காடாற்றாமை.

ஊருக்குள்ளேயே

ஊரவரெல்லாம்

புதைக்கப்பட்டது

அறியவில்லை

ஊர்ச்சுடுகாடு

ஊருக்குவெளியே

இன்னும்

காத்துக்கிடக்கிறது

-வரசித்தன் –

Advertisements

11 thoughts on “காடாற்றாமை.

 1. //ஊரவரெல்லாம்// ???

  புரியவில்லை. ஏதோ ஒரு கருத்து ஆழமாக இருக்கிறது என்று புரிகிறது, ஆனால் அது விளங்கவில்லை.

  வானம் வெளுப்பது போல் மெல்ல மெல்லத்தான் பொருள் துளங்கும், இல்லையா?

  நன்றி.

     1. இன்னும் சிறிது மாற்றலாம்-

      ஊருக்குள்ளேயே

      ஊரவரெல்லாம்

      புதைக்கப்பட்டது

      அறியவில்லை

      ஊர்ச்சுடுகாடு

      ஊருக்குவெளியே

      இன்னும்

      காத்துக்கிடக்கிறது

      —-

      இந்த விஷயத்தைப் பற்றி எழுதவோ கருத்து தெரிவிக்கவோ கஷ்டமாக இருக்கிறது: இதை இலக்கியம், படைப்பு, ஆக்கம் என்றெல்லாம் பார்ப்பதே தப்பு என்று ஒரு கோணத்தில் தோன்றுகிறது. ஆனால், உறைந்த உணர்வுகளைப் பேச ஒரு மொழி தேவை, அதைச் செய்ய ஒரு கலைஞனால் மட்டுமே முடியும் என்றும் தோன்றுகிறது.

      எம்டிஎம் அவர்கள் அளித்த பேட்டியைப் படித்தீர்களா?- “ஒரு பெரிய இனப்படுகொலைக்குப் பிறகு இலக்கியமோ எழுத்தோ சாத்தியமில்லை என்பதுதான் உண்மை,” என்று சொல்கிறார். : http://www.thesundayindian.com/ta/story/about-national-folklore-support-centre/61/1346/

      இது சம்பந்தமாக ஒரு தீவிரமான கட்டுரை படித்தது நினைவுக்கு வந்தது: http://www.eurozine.com/articles/2011-09-23-semsandberg-en.html

      இந்த விவாதத்தில் உங்களைச் சிக்க வைக்க விரும்பவில்லை- மேற்கண்ட ஈரோசைன் கட்டுரையில் உள்ள விஷயங்களைத் தமிழில் எழுதலாமா என்று எம்டிஎம் சொன்னதைப் படித்ததும் எண்ணம் எழுகிறது

      என்னைப் பொருத்தவரை, நேரடியாக பாதிக்கப்படாதவர்கள் இதைக் கலையாக/ இலக்கியமாக அணுகக் கூடாது, படைப்பாளனாகவும் விமரிசகனாகவும் வாசகனாகவும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதற்கு அந்த ஈரோசைன் கட்டுரையில் சில விளக்கங்கள் இருக்கின்றன.

      நன்றி- பதில் எதிர்பார்த்து இந்தப் பின்னூட்டம் இடப்படவில்லை, அது அவசியமுமில்லை.

      1. நன்றி

       மாற்றிவிட்டேன்.

       அன்றைக்கு எழுதிய ஒரு கவிதையிலிருந்து அறிந்துகொண்டேன்.
       ” இதைத்தான் சொல்ல நினைத்தேன் நீ சொல்லிவிட்டாய் நன்றி ”

       இப்படி ஒருவர் உணர்வதை முதலில் இவை செய்கின்றன.
       அதற்குப்பிறகுதான் விமர்சனமோ என்னவோ

       எனக்கு முதலில் இதுபற்றிக்குழப்பம் இருந்தது.அதனால்தான் அடையாளமற்று டிவிட்டரில் எழுதினேன்.

       இப்போது ஒரு தெளிவு வந்திருக்கிறதாகத்தோன்றுகிறது. பார்ப்போம்.

       உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி

       1. இதையும் குறிப்பிடவேண்டும்.
        எம்டிஎம் ஐச்சொல்லியிருந்தீர்கள்.
        வெளியிலிருந்து பார்க்கும்போது பார்வை வேறுபடும்

        ஆனால் எனக்கு “ஆச்சியை என்ன செய்ய” என்ற அவர் கவிதையின் சொற்றொடர் முக்கியமானதாக கொளுக்கி போல நினைவுகளை சரம் சரமாக இழுத்தெடுத்தது

        இடப்பெயரும்போது ஆச்சியை மாத்திரமல்ல ,ஆட்டை என்ன செய்ய மாட்டை என்ன செய்ய , மனநிலை தவறிய மகளை என்ன செய்ய வாலைக்குழைத்துக்கொண்டு ஓடிவரும் நாயைக்கூட என்ன செய்ய , கடைசி நிமிடத்தில் கூட காயம்பட்டகணவனை என்ன செய்ய என்ற எல்லாச்சந்தர்ப்பங்களும் நினவுக்கு வரச்செய்தது அந்தத்தொடர்.

        பலர் பல முறை உணர்ச்சிக்கொந்தளிப்பில்/பதகளிப்போடு பாவித்த சொற்றொடர் அது
        இந்த தளத்தில் ஒரு எழுத்து இயங்கினாலே போதும்.

        சொல்ல நினைத்தவைகள்

        நன்றி சார்

        1. //ஆனால் எனக்கு “ஆச்சியை என்ன செய்ய” என்ற அவர் கவிதையின் சொற்றொடர் முக்கியமானதாக கொளுக்கி போல நினைவுகளை சரம் சரமாக இழுத்தெடுத்தது//

         ஒருத்தரைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் உடனே பாராட்டி விட வேண்டும்- அதற்குத்தானே ப்ளாக் இருக்கிறது?:)

         நீங்கள் எழுதியதை படித்த பின்தான் எனக்கு அந்தக் கவிதையின் ஆழம் புலப்பட்டது- அதுவரை அது ஒரு சிறுகதைக்குரிய நேர்த்தியான எதிர்பாரா திருப்பத்துடன் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

         ஆச்சியை என்ன செய்ய என்று யோசித்தவர்கள் ஆச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது: அப்போது அவளது அச்சங்கள் அவர்களுக்குத் புரிந்திருக்கலாம்.

         நல்ல கவிதை- நன்றி சார்!

       2. வழிகாட்டல் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்…. உண்மையில் நாம் அனைவரும் ஒருவரைக் கொண்டோருவர் வழி கண்டடைகிறோம்…

        மேற்கண்ட கவிதையில் மேலும் ஒரு சிறு திருத்தம் செய்யலாம்- அறியவில்லை என்பதைத் தொடர்ந்து அந்தக் காற்புள்ளி மற்றும் முற்றுப்புள்ளிகள் ஏன் குறுக்கிட்டு நிற்க வேண்டும்? அவற்றை நீக்கினால், ‘அறியவில்லை’யைத் தொடர்ந்து வரும் ஊர்ச்சுடுகாடு என்ற சொல், முன்னிருக்கும் மூன்று அடிகளுடன் இணைத்து வாசிக்கும்போது கடந்த காலத்தை அறியாத நிகழ் காலம் குறித்து ஒரு பொருளும், அதைத் தொடர்ந்த அடுத்த நான்கு அடிகளை வாசிக்கும்போது எதிர்காலம் குறித்த அச்சுறுத்தலைச் சுட்டும் நிகழ் காலம் குறித்த வேறு பொருளும் தருகிறது- இந்த இரு பொருளுமே ஒரு உணர்வையே வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

        மேலும், இப்படி வாசிக்கும்போது, சவத்துக்காகக் காத்துக் கிடக்கிறது இழவு என்ற பொருள் சொல்லாமலே, அந்தச் சொற்களில் இல்லாவிட்டாலும், அது உணர்த்தக்கூடிய உணர்வு வாசகனுக்குப் புலப்பட்டு விடுகிறது என்று தோன்றுகிறது.

        தவறாக ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறேனா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s