் போல நம் பெட்டியோடு கம்பி நீட்டி விடுவார் என்று நினைத்த ஞானம், என்னவோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அவர் சொன்னபடியே செய்தான். அவர் பயணம் செய்த முதல் வகுப்பு பெட்டிக்கு இரண்டு பெட்டிகள் பின்னால் இருந்த ஒரு அன்ரிசர்வ் பெட்டியில் ஏறிக் கொண்டு பார்த்துக் கொண்டே வந்தான். எவ்வளவு நேரம்தான் கண் விழிக்க முடியும்? தூங்கி விட்டான்.

அவனது பெட்டி படுக்கைகள் பறிபோய் விட்டது. அதில்தான் அவனது ஏடிம் கார்ட், பணம், டூ விலர் லைசன்ஸ் எல்லாம் இருந்தது. அவசரத்தில் தெரிந்த அரைகுறை இந்தியும் சுத்தமாய் மறந்துவிட்டது. யாரிடம் போய் கேட்பது? என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறான்.

இரயில் மதுரா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. இருவரும் கீழே இறங்கினார்கள். அங்கே ஞானம் கண்ட காட்சி அவன் வாயை அடைக்கச் செய்து விட்டது. அந்த ரயில் நண்பருக்கு கிடைத்த வரவேற்பும் மரியாதையும், ‘பிச்சைக்காரன், ஏமாற்றுப் பேர்வழி’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த ஞானத்திற்கு அவர் ஒரு மருத்துவத் துறை உயர் அதிகாரி. அவர் பெயர் தேசாய்’ என்பது புலனானது. தன் கீழுள்ள அதிகாரிகளுக்கு ஞானத்தை தன் மதராஸி நண்பர் என்று பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார்.

மூன்று நாட்கள் அவருடைய குடும்பத்தில் ஒருவனாக ஞானம் இருந்தான். மதுரா, ஆக்ரா மற்றும் பல இடங்களையும் அவருடன் சுற்றிப் பார்த்தான். கிளம்பும் நேரம் வந்தது. ‘பிரதிஉபகாரமா…’ என்று ஆரம்பித்த அவனை இடைமறித்த தேசாய், ‘ஆம். நீ செய்யக் கூடிய ஒன்று இருக்கிறது’ என்றார்.

‘ நீ என்னிடம் வந்தது போல், எப்பொழுதாவது ஒரு சமயம் உன்னிடம் எவரேனும் வந்தால் இதே போல் நடந்து கொள். அதுதான் நீ எனக்குச் செய்யக் கூடிய மறு உதவி’ என்று சொன்னார்.

இதுவரை பொறுமையாக படித்த கனவான்களே, இது நீதிக் கதை இல்லை என்றாலும் கடைசியாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சமீபத்தில் பேப்பரில் மருத்துவத் துறையில் ஊழல் என்று படித்திருப்பீர்களே. அதில் கைதான தேசாயின் மதராஸி நண்பன் என்று ஞானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

3 thoughts on “ஒரு நீதிக் கதை

 1. வீரா…

  வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
  வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
  கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
  கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
  சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
  தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
  எட்டுத் திசையும் இடிய…..

  மழை எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா! 😀

  1. எவ்வளவு கஷ்டப்பட்டு ஞானத்துக்கு ஒரு இமேஜ் பில்ட் அப் பண்ணி வெச்சிருந்தேன்….,

   ஒரே வாக்கியத்தில் அதை டேமேஜ் செஞ்சுட்டாரே வீரா- என் கவலையை உங்கள் கேலி போக்கியது.

   நானும் பழி வாங்குகிறேன்:

   அட ராமன்னா ராமன்
   ராவணன்னா ராவணன்
   ரெண்டும்நா… ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்..
   ராமன்தேன் ராவணன்தேன் ராமன்தேன் ராவணன்தேன் வீரா….
   என் பொறப்ப நீ கண்ட
   என் பாதை நீ கடந்த
   என் யுத்தம் நீ செஞ்சா
   நீ ராமன்தேன் ராவணன்தேன்
   ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்.. போடா….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s