அம்மாவும் பிள்ளையும்

ஒரு நிமிஷ கதை- லா.ச. ராமாமிருதம் அவர்களின் “கணுக்கள்” என்ற சிறுகதையில் இருந்து பொறுக்கியது-

“எங்கேடா உங்கப்பா?”

வாயில் போட்ட கட்டை விரலையெடுக்காமலே, “அப்பா ஓ போயிட்டா – நேக்கு பப்புட்டு வாங்கிண்டு வவ்வா” என்பான்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாய் ஸ்ரீமதியின் புருஷனிடமிருந்து ஒழுங்காய்ப் பணமும் வரவில்லை; கடிதமும் வரவில்லை. சேர்ந்தாற்போல் இப்போது ஆறுமாத காலமாய் அவனிடமிருந்து ஒரு வரியுமில்லை.

பையன் வாசற்படியண்டை வந்து நிற்பான். “மாமா அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா. காசு நாளைக்கித் தவாளாம்”

கொடுப்பேன்.

“மாமா… அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா”

அப்புறம் வந்து வாய் பேசாது வெறுமென நிற்பான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட திகைப்பும் சோகமும் இப்பவே தேங்கிய அம்முகத்தைப் பார்த்து வயிறு ஒட்டிக கொள்ளும். கட்டுக் கட்டாய்க் கார்டும் கவரும் அவனெதிரில் வைத்துக் கொண்டு, ஏதோ குற்றம் செய்கையில் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் உள்ளம் குலுங்கும்.

“அம்மா கவர் வாங்கிண்டு வரச் சொன்னாளா? இந்தா, எடுத்துக்கோ”

கவரைக் கையில் பிடித்துக் கொண்டு குதித்து ஓடுவான்.

ஆனால் ஸ்ரீமதி பதறிப் பதறி எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை.

OoOoOoOoO

அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னை மணல் திட்டு மறைத்தது. ஆனால் நான் அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் நான் கண்டதைக் கண்டதும், மறு அடி எடுக்கத் துவக்கிய கால் கீழிறங்க மறந்து அந்தரத்தில் நின்றது.

ஸ்ரீமதியின் எதிரில் ஜலமும் அகன்று விரிந்தது. அவள் நாட்டம் ஜலத்தின் நடுவில் ஏதோ ஒரு மீன் துள்ளிச் சுழித்த சுழியிலும், அச்சுழியில் ஜலத்தின் விதிர் விதிர்ப்பிலும் பதிந்திருந்தது. நெற்றிப் போட்டு மயிர் சற்றுப் பரட்டையாய் மாலைக் காற்றில் அசைந்தது. முகத்தில் முந்நூறு மூவாயிரம் வருடங்கள்… காலத்தின் வரையே கடந்து வயதேயிலாத வயோதிகம் கவிந்திருந்தது. இமைகள் கொட்டவில்லை. முகமே ஒழித்துப் பெருக்கி வைத்தாற்போல், ஒரு தனி வெறிச்சிட்டு, அதில் ஒரு எண்ணம், கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயங்கரமாய் முருக்கேறிக் கொண்டிருந்தது. எனக்கு நடுமுதுகு சில்லிட்டது.

“அம்மா-அம்மா”

அமிர்தாஞ்சன் பொம்மை மாதிரி அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. தண்ணீரை உற்சாகத்துடன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான். கன்னக் கதுப்புகளில் மாம்பழச் சிவப்பு மிளிர்ந்தது. தலையின் சுருட்டை மயிர், வெயிலின் ஜாலத்தில் தங்க மோதிரக் குவியலாய் மாறிற்று.

“வவிக்கை!”

அவள் தோய்க்கக் கொண்டு வந்த ரவிக்கை மிதந்து, சுழலில் இழுக்கப்பட்டு, அவள் எட்டும் தூரத்தையும் மீறி ஜலத்தின் நடுவுக்குப் போய்க் கொண்டிருந்தது.

அமுக்கிய எஃகுச் சுருள் திடீரென்று திரும்பிக் கொண்டாற்போல், அவள் முகம் சட்டென கலைந்தது; பூமியே புரண்டதுபோல் ஒரு பெரும் கேவல் அவளை அதிர்த்துக் கொண்டு அவளின்று கிளம்பியது. கட்டிய முழங்கால்களின்மேல் முகம் விழுந்தது.

