புதுக்குடியிருப்பு

ஒற்றையடிப்பாதைகள்

அற்றுப்போனதோர்

ஊர்

 

சுற்றிவளைத்தபடி

விதைப்பின்றிப்புதைத்தவை

வெடிக்கக் கிடக்கின்ற

வயல்வெளி

 

யன்னலூடே செடிகள்

கூரையினூடே மரம்

அத்திவாரத்தில்வேர்கள்

மூச்சுக்காற்று

மோதியசுவர்கள்

விரிந்து

அகம்புறமாகி

வீடுகள்

 

எப்போதோ வாழ்ந்த

ஆடுகள் விழுத்திய

இளங்கொடிவைத்துக்

கட்டியபைகள்

விழுதுகளோடு தொங்கும்

ஆலமரத்து நிழலில்

வடைமாலைக்கும்

பொங்கலுக்கும்

காத்திருக்கும்

வைரவர்

 

சுற்றுவது நிறுத்தப்பட்ட

கிணற்றுக்கப்பிகளிலிருந்து

எழுந்து

ஊரெங்கும் பரவியிருக்கும்

நிசப்தம்

 

கலைகிறது

 

குண்டுகள்

வட்டறுத்துக்

கொன்றுவிட்ட

பனைகளில்

புதிதாய்ப்

பொரித்திருக்கின்றன

குஞ்சுக்கிளிகள்.

 

***************

-வரசித்தன் –

*http://www.sangam.org/FB_PHOTOJAFFNA2002/47.jpg

Advertisements

6 thoughts on “புதுக்குடியிருப்பு

 1. Perfect என்ற சொல்லுக்குத் தமிழ் என்ன? ஒவ்வொரு சொல்லும் அதன் இடத்தில் விழுகின்றன- பொருள் நினைக்க நினைக்க விரிந்து செல்கிறது.

  புகைப்படத்தை இணைத்திருக்கலாமே? – கவிதையைப் படித்தபின் அதைப் பார்க்கும்போது அதிரச் செய்கிறது.

  கடைசி நான்கு அடிகள்…

  நீல நிறக் கதைபோல், இந்தக் கவிதையை நீண்ட நாட்கள் நினைத்துக் கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.

  நன்றி.

  1. லேட்டா கேக்கறேன்ன்னு கோபப்படாதீங்க-

   “ஆடுகள் விழுத்திய/ இளங்கொடிவைத்துக்/ கட்டியபைகள்/ விழுதுகளோடு தொங்கும்/ ஆலமரம்” என்ன?

   ஏதேனும் நம்பிக்கை? பிரார்த்தனை?

   தவறாகக் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

 2. “லேட்டா கேக்கறேன்ன்னு கோபப்படாதீங்க-
  தவறாகக் கேட்டிருந்தால் மன்னிக்கவும்.”

  என்னை தாதாவாகக்ருதுகிறீர்களோ? 🙂

  ஆடுகள் குட்டிபோடும்போது விழுகிற இளங்கொடியை சாக்குப்பையில் சுற்றிக்கட்டி ஒரு ஆலமரத்தில் தொங்கவிடுகிற வழக்கம் ஊர்ப்பகுதிகளில் இருக்கிறது

  நிகழ்காலத்தின் செயல்கள் எதிர்காலத்தைப்பாதிக்கும் என்ற அடிப்படையில் விளைந்த நம்பிக்கையோ அல்லது வேறு காரணமோ தெரியவில்லை

  1. எழுதியவரிடமே விளக்கம் கேட்பது அவமரியாதை என்று புரிகிறது, ஆனால் எனக்கு வேறு வழியில்லை. அதனால்தான் அப்படி மன்னிப்பெல்லாம் கேட்டேன்.

   நீங்கள் சொன்ன விஷயம் கவிதைக்கு இன்னும் ஆழம் தருகிறது, நன்றி.

   ஒரு சிறு குறிப்பு-

   எப்படி ஓசை நிறைந்திருக்க வேண்டிய இடத்தின் நிசப்தம் ஊரெங்கும் பரவுகிறதோ, அது போன்ற ஒரு விஷயம். முன்னெல்லாம் நீங்கள் எழுதுவது வெகுவாகவே கனமாக இருக்கும், ஆனால் இப்போது கொஞ்சம் லகுவாகி இருப்பது போல் தோன்றுகிறது – ஆனால், இப்படி லகுவாக சொல்வது அதன் ஆழத்தைக் கூட்டுவதாக இருக்கிறது…

   உதாரணத்துக்கு மொட்டைப் பனையின் குஞ்சுக் கிளிகள், புழுதி விதைப்பின் விதை நெல்லைக் கொண்டாடும் குருவிகள் – இவை நல்லது கெட்டதைத் தாண்டி இருப்பின் தன்மையைப் பேசுகின்றன என்று நினைக்கிறேன்.

   ரொம்ப ஓவராப் பேசக் கூடாது என்று விரதம் இருக்கிறேன். 🙂

   மீண்டும் நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s