ஆர்விக்கு ஒரு வாழ்த்து

பட்டாசுக் கடையையும் மிட்டாய்க் கடையையும் ஒரு சேரப் பார்க்கக் கிடைத்த குழந்தையின் கண்களில் தெரியும் பரவசத்துடன் புத்தகங்களைப் பேசும் அருமை நண்பர் வளரும் விமர்சகர் ஆர்வி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளாய் க நா சுப்ரமண்யம் அவர்கள் எழுதிய இந்த மூன்று மேற்கோள்களையும் அன்புடன் அர்ப்பணிக்கிறேன்.

 • இன்று அரசியலில் பலருக்கும், சினிமாவில் எல்லாருக்கும், உள்ளது போல இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள சிலருக்கு எரிச்சலூட்டுவதாக இலக்கிய விமரிசனம் அமைய வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். உண்மையானது, என் வரையில் உண்மையானது, உலகம் பூராவுக்கும் உண்மையானதாகவோ சரியானதாகவோ இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியதில்லை. இலக்கிய அனுபவமே, ரஸனையே, தனிமனிதனுடைய, தனிப்பட்ட ஒரு காரியம்; அதிலே பொதுமை அவசியமில்லை, என் சித்தாந்தங்களில் சில பிறனுக்கு, அவனும் இலக்கியத்தில் என் அளவு ஈடுபாடுள்ளவனானால், எரிச்ச்சலூட்டத்தான் செய்யும். இந்த எரிச்சல், அதன் காரணமாக எழுகிற கோபம், இரண்டுமே நல்லதுதான் – நல்ல காரியத்துக்குப் பயன்படும். அதை விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
 • செய்ய வேண்டிய கார்யங்கள் நிறையவுண்டு. அதில் அடிப்படைகளை நினைவுபடுத்திக் கொள்வதும்- அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதும் ஒன்று. வேறு ஏதோ பிரமாதமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு ஸ்திரமற்ற அஸ்திவாரத்தில் கோட்டைகள் கட்டிப் பயன் இல்லை. அடிப்படைகளை நினைவுபடுத்திக் கொள்வதுடன், அடுத்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைக்காதிருப்பதும் நியாயமாக செய்யப்பட வேண்டிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது…
 • அவரவர் அளவில், அவரவருக்குத் தெரிந்த அளவில் விமரிசனம் நையாண்டியாகவோ, விஷமத்தனமாகவோ, ஸீரியசாகவோ, தரமதிப்பீடாகவோ, பேதமையாகவோ நடந்துகொண்டேதான் வர வேண்டும். என் வழி இரண்டாமவனுக்கு சரிப்பட்டு வராது – மூன்றாவது வழி இரண்டாமவனுக்கு சரிப்பட்டு வராது – நாலாவது வழி முதல் மூன்று பேருக்கும் சரிப்பட்டு வராது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நையாண்டியாகவோ, ஒருவரை ஒருவர் பரிகசித்துக் கொள்ளலாம் – அதில் தவறில்லை. விவாதம் நடத்தி முடிவுகள் கட்டி விட்டு மேலே போ என்றோ, நீ இப்படிச் செய், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதோ சரியல்ல.

—-

சென்ற ஆண்டின் சில ரசிக்கத்தக்க விமரிசனங்களை எழுதிய ஆர்வி அவர்கள் இவ்வாண்டு  கள்ளிப் பெட்டியில் பிரித்து மேயத்தக்க காத்திரமான சிறுகதைகளையும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Advertisements

12 thoughts on “ஆர்விக்கு ஒரு வாழ்த்து

  1. மிக்க நன்றி சார்.

   விளையாட்டாகச் செய்தது 🙂

   ஆனால் அதற்காக ஸ்மைலி இருப்பதால் சீரியஸ் இல்லை என்றும் ஆகிவிடாது 🙂

   உங்களுக்கு சிறப்பான புத்தாண்டு அமைய சிறப்பான தனி வாழ்த்துகள் – இந்த ஆண்டு நீங்கள் நாலு கதையாவது பேர் சொல்ற மாதிரி எழுத வேண்டும்.

   நன்றி.

 1. நன்றி… 🙂

  // நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாட வெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய ‘நோக்கமோ’ ‘அர்த்தமோ’ இல்லை.//

  இதை நானும் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

   1. நீங்களும் கொலவெறி க்ரூப்புதானா?! 🙂

    ஆசானின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு 🙂

    இருந்தாலும் குறுந்தொகை பாடல்களை சொந்தமாக ட்யூன் போட்டