ஒரு காட்சி

Advertisements

4 thoughts on “ஒரு காட்சி

 1. “The weight of this sad time we must obey;
  Speak what we feel, not what we ought to say.
  The oldest hath borne most: we that are young
  Shall never see so much, nor live so long.”

  துயரம்
  அழுத்துகிறவேளை
  அடங்கிப்போகிறேன்
  அதற்கு.

  பேசவேண்டியதை
  பேசுகிறேனில்லை
  பேசத்தோன்றியதைப்
  பேசுகிறேன்

  நான்
  கண்டு
  தாங்கிக்கடந்து
  கொண்டு
  வந்தவைகளைத்தான்
  வரலாறு என்கிறார்கள்
  இன்று
  இளையவர்கள்

  தெரிவு செய்து அளித்தமைக்கு நன்றி நட்பாஸ்

  1. எது பேச வேண்டியது எது பேசக் கூடாதது என்பதைச் சொல்வதற்கில்லை, இல்லையா?

   எனக்கு இந்த உரையை அடுத்து வரும் காட்சிப்படுத்தல்தான் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. மௌனத்தில், வெற்றுவெளியில் காட்சி முடிகிறது: இதன் பொருள் என்ன என்று யோசிக்கிறேன், புரியவில்லை.

 2. மேடையில் காட்சி உறைய திரைவிழுந்திருக்கும்.

  இங்கே ஃப்ரேமிலிருந்து உடல் மெல்ல இறங்கி மறைகிறது.
  திரை இருக்க காட்சி மறைகிறது.

  கிங் லியரா ப்ரேமிலிருந்து அகற்றப்படுவது?

  1. அதுதான் புரியவில்லை.

   இந்த அடிகளை நாடகத்தில் பேசுவது Duke of Albany, திரைப்படத்தில் பேசுவது Edgar.

   காட்சியிலிருந்து லியர் அகற்றப்படுகிறாரா? மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியைப் பார்க்கிறேன்.

   எட்கார் திரும்பிப் பார்க்கிறான். ஒளி அவன் முகத்தை நிறைக்கிறது.

   லியரின் கண்களில் துவங்கி காமெரா மேல்நோக்கி நகர்கிறது என்று நினைக்கிறேன், ஒரு அரை வட்டமாக- லியர் கீழ்நோக்கி சாய்வது போல் இருந்தாலும், அவனது கண்களில் துவங்கி, ஒரு சூரியோதயம் போல் அரைவட்ட வடிவில் காமிரா மேலேறி உச்சி வானில் நிற்கிறது என்று சொல்ல முடியுமா?

   நாடகத்தில் cordeliaவிடம் உனக்கு மற்றவர்களைவிட என்னை எவ்வளவு அதிகம் பிடிக்கும் என்று லியர் கேட்கும்போது, அவள் உண்மையை மட்டுமே சொல்வேன் என்கிறாள். அப்போது லியர், “Let it be so; thy truth, then, be thy dower:/ For, by the sacred radiance of the sun…” என்று சொல்லி அவளைக் கை கழுவுகிறான். எட்காரும் கை கழுவப்பட்டவனே என்று நினைக்கிறேன்.

   நாடகம் லியரின் கண்மூடித்தனத்தைப் பற்றியது, பார்வை, வெளிச்சம் என்றெல்லாம் போகிறது.

   எட்காருக்கு அந்த வசனம் ஏன் திரைப்படத்தில் தரப்பட்டது என்பதை யோசிக்க வேண்டும்.

   அடுத்தது கிங் லியரைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்! 🙂

   இந்த உரையாடலைப் பாருங்கள்: (எட்கார், எட்மண்ட் இருவரும் லியரின் மகன்கள், எட்மண்ட் முறைப்படி பிறந்தவனல்ல- அவன் நம்பிக்கை துரோகம் செய்து எட்காரின் வாழ்வைக் குலைக்கிறான்)

   EDGAR
   Let’s exchange charity.
   I am no less in blood than thou art, Edmund;
   If more, the more thou hast wrong’d me.
   My name is Edgar, and thy father’s son.
   The gods are just, and of our pleasant vices
   Make instruments to plague us:
   The dark and vicious place where thee he got
   Cost him his eyes.

   EDMUND
   Thou hast spoken right, ’tis true;
   The wheel is come full circle: I am here….

   திரைப்படத்தின் முடிவில், அரியணை பறிக்கப்பட எட்கார், லியரின் பார்வை இழப்பை, “The gods are just, and of our pleasant vices/ Make instruments to plague us:/ The dark and vicious place where thee he got/ Cost him his eyes.” என்று நியாயப்படுத்திய எட்கார், மேற்கண்ட கடைசி வசனத்தைப் பேசுகிறான்: ஆனால் பாருங்கள், எட்மண்ட் சொன்னதன் வேறு பொருளில், எட்கார்தான் “The wheel is come full circle: I am here….” என்று நிற்கிறான்.

   இந்த காலச் சக்கர சுழற்சியை முடிவு சுட்டுகிறதா?

   நம்மால் இந்த முடிவைப் புரிந்து கொள்ளவே முடியாது என்று நினைக்கிறேன்- ஆனால் படம் லியர் பற்றி மட்டுமல்ல, எட்கார் பற்றியும்தான், இல்லையா?

   நீங்கள் படம் பார்த்துவிட்டு எழுதுங்களேன்! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s