“என்னம்மா! ஏம்மா அழவே? ஏம்மா?”

Advertisements

29 thoughts on “அம்மாவும் பிள்ளையும்

  1. ஸஸரிரி கிரி ராஜேந்திர குமாரின் தீவிர வாசகர். அதை ஏன் இப்போது நினைவூட்டுகிறீர்கள்? 🙂

   திருவரங்கன் உலா படித்திருக்க வேண்டும்- இப்போது நினைவில்லை.

   ஸ்ரீ வேணுகோபாலன் எழுத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

   1. நான் ராஜேந்திரகுமாரின் தீவிர வாசகனா? அதை எப்போ எங்கே சொன்னேன்?

    விடலைப் பருவத்தில் அவர் புத்தகங்களைப் படித்ததுண்டு.

    அவன், அவள் தீவு என்ற கதை ஒன்று மட்டும் நினைவில் இருக்கிறது. நாயகனும் நாயகியும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

    சந்தர்ப்பவசத்தில், ஒரு பெரிய கப்பல் சைஸ் படகில் நடுக்கடலில் காப்பாற்ற யாருமின்றி தனியே மாட்டிக் கொள்வார்கள்.

    அதன் பின் ராஜேந்திரகுமார்’த்தனமான கசமுசாக்கள் படகிலேயே அரங்கேறும்…. ஜெயராஜ் ஓவியத்தில் மறக்காமல் நாயகியின் மாராப்பை விலக்கி வைத்திருப்பார் என்பதெல்லாம் நினைவில் வருகிறது.

    கடைசியில் எப்படியோ கரை திரும்பும் இருவரும் குடும்பங்களை சேர்த்து வைத்து தாமும் சேர்வார்கள் என முடிந்ததாய் ஞாபகம்.

    1. உங்களுக்கு ராஜேந்திர குமார் பிடிக்காதா?

     ஓ, நீங்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் ரசிகர் அல்லவா?

     ஸாரி, ஸாரி, தப்பா சொல்லிட்டேன். குலதெய்வத்தை மாத்தி சொன்னாலும் சொல்லலாம், பிடிச்ச எழுத்தாளர் பேர் மாத்தி சொல்றது பெரும் பாவம்.

     ஸாரி சார்.

    2. கிரி

     ஆமா
     சரி நம்ம பாஸ் தவறுதலாச்சொல்லிட்டார் அதுக்கு இப்ப என்ன?

     எங்க பாஸ் அப்படி எழுதிட்டா இனி நீங்க ராஜேந்திரகுமார் ரசிகன்தான்.

     யார்கேட்டாலும் இனி அப்படித்தான் சொல்லணும்…

     😀

 1. சார்

  ஸ்ரீ வேணுகோபாலனின் எழுத்தை விமர்சன நோக்கில் படிக்கவில்லை.அப்போது படிக்கும்போது வாசிக்கும் இன்பத்துக்காகப்படித்தேன்.
  நன்றாகவே தோன்றியது.
  பின்னர்தான் அவரும் இவரும் ஒருவர் என்றறிந்தேன்.வியப்பு ஏற்பட்டது அப்போது.
  இப்போது படித்தால் எப்படியிருக்கும் என்று பார்க்கவேண்டும்.

  நான் எல்லா எழுத்தாளர்களினதும் எல்லாவகையான எழுத்துக்களினதும் தீவிரவாசகனாகயிருந்தேன்.மருத்துவப்படிப்பின் தடித்தபுத்தகங்கள் என் வாசிப்பை ஒதுக்கிமூலையில் தள்ளிவிட்டன.

  ”சின்னப்பச” வயதில் ரா.ந்திரகுமாரின் புத்தகம் ஒன்றைத்திருட்டுத்தனமாக படிக்கத்திறந்தபோது அது இப்படி ஆரம்பித்து என்னைப்பதறவைத்தது.
  “சின்னப்பசங்களா புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அப்பால் போங்கடா’’(அண்ணளவான வசனம்). 😀

  1. விமரிசன நோக்கில் படித்தால் விசன நோக்கம்தான் நிறைவேறும்!

   இன்று ஒரு கட்டுரை படித்தேன், அதை எழுதியவர் இலக்கியத்துக்கு ஆயிரம் வாசல்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வெளிச்சம், ஒவ்வொரு அனுபவம் என்று எழுதியிருக்கிறார். சரிதான் என்று தோன்றுகிறது, ஆனால் என்ன பிரச்சினை என்றால் எல்லாவற்றையும் பற்றி எழுத முடிவதில்லை.

   எதைப்பற்றி நிறைய எழுத முடிகிறதோ, எதைப் பற்றி நிறைய எழுத இருக்கிறதோ, எது விமரிசன எழுத்தாளனுக்கு நல்ல தீனி போடுகிறதோ, அதுதான் இலக்கியம் என்று பேசப்படுகிறதோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

   நன்றி.

 2. இலக்கியங்களுக்கு வாசல் வைப்பது அல்லது வாசலொன்றைத்தேர்ந்தெடுப்பது தான் விமர்சகர்களின் வேலையென்று தோன்றுகிறது.

  ஈழத்தில் ஒரு கட்டத்தில் விமர்சகர்கள்தான் கோலோச்சினார்கள்

  முற்போக்கு இலக்கியம் என்ற வகை வேறு. இருந்தது .முற்போக்குஎழுத்தாளர் எழுதுவது ?…முற்போக்கு இலக்கியம்.

  தலித் இலக்கியம் தலித்துக்கள் பற்றியது.தலித் இலக்கியத்தை ஒரு தலித்தான் எழுதமுடியும் ..இல்லை என்றும் விவாதங்கள் இருக்கின்றன.

  வணிகஎழுத்து என்று ஒரு வகைப்படுத்தல் இப்போது அடிக்கடி தட்டுப்படுகிறது.
  வணிக இலக்கியம்.வணிகர்கள் எழுதுவதோ
  சுந்தரராமசாமியும் மாதவனும் வணிகர்கள். அவர்கள் இலக்கியம் வணிக இலக்கியம் எனலாமோ.

  எல்லாமே ஒரு வகையில் அபத்தம் இல்லையா?

  1. இது கொஞ்சம் சிக்கலான விஷயம், முழு நீளத்துக்கு நீட்டி முழக்கி பதிவு எழுதித்தான் விவாதிக்க வேண்டும், முடிகிறதா பார்க்கலாம்…

 3. ’முழு நீளத்துக்கு நீட்டி முழக்கி பதிவு எழுதித்தான் விவாதிக்க வேண்டும் ’’

  முழு நீளமா…….விவாதமாஆஆஆஆஆ.

  சர்ர்ர்ர்ர் டவுசர் கிழிஞ்ச்சுடுத்து சார்ர்ர்ர்ர்ர்ர்.

  இதில் என்ன இருக்கு “வணிகஎழுத்து” என்பது ஒரு misnomer என்று தோன்றுகிறது.. அதைத்தான் சொல்லவந்தேன்.

  Commercial writing is writing for businesses. It is also known as copywriting. A copywriter or freelance commercial writer, writes ‘copy’ or text to help businesses communicate with their customers and more importantly, with potential customers. Every advertisement, every brochure, every catalogue and every sales letter you’ve ever read was written by a copywriter…..

  Art cinema vs commercial cinema-

  an art movie is something that is “personal” to the director; something that he “owns for himself”. The concept is as simple as that. There is no relevance to see that the common-audience likes it (though one would love to). There is no relevance to see that the movie achieves fame (though one would love to). There are no underlined factors to grow revenues. In other words, a director conveys his “candid thoughts” in the most natural way possible. -Sreesha Belakvaadi-

  மேலே “commercial” என்பது சினிமா எழுத்து இரண்டிலும் வேறு அர்த்தப்படுகிறது.

  சினிமாபோல அல்ல எழுத்து தனியொருவருக்கு சொந்தமானது.
  வணிக எழுத்து, வணிக எழுத்தாளன் இவற்றுக்கிடையில் ஒரு மயக்கம் இருக்கிறது

  இதைத்தான்சொல்ல நினைத்தது….

  முழுநீளமோ ட்ரெய்லரோ விவாதம் வேண்டாம். சார்.இத்தோடு பின்னூட்டத்தை முடித்து தொடங்கக்கூடிய விவாதத்திலிருந்து ஜகா வாங்கி முற்றுப்புள்ளிவைத்து விடுகிறேன்.
  விடுங்க
  கிழமைக்கு ஒரு நிமிஷக்கதை எழுதலாம் என்று தோன்றுகிறது.பிரசுரித்து உதவி செய்வீர்களா?

  நன்றி.

 4. 🙂

  நான் அந்தக் கேள்விக்கு போக நினைக்கவில்லை- தலித் இலக்கியம் யாரால் எழுதப்பட வேண்டும் என்று பேச நினைத்தேன், பரவாயில்லை விடுங்க.

  இனி நீங்களே இங்க நேரடியா நிமிஷக் கதையோ தொடர் கதையோ எதுவானாலும், கவிதை, ஓவியம், கட்டுரை என்ன வேணா எழுதலாம். நேரடியாக எழுத இன்வைட் அனுப்பியுள்ளேன்.

  இனி நீங்கள் விரும்பும்போது எது வேண்டுமானாலும் எழுதலாம்.

  பின்னூட்டத்தில் நான் வருகிறேன் 🙂

  மிக்க நன்றி.

  1. நேரடியாகவே இடுகை செய்யலாம், இதில் பிரச்சினை ஒன்றும் இருக்காது.

   மேலும், இப்படி செய்தால் யார் யார் எதை எழுதியது என்று பகுப்பு செய்ய எளிதாக இருக்கும்.

   எப்போது எழுதத் தோன்றுகிறதோ, அப்போது எழுதுங்கள்.

   கள்ளிப் பெட்டி வாசகர்களுக்கு இலக்கியத்தின் இரண்டாம் கதவு திறக்கிறது :).

   இந்தக் கதவு விசாலமானது, கவித்துவமானது, ஆழமான உணர்வுகளை அலங்காரமில்லாமல் வெளிப்படுத்துவது- சில்லிட்டிருக்கும் தனக்குள் நெருப்பைத் தேக்கி வைத்திருக்கும் கூழாங்கற்களை ஒத்த கணப்பளிக்கக் கூடியது: உரசிப் பார்த்து பொறி பறக்கச் செய்வதும் ஊதி ஊதி அதன் உயிர்ப்பில் வெளிச்சமும் வெம்மையும் காண்பதும் வாசகன் திறமை.

   வருக வருக!

   நேரடியாக இடுகைகள் இடுக!

   1. சார் ஆசை இருக்கு தாசில் பண்ண.

    ஆசைப்பட்டபடி எழுதுவது முடியாது போல இருக்கிறது. நிலை மாறும் உலகு

    இன்னும் ஒரு வேலை முடிக்க இருக்கு.அது முடிக்காமல் எழுதுவது சிக்கல்தான்

    உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

    1. இதில் என்ன பெருந்தன்மை!

     நீங்க இன்வைட்டை ஏத்துக்குங்க, எப்ப எழுதத் தோணுதோ அப்ப எழுதுங்க, ஒரு அவசரமும் இல்லை.

     நீங்க தட்டிக் கழிக்கறீங்க, கிரி பதிலே சொல்ல மாட்டேங்கறார், இன்னொருத்தர் இன்வைட் வந்த மாதிரியே காட்டிக்கல…

     என்ன நடக்குது இங்க?

      1. மிக்க நன்றி.

       எதுவுமே எழுதாம இருந்தாலும் பரவாயில்லை – எழுதியாக வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

       எழுதத் தோன்றும்போது எழுதுங்கள், போதும்.

       மீண்டும் என் நன்றிகள்.

 5. எங்கள் வார்ட் நோயாளி ஒருவர் கொஞ்சநாளா ஒரு தெர்மகோல் டம்ளர் டீயில் எட்டு ஒன்பது கரண்டி சீனிபோட்டுக்குடிக்கத்தொடங்கியிருக்கார்.
  அப்படி ஏன் ?எப்படிக்குடிக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

  அது ஓவரில்லையா சார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s