கடந்துபட்டதே மெய்யுள்ளுடைத்து

ஒரு சிறு முயற்சி. விருப்பமிருப்பவர்கள் இதை மேம்படுத்திக் கொள்ளலாம்.

*வல்லான் அதன் இரும்பில் இன்னும் வாழ்கிறான்,
எவன் ஒருபோது கொந்தளிக்கும் கடல்களிலும்
பொட்டல் வயல்களிலும், இறுதியில் வீணாய்,
மரணத்தை எதிர்கொண்டும் சமரிட்டுச் சுழற்றினானோ
அவன் இப்போது கோள்களின் துகள்கள்,
மரணமும் வீணே. இங்கே இருக்கிறான்,
ஒரு காப்பிய விதியால் உந்தப்பட்டவனாய்
நார்வேயை வெளியேறிய வெளிறிய வேட்டுவன்;
வாளே இன்றவன் தோற்றம், இன்றவன் பெயர்.
இப்பெரு நீள் மரணத்துக்கும் புறத்திருப்புக்குப் பின்னும்,
அவனது அமானுடக் கரம் தன் பிடியில்
இன்னும் இரும்பை இறுக்கிப் பற்றும்.
அவன் முன் நான் சாயலுள் சாயலாய் நிற்கிறேன்,
அவனோ இருந்தவன் சாயலில். நானொரு ஒற்றைக் கணம்.
இக்கணம் சாம்பல், வைரமல்ல,
எது கடந்துபட்டதோ அதுவே மெய்யுள்ளுடைத்து

The strong man in its iron still lives on, என்று துவங்கும் இந்த கவிதையை எழுதியவர் போர்ஹே. மொழிபெயர்த்தவர் சார்லஸ் டாம்லின்சன். கவிதை இங்கே.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s