பதிவு

பதிவு எழுதும் மன நிலையில் தற்போது இல்லை – என்னமோ நடந்து விட்டது, என்னவென்று தெரியவில்லை. ஆனால், சில விஷயங்களை தற்போதைக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்- முடிந்த அளவு சுருக்கமாக.

திரு டிசே தமிழன் அவர்கள் எழுதிய ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம் என்ற பதிவைப் படிக்க நேர்ந்தது. அதில் அவர் இப்படி எழுதுகிறார், “உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து…, அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌… ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.”

நான் இதை எழுதுவது, அவரைவிட நான் புத்திசாலி என்றோ, அவருக்குத் தெரியாததை நான் கண்டுபிடித்து விட்டேன் என்றோ சொல்லிக் கொள்வதற்காக அல்ல. அவர் சொல்லும் நோக்கத்தில்தான் நான் இந்தப் பதிவையும் எழுதுறேன். நாம் தமிழாக்கத்தை ஒற்றை ஆளாய் செய்தால் எளிதாக முடித்துவிட்டுப் போய் விடலாம். ஆனால் இன்னொருத்தரை பேச்சுத் துணைக்கு வைத்துக் கொண்டால், கவிதை, மொழி, பண்பாடு, என்று பல புரிதல்களைக் கொடுத்தாலும், கவிதை கொடுக்கும் அக அனுபவத்தைவிட, அது குறித்த விவாதத்தால் நாம் கண்டடையும் திறப்புகள் விரிவானவையாக இருக்கும். ஒரு கட்டத்தில் கவிதையை அதன் முழு பரிமாணத்திலும் பேசவே முடியாது என்றே தோன்றி விடுகிறது.

முதலில் ஆங்கில கவிதை:

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

முதல் இரு அடிகள் என்ன சொல்கின்றன என்று புரியவில்லை. இருந்தாலும், இவர் ஸ்வீடனில் இருக்கிறார், கவிதையின் தலைப்பு midwinter என்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த அடிகள் Aurora Borealis அல்லது Northern Lights என்றழைக்கப்படும் வான் வண்ணங்களை சுட்டுகின்றன என்று கற்பனை செய்து கொள்கிறேன். குளிர் கால இரவுகளில்தான் இவை தெளிவாகத் தெரிகின்றன என்று எங்கோ படித்தேன், அந்த சுட்டியைக் குறித்து வைத்துக் கொள்ளத் தவறி விட்டேன்.

A blue glow
Streams out from my clothes.
Midwinter,

என்பதைத் தாண்டி,

A clinking tambour made of ice.

என்ற இடத்துக்கு வந்து விட்டோம்.

இதில், tambour என்றால் என்ன என்று பார்க்க transtromer பயன்படுத்திய tamburiner என்ற பதத்தை கூகுள் இமேஜில் தேடினேன், அது இந்த மாதிரியான இசைக்கருவியாக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன்.

tamburiner

இதிலிருந்து வரக்கூடிய இசையைத்தான் ட்ரான்ஸ்ட்ரெமர் “A clinking tambour made of ice.” என்று எண்ண இடமிருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆச்சு.

—-

இதைப் பற்றி நேற்று இரவு நண்பரின் தளத்தில் பின்னூட்டம் இட்டுவிட்டு, அமெரிக்காவில் இருக்கும் இன்னொரு நண்பரிடம் இது பற்றி கொஞ்சம் விவாதித்துவிட்டு நேற்றிரவு தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால், நீங்கள் காணும் இந்த புகைப்படத்தில் உள்ள Bob Dylanன் Mr. Tambourine Man என்ற பாடலுக்கு சுட்டி கொடுத்து, இப்படி எழுதியிருக்கிறார்:

Bob Dylan’s famous Tambourine Man song is here- (1964-65)
http://www.bobdylan.com/songs/mr-tambourine-man

Here is one version as sung by Dylan:

When was TT’s poetry written?

Bob Dylan தன் பாடலை எழுதி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து ட்ரான்ஸ்ட்ரெமர் தன் கவிதையை எழுதி இருக்கிறார். அப்படியானால், “A clinking tambour made of ice.” என்று எழுதும்போது, Bob Dylan பாடலை அவர் மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார் என்று எண்ண இடமிருக்கிறதா?

இருக்கிறது என்று நினைக்கிறேன். புறசான்று: நான் சுட்டிய ஸ்காண்டிநேவிய ப்ளாகில் tamburiner என்ற பதத்தை Bob Dylan பாடலுடன் தொடர்பு கொண்டு வாசிக்கிறார்கள். இது ஸ்காண்டிநேவிய பரப்பு ஊடகத்தில் இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பை சுட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இனி அகச்சான்றைப் பார்ப்போம்.

