அடக்கவிலையில் ஐயாயிரம் கவிதைகள்!

 

மொத்தமாய்

ஒரே புத்தகமாய்

என்னுடைய கவிதைகள்

 

மனதைத்

தைப்பவை

ஒன்றாய்

வந்திருக்கின்றன

கைக்கும் அடக்கமாய்

பைக்கும்அடக்கமாய்.

 

நூறுவருடம்

கடந்தும் நிற்கும்

மட்காது

தண்ணீர் ஊறாத

தடித்த அட்டை.

 

பளபளப்பான

சட்டையும்

இருக்கிறது

அட்டைக்கு.

 

ஒரக்கண்ணால்

பார்த்தாலே

ஒட்டிக்கொள்ளும்

அட்டைஓவியம்

அரஸ்.

ஆதிமூலம்

உள்ளே.

 

வாசிக்க

வாசிக்க

மனசும் விரலும்

வழுக்கும்

வழுவழுப்பான

தாள்கள்.

 

ராமபாணம்

கரையான்

அண்டாத

விசேஷ கலவை

மை எழுத்துக்கள்.

 

ஓரத்து எழுத்துக்கள்

வெள்ளியில்

பக்கச்சுட்டிக்கு

சரிகை வேலைப்பாடோடு

பட்டுநூற்பின்னல்.

 

வரவேற்பறை

கண்ணாடி மேஜையில்

வைக்கலாம்

கம்பீரம்.

 

பிரத்தியேகப்பேட்டிக்கு

புத்தக அடுக்கில்

உங்கள் புன்னகையின் பின்னால்

பிரமாதமாய்த்தெரியும்.

 

திருமணப்பரிசு

பிறந்தநாள்கள்

வெள்ளிக்குத்துவிளக்கு

வாங்கத்தேவையில்லை

அறிவுஜீவியாய்

அளித்து மகிழலாம்.

 

உள்ளடக்கம்

மனசை

உருக்கும் உறைக்கும்

சுருக்கும் விரிக்கும்

நெருக்கும் முறிக்கும்

அறுக்கும் முறுக்கும்

நோவும் நீவும்.

 

படிக்கப்படிக்க

மனம்

ஆடும் பாடும்

அழும் சிரிக்கும்

தாவும் பாயும்

யுத்தம் செய்யும்

காதலிக்கும்

பேதலிக்கும்

புல்லரிக்கும்

புளகாங்கிதம் அடையும்.

 

அர்த்தங்கள்

எல்லாம்

அவரவர்

ஆதார நிலைப்படிக்கு

குண்டலினி கூட

எழலாம்

ஆக்ஞாவைத்தொடலாம்

ஆயிரம் தாமரை

இதழ்களும் விரியலாம்

*****

கவிதைகள்

அனைத்தும்

தங்கம்.

 

அறாவிலையில்

அடுத்தவர் கவிதை

பல்லிளிக்கும் பித்தளை.

 

கணக்குப்பாருங்கள்

என் கவிதைகள்

ஒரு கவிதைக்கு

ஐந்து காசு

கொள்ளை லாபம்

 

ஓடி வாருங்கள்

ஐந்து காசுக்கு

ஒவ்வொன்றும்

அற்புதம்

 

அடக்கவிலை

அய்யாயிரம் கவிதைகள்

மொத்தமாய் எடுத்தால்

முப்பது வீதம்

கழிவு!

முந்துங்கள்.

 

****************

-வரசித்தன் –

Advertisements

13 thoughts on “அடக்கவிலையில் ஐயாயிரம் கவிதைகள்!

 1. சார், யாரையும் பகடி பண்ணலியே?

  நீங்க அப்படி செய்ய மாட்டீங்கன்னு தெரியும், இருந்தாலும் உறுதி செஞ்சுக்க கேக்கறேன்..

  யாராவது தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க…

  இது கம்பன் முதற்கொண்டு நட்பாஸ் வரை அத்தனைக் மெகா கவிஞர்களுக்கும் பொருந்தும்தானே?

 2. நன்றி சார்

  பொதுவானது.

  “யாராவது தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க…”

  அவரவர்க்கு ஏற்ப புரிந்துகொள்ளப்படுவதுதானே எழுத்து.தப்பாகப்புரிந்துகொண்டாலும் அதுவும் சரிதானே சார் 🙂
  குறிப்பு:

  அநியாயத்துக்கு நான் உங்கள் தளத்தை ஹைஜாக் பண்ணிவிட்டதுபோல எழுதிக்கொண்டேயிருக்கிறேன்.
  நீங்கள் எதுவும் எழுதவில்லை(எழுதவிடவில்லை நான்?)

  எனது சூழ்நிலைகாரணாமாக இனிவரும் மூன்று மாதங்களுக்கு எதுவும் எழுதுவதில்லை என்றும் இணையப்பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை என்றும் ஒரு வைராக்கியம்? .பார்ப்போம்

  உங்கள் அன்புக்கும், பெருந்தன்மைக்கும் பொறுமைக்கும் எனது நன்றிகள்

 3. //எனது சூழ்நிலைகாரணாமாக இனிவரும் மூன்று மாதங்களுக்கு எதுவும் எழுதுவதில்லை என்றும் இணையப்பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை என்றும் ஒரு வைராக்கியம்? .பார்ப்போம்//

  ஐயையோ! இது என்ன மூன்று மாத கணக்கு!

  இருந்தாலும் இந்த வைராக்கியம் நன்மைக்கு என்றால் அதுவும் நல்லதே.

  அன்பு, பெருந்தன்மை பொறுமை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூரியனுக்கே சூடம் காட்டுவதா என்ற ஒரு தயக்கம்தான் 🙂

  நன்றி சார் – நிறைவு காண வாழ்த்துகள்.

 4. ஆயிரம் அற்புதங்கள் அடங்கினவொரு அற்புதம் என்றறியாது அடக்கம் என்பதனை அடக்கம் செய்தவைகள் பற்றிப் பேசும் அடக்கமான கவிதையென அசுவாரசிய வாசிப்புத் தொடங்கினவன் அடக்க மாட்டா ஆச்சர்யத்தோடு வாசித்து முடித்தேன்.

  (கொஞ்சம் மடக்கி மடக்கி முயன்றிருந்தால் இதுவும் பதில் கவிதை ஆகியிருக்கும் 🙂 )

  நன்றி டாக்டர்

   1. மறக்கக் கூடியதா அந்தக் கவிதை!

    பிக்காசோவின் ஓவியங்கள் மாதிரி ஒரு மார்க்கமா செய்திகளைச் சொல்லுமே அந்த அமர கவிதை!

    நீங்கள் கவிஞன் இல்லைன்னு யாராவது சொன்னா இங்க அவங்களை அனுப்புங்க, சர்ட்டிபிகேட்டோட டூப்ளிகேட் காப்பியை நான் சைன் பண்ணித் தரேன் 🙂

  1. ஆமாம், நீங்கள் உங்கள் கவிதையை வலையேற்றியதை அறியாமல் அதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் அதை இடுகையிட்டேன், தவறை உணர்ந்ததும், பதுக்கி வைத்து விட்டேன்.

   இதோ இப்போது அது மீண்டும் பதிவாகிறது…

 5. “குண்டலினி கூட
  எழலாம்
  ஆக்ஞாவைத்தொடலாம்”

  அருமையான வரிகள் நண்பரே!

  நம்ம தளத்தில்: dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html
  “அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? – பகுதி 1”

  1. பின்னூட்டத்துக்கு நன்றி சார்.

   நீங்கள் தந்த லிங்கை வெட்டி விட்டேன், தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் – இருப்பினும் நீங்கள் சொல்ல வந்த சேதி சேதமில்லாமல் வாசகர்களுக்குக் கிட்டும்.

   நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s