ஒரு முன்னுரை…

க நா சுப்ரமண்யம் அவர்கள் “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கிய வட்டக் கட்டுரைகள் தொகுப்புக்கு 1985ம் ஆண்டு எழுதிய முன்னுரை….

இந்த நூலைப் பற்றி

இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே 1963-65 காகட்டத்தில் நான் முழு இலக்கியப் பத்திரிகைக்காக நடத்திய இலக்கிய வட்டத்தில் எழுதப்பட்டவை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றைச் சேர்த்து ஒரு நூலாக வெளியிட முயலும்போது, அநேகமாக எவ்விதமான மாறுதலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது என்பது பற்றித் தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பெருமளவில் மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்திருந்தால் இத்தக் கட்டுரைகளை நான் எழுதிய நோக்கம் நிறைவேறிவிட்டதாக எண்ணி நான் பெருமைப்பட முடியும்; அதற்கு இடமில்லை.

நான் இந்தக் கட்டுரைகளை எழுதிய காலத்தில் நகுலன் எழுதத் தொடங்கியிருந்தார். ஆனால் அவருக்கு இன்று இருப்பது போல ஒரு சிறு வாசக ரசிகர் கூட்டம் இல்லை. எனக்குத் தெரிந்து அந்த நாட்களில் அசோகமித்திரன், சா கந்தசாமி, தருமு. சிவராமு, நீலபத்மநாபன், ராஜ நாராயணன், வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி முதலியவர்கள் எழுதத் தொடங்கவில்லை. அதனால் அவர்களைப் பற்றி எல்லாம் இந்த நூல் கட்டுரைகளில் ஒன்றும் கூறப்படவில்லை. இன்று இந்தக் கட்டுரைகளை எழுதியிருந்தால் பழைய பெயர்களைச் சொல்லியது போல, இவர்களுடைய பெயர்களையும் அங்கங்கே சொல்லியிருப்பேன்.

இலக்கியப் போக்குகள், பத்திரிக்கைப் போக்குகள், பேராசிரியர் போக்குகள் இந்த இருபது வருஷங்களில் அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் பின்னிரு போக்குகளிலும் இலக்கியத்தைப் பற்றிய வரையில் நிலமை மோசமாகயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்; ஓர் அலக்ஷ்யம் அசட்டை அதிகரித்திருப்பதாகச் சொல்லலாம். எனினும் இலக்கியப் போக்கு தனி மனித முயற்சியாக ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறதாக இன்னமும் விளங்குகிறது, தொடருகிறது.

இலக்கிய விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கையும் குறைவு. எனது நண்பர்கள் செல்லப்பா, வெங்கட சுவாமிநாதன், சுந்தர ராமசாமி, நீலபத்மநாபன் போன்றவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல எனக்கு விமரிசனத்தில் ஆற்றலும் குறைவு. இந்த நண்பர்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். இலக்கியத்தில் செய்ய வேண்டிய விமர்சனத்தைச் செய்யும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று ஏற்பட்டு விட்டால், நான் விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு எனக்குப் பிடித்த நூல்களைப் படிப்பதில் எஞ்சியிருக்கும் காலத்தைச் செலவிட்டு விடுவேன்.

நான் விமர்சனம் செய்வதன் நோக்கமே ஒரு சில நூல்களாவது ஒரு சில வாசகர்களை எட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான். தமிழில் இன்னமும் நல்ல வாசகர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் அதிகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். நல்ல வாசக பரம்பரை இரண்டாயிரம், மூவாயிரம் என்று பெருக வேண்டும்; இது மிக அவசியம்.

இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு, முன்னூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்க விடாமல் எண்ணெய் வார்த்து, திரி போட்டுக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக் கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

மைலாப்பூர், 15-12-1985, க. நா. சுப்ரமண்யம்

Advertisements

5 thoughts on “ஒரு முன்னுரை…

 1. அருமை! வாழ்த்துக்கள்!
  பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது…
  பகிர்விற்கு நன்றி!
  படிக்க! சிந்திக்க! :dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html:
  “உங்களின் மந்திரச் சொல் என்ன?”

  1. சார்!

   வை திஸ் கொலவெறி?!

   இந்த மாதிரி ப்ளாகில் எல்லாம் பின்னூட்டம் போடுவது டயம் வேஸ்ட் சார். இதே நேரத்தை நீங்கள் டிவிட்டர் உரையாடலில் செலவழிப்பீர்களானால் உங்க ப்ளாகோட ஹிட் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிக்கும்.

   ஒரு நாளைக்கு இங்கே இருபது பேர் வந்தால் அதிகம். அதில் எத்தனை பேர் தங்கள் மந்திரச் சொல்லைத் தேடி உங்கள் ப்ளாகுக்கு வரப்போகிறார்கள்?

   கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!

   1. சார்! இதுபோல பதிவுகளைப் படிக்க உங்க வீடு தேடி வந்து அழைப்பவர்களை இப்படி உதாசீனம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா மறுமொழிகளை மட்டுறுருறுருறுருத்து வெளியிடாம இருக்கலாம். வீட்டைத் திறந்து வெச்சிட்டு, விருந்தாளியின் வெத்தலைப் பாக்கை வாங்கிக்க மாட்டேன்னு சொல்றது என்னா நியாயம்?

    1. ஜி,

     உங்களை மாதிரி தினமும் ஆயிரம் ஹிட் அடிக்கற இடத்துல வெத்தல பாக்கு வெச்சு அழைச்சா நியாயம், அதை நான் ஊக்குவிக்கறேன்.

     இந்த மாதிரி ஆளே இல்லாத டீக்கடை, பேயாடும் மண்டபம் இங்கல்லாம் அழைப்பு வெச்சா அது வெச்ச்சவங்களுக்கு மரியாதையாவா இருக்கு?

     ஒரு நல்ல எண்ணத்துல சொன்னா இப்படி சண்டைக்கு வரீங்களே, வருத்தமா இருக்கு. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s