அடுத்த அடியில் ட்ரான்ஸ்ட்ரெமர், “I close my eyes.” என்று எழுதுகிறார்- Bob Dylan பாடல்,

Hey! Mr. Tambourine Man, play a song for me
I’m not sleepy and there is no place I’m going to
Hey! Mr. Tambourine Man, play a song for me
In the jingle jangle morning I’ll come followin’ you

Though I know that evenin’s empire has returned into sand
Vanished from my hand
Left me blindly here to stand but still not sleeping…

என்று துவங்குகிறது. இதன் எதிரொலியாக ட்ரான்ஸ்ட்ரெமர், ” “I close my eyes.”” என்று எழுதுவதாக வைத்துக் கொள்வோம். அதை எழுதிவிட்டு, அவர், இப்படி எழுதுகிறார்:

Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

இதை Bob Dylan பாடலுடன் ஒட்டி வாசிக்க இடமிருக்கிறதா? அவரது பாடலின் இந்த வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

Take me on a trip upon your magic swirlin’ ship
My senses have been stripped, my hands can’t feel to grip
My toes too numb to step
Wait only for my boot heels to be wanderin’
I’m ready to go anywhere, I’m ready for to fade
Into my own parade, cast your dancing spell my way
I promise to go under it…

Bob Dylan இப்படி எழுதியதை ஒட்டி ட்ரான்ஸ்ட்ரெமரின்

Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

என்ற அடிகளை வாசித்துப் பாருங்கள், இரு கவிதைகளும் இணை கோடுகளாகப் பயணிப்பது தெரிகிறது, இல்லையா? ஏதோ ஒரு பரிமாணத்தில் அவை ஒன்று கூடி பிரிகின்றன. அங்கேதான் இருக்கிறது இந்தக் கவிதையின் மையப் புள்ளி.

இந்தக் கவிதையில் ட்ரான்ஸ்ட்ரெமர் எத்தனையோ இசைக்கருவிகள் இருக்க, tamburiner என்ற கருவியின் இசையை ஏன் கற்பனை செய்திருக்கிறார் என்று யோசிக்க வேண்டும். Dylanன் பாடலில் “Though you might hear laughin’, spinnin’, swingin’ madly across the sun” என்று பிரகாசிக்கும் வெளியின் கோலாகலம் பேசப்படுகிறது. இங்கு குளிர் கால இரவின் தனிமை, அதில் மாயமாய்த் தோற்றம் தரும் நீல வண்ணப் பிரகாசம். இது வேறு கோலாகலம், இல்லையா?

நமக்குத் தெரியாத எதையும் நாம் விரும்ப முடியாது- Dylan தான் அறிந்த இடத்துக்கேச் செல்ல விரும்புகிறார்: விடியும் வரையாவது,

Then take me disappearin’ through the smoke rings of my mind
Down the foggy ruins of time, far past the frozen leaves
The haunted, frightened trees, out to the windy beach
Far from the twisted reach of crazy sorrow
Yes, to dance beneath the diamond sky with one hand waving free
Silhouetted by the sea, circled by the circus sands
With all memory and fate driven deep beneath the waves…

இதற்கு ட்ரான்ஸ்ட்ரெமர் பதில் தருகிறார்-

Somewhere there’s a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

எல்லைக்கு அப்பால் Dylanன் “My senses have been stripped, my hands can’t feel to grip/ My toes too numb to step” சுட்டும் deadness உயிர்ப்பு பெற்று கொண்டாட்டம் அடையும்.

இது ஒரு வகை வாசிப்பு. அவ்வளவே. இது சரியா தவறா என்று அறிய மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன:

௧. Bob Dylanன் இசை குறித்த அறிவு
௨. அவரது இசை ஸ்வீடிஷ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம், அதிலும் குறிப்பாக ட்ரான்ஸ்ட்ரெமர் ( ஒரு சுட்டி: http://www.typomag.com/issue07/introduction.html )
௩. ஆங்கிலம், ஸ்வீடிஷ், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் அறிந்தவர்கள், இந்த மொழி சார்ந்த பண்பாடுகளை நன்கு அறிந்தவர்கள்

இருப்பார்கள்.

உலகெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா? ஆனால் எதுவும் எழுத மாட்டார்கள். நமது பாழாய்ப் போன அரசியல், இலக்கிய அரசியலையும் சேர்த்தே சொல்கிறேன், அதைத்தான் பேசுவார்கள்.

தாங்கள் வாழும் சூழலைத் தமிழில் பேசுவோம் என்று நினைக்க மாட்டார்கள். மாற்றம் எப்படி வரும்?

என்னைப் போன்ற அகராதிகள் செய்கிற முரட்டு மொழிபெயர்ப்புகளை முன்வைத்து விவாதிப்பதுதான் தமிழனின் நிரந்தரத் தலைவிதி.

இது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

நன்று.

அமெரிக்க நண்பர் எழுதிய கடிதத்தை நகலெடுத்து ஒட்டுகிறேன்: ஏதோ தமிழனின் பார்வையை விரிக்க என்னாலான சேவை-

டாம்பொரீன் என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு, பாப் டிலனின் பாட்டை என்றோ கேட்டது நினைவு வந்து அங்கே போய்ப் பார்த்து உங்களுக்கு அனுப்பினேன். எனக்கு டிடி போன்றாருக்கு பாப் டிலன் தெரிந்திருக்குமா என்று தேடத் தோன்றவில்லை, ஆனால் சமூகவியல் கோணத்தில் ஒரு தலைமுறையின் வாத்தியம் இது என்று தோன்றி நிச்சயம் டிடி இதை டிலனின் பாட்டில் இருந்தோ, பீட்டில்ஸ் பாடல்களிலிருந்தோ கேட்டுத்தான் ஏதோ எழுதி இருக்கிறார் என்று தோன்றி அப்படிச் சொன்னேன். பீடில்ஸின் ஒரு பிரசித்தி பெற்ற பாட்டில் இந்த டாம்பொரீன் நிறைய இடம் பெற்றிருக்கிறது.

இந்த டாம்பொரீன் மான் என்ற பாட்டுக்கு ரொம்ப பிரக்யாதி உள்ள வரலாறு இருக்கிறது என்று விகி சொல்கிறது. படித்துப் பார்த்து வியப்புதான் எழுகிறது.

இப்போதுதான் பார்த்தேன். இதை எழுதும்போதுதான் பீடில்ஸின் பாட்டில் இந்த டாம்பொரீன் பயன்பட்டது நினைவு வந்தது. சென்ற சனி ஞாயிறன்றுதான் பீடில்ஸின் பாட்டுத் தொகுப்பு சிடி ஒன்றைப் போட்டுக் கேட்டிருந்தேன். ஸ்ட்ராபெரி ஃபீல்ட்ஸ் என்ற பாட்டின் துவக்கம் பிரமாதமாக இருந்தது என்று என் சகலையுடன் பேசிக் கொண்டிருந்தேன். இன்று பீடிட்ல்ஸுக்கு வேறு பக்கத்திலிருந்து தொடர்பு கிட்டுகிறது.

அது என் பல கால அபிமானப் பாட்டான, ஹேய் ஜூட் பாட்டில் நிறைய வருகிறது என்று இந்தக் கட்டுரை சொல்கிறது. கேட்கவே சந்தோஷமாக இருந்தது.

இவ்வளவு விஷயம் தெரிந்தவர்கள் ப்ளாக் வைத்து தமிழில் எழுத மாட்டார்கள். ஆங்கிலப் படங்களை சப் டைட்டில் உதவியுடன் பார்க்கும், ஆங்கிலப் பாடல்களை அதன் லிரிக்ஸ் என்ன என்று படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் என்னைப் போன்றவர்களே ஸ்ட்ராபெரி ஃபீல்ட்ஸையும் பேச வேண்டும்.

இதையே நீங்கள் படிக்க வேண்டும். விதி அப்படி இருக்கிறது, என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?

image credit : Fuzz Acid and Flowers

Advertisements

19 thoughts on “பதிவு

  1. 🙂

   நீங்க எல்லாம் தேர்ந்தெடுத்து எழுதறீங்க…

   நான் பாட்டுக்கு மனசுக்குத் தோணின மாதிரி எழுதிட்டே போயிட்டேன்….

   அதச் சொன்னேன்…

   உங்க கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி ஜி!

 1. சார் மிக்க நன்றி.உங்கள் பகிர்வுக்கு.அருமையான ஆய்வு.

  ஆனால் கவிஞர் தன்னுடைய அவதானிப்பிலிருந்துதான் tambour ஐப்பெற்றுக்கொண்டிருப்பார் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.

  எனது புரிதல் இப்படி….(மொழிபெயர்ப்பு அல்ல)

  ”நடுப்பனிக்காலம்…

  என் ஆடைகளிலிருந்து
  பரவுகிறது ஒளிர் நீலம்

  உறைபனிவெண்பறை அதிர்ந்துகொண்டே இருக்கிறது

  கண்களைமூடிக்கொள்ளுகிறேன்

  எங்கோ… இருக்கிறது அந்த உலகம்
  நிசப்தம் உறைந்த அதன்
  வாசல் திறந்தபடி..
  எல்லைகளுக்கும் அப்பால்
  இறந்தவர்களை யாரும் அறியாமல்
  கவர்ந்தபடி.”.

  (பதிவெழுதும் மனநிலை தேவையில்லை இனி. நினைத்த வுடன் எழுதுகிறீர்கள் 🙂 )

  1. நான் எழுதினதுக்குப் பேரு எழுத்து இல்லை, டைப்பிங் 🙂

   உங்கள் கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது – அதை கௌரவிக்கும் வகையில் தனி இடுகையாகப் பதிவு செய்கிறேன்.

   அதிலும் அந்த உறைபனி வெண்பறை! அதை ஒரு கவிஞனால் மட்டுமே தரித்திருக்க முடியும்.

   மிக்க நன்றி.

 2. நன்றி சார்

  உங்களுக்கு அது நன்றாகத்தெரிவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

  “கவிதைகள் காத்திருக்கின்றன
  கல்லினுள்ளே மறைந்திருக்கும்
  சிற்பம் போல
  உளியொன்று தம்மீது
  படுவதற்காக” :)…..

  உங்கள் அன்புக்கு நன்றி

 3. சார் இன்னொன்று

  மேலே நீங்கள்குறிப்பிட்ட வாத்தியம்… டம்பொரின் கொழும்புவில் பஸ் புறப்படக்காத்திருக்கிறபோது ஏறுகிற பாடகர்கள் இந்த ட ம்பரின் ஐ தட்டி ஒலித்தபடிதான் பாடுவார்கள் சிங்களப்பாடல்களை.
  பாடிமுடித்தபின் டம்பரினை திருப்பி ஒவ்வொரு இருக்கையாக நீட்டி சில்லறைகளை அதனுள் சேர்த்துக்கொள்வார்கள்.
  டம்பரின் வெளி ப்பக்கத்தோல் அழுக்காயிருக்கும் . ஒரு காலத்தில் வெண்பனி போல வெண்மையோடு பளபளத்திருக்கக்கூடும் அது.

 4. நீங்கள் ட ம்பரின் என்றே பெயர்த்திருக்கலாம், இல்லையா?

  ஆனால், சார், நீங்க ஒரு ஜீனியஸ் சார்- சந்தேகமே இல்லை.

  நீங்கள் கொழும்புவில் இந்த வாத்தியத்தை வாசிப்பார்கள் என்று எழுதியிருப்பதைப் படித்தவுடன், டட்ச் மொழியில் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தேன்- இந்தப் பதிவு கிடைத்தது. http://www.zuiderpershuis.be/events.php?id=806&parent=3&cat_id=2

  அதில் உள்ள இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:

  கட்டுரையில் உள்ள ஒரு வாக்கியம், “Mâ Ravan ‘is inspired by the ravanne (round tambourine) you can find both on the islands in the Indian Ocean and West Africa, India and Sri Lanka. This tambourine symbolizes the solidarity between peoples, between those who stayed and those who were deported,” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. deported என்பது departed என்று இருக்கலாம். சம்பந்தப்பட்ட டட்ச் சொல்: weggevoerd. இதற்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் என்றுதான் பொருள் (taken away).

  எதற்கும் விக்கிபீடியாதானே ஆதாரம்? அதில் தேடினேன்- http://en.wikipedia.org/wiki/Shamanism#cite_ref-129

  “The drum or tambourine is the essential means of communicating with spirits and transporting the shaman on supernatural journeys. The drum, representing the universe in epitome, is often divided into equal halves to represent the earth and lower regions. Symbols and natural objects are added to the drum representing natural forces and heavenly bodies.[131]” என்று சொல்கிறது அது.

  பாப் டிலானும் ட்ரான்ஸ்ட்ரெமரும் ஏன் தங்கள் கவிதைகளில் பறையொலி கேட்கிறார்கள் என்பது ஒருவாறு விளங்குகிறது. கடினமான சிக்கலைக் கட்டவிழ்க்கத் துணை செய்த தங்களுக்கு நன்றிகள் பல.

  கண்ணற்றவன் யானையைத் தடவிப் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் அடையும் நிறைவைத் தங்கள் உதவியால் இம்முறையும் அடைந்தேன்.

  மீண்டும் பல நன்றிகள்.

  அடுத்த வாசிப்பு எப்படிப்பட்ட காட்சியைக் கட்டவிழ்த்துக் காட்டுமோ தெரியவில்லை 😦

 5. சார்

  இதில் ஜீனியஸ்தனமெல்லாம் இல்லை. ஒரு இரகசியக்கவிதையொன்றில் குண்டுவெடிப்பை “ நிலம் பெரும்பறையெனவே அதிர்ந்தது” என்று எழுதியதாக ஞாபகம். 🙂

 6. உங்கள் வாசிப்பின் எல்லைகள் விரிந்தவை.சாதாரண வாசிப்பு முடிவடைகிற இடத்தில்தான் நீங்கள் தொடங்குகிறீர்கள்.பிரமிக்கவைக்கிறது

  1. இதெல்லாம் ரொம்ப ஓவரு….

   உண்மையில் இதில் எல்லாம் வியப்பதற்கோ விதந்தோதவோ ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்…உங்களுக்கு gestalt psychology பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை…

   “What may be gestalt psychology’s most enduring influence on art and design came from a paper by Max Wertheimer titled “Theory of Form,” published in 1923 [13]. Nicknamed “the dot essay” because it was illustrated with abstract patterns of dots and lines, Wertheimer concluded in it that certain gestalts are enhanced by our innate tendencies to constellate, or to see as “belonging together” elements that look alike (called “similarity grouping”), are close together (“proximity grouping”) or have structural economy (“good continuation”)…” – http://www.lycos.com/info/gestalt-psychology–max-wertheimer.html?page=3

   நம் புலனறிதலின் இயல்பு தொகுத்தலாக இருக்கிறது… தொகுக்கப்பட முடியாதவையை நம் மனம் ஏற்காது என்று நினைக்கிறேன். எனவே நம் அறிவுக்கு புலப்படும் எல்லாம் gestaltல் இருக்கின்றன, எதையும் எதனோடும் தொகுக்க மூடியும்: உரியவை/ அல்லாதவை, நெருக்கமாவை/ விலக்கமானவை, நீட்சியாகக் கூடியவை/ அவ்வாறல்லாதவை….

   இணக்கமாகவோ பிணக்கமாகவோ இருக்கக்கூடியதாக அல்லாதவை நமக்குப் புலப்படக்கூடுமா? எல்லாம் நாமறிந்ததுதான், அதைக் கூட்டிக் கலைத்து மீண்டும் கூட்டு சேர்க்கிறோம்…சில சமயம் விரும்பி, சில சமயம் கட்டாயத்தின் பேரில்.

   விருப்பத்துடன் செய்யும்போது கலையாகிறது, கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டி வரும்போது கவலையாகிறது!

   🙂

   1. நன்றாகச்சொன்னீர்கள்.நாங்கள் எண்ணங்களைத்தொடுத்து தொடர்பு படுத்திச்சிந்திக்கிறோம். associations அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப தொடுசல்கள் வேறுபடுகிறது.

    mind mapping -முறையை இதன் அடிப்படையில் தானே உருவாக்கியிருக்கிறார்கள்

 7. ஆஹா அருமை. எவ்வளவு பெரிய விஷயங்களைப் பத்தி அசால்டாப் பேசறீங்க. மேன்மேலும் இப்படி பல நல்ல பதிவுகளைக் கொடுங்க நண்பர்களே. ரொம்ப நன்றி நட்பாஸ், வரசித்தன்.

  1. வாழ்த்துகளுக்கு நன்றி 🙂

   நீங்கள் தரும் ஊக்கத்தால் இதில் இருக்கும் குழப்பத்தை எல்லாம் நீக்கி ஏற்கனவே எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு கட்டுரையாக இதைத் திருத்தி எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்….

   உதாரணத்துக்கு இங்கே ஒரு புறநானூற்றுப் பாடலைப் பாருங்கள்: http://puram400.blogspot.com/2011/07/263.html

   கையறு நிலையை உணர்த்தும் இந்தப் பாடலில் பறை யானையின் காலடித் தடம் போன்றது என்று கூறப்படுகிறது:

   “பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
   இரும்பறை இரவல! ” – “பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒருகண்ணுடைய பறையையுடைய இரவலனே!” (இரவலன் என்றால் பாணன் என்று பொருளாம்)

 8. சுவாரசியமான பதிவு. இப்போதுதான் இதைப் பார்க்கின்றேன். நீங்கள் midwinter ல் ‘a blue glow’ எனக்குறிப்பிடுவது Northern Lights எனக் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.நான் தமிழாக்கியபோது அதைத் தவறவிட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

  1. இதற்கெல்லாம் ஏன் நன்றி? ஏதோ குருடன் யானையைத் தடவிப் பார்ப்பது போன்றதான முயற்சி, அவ்வளவுதான.

   சுவாரசியமான பதிவு என்று தாங்கள் குறிப்பிட்டமைக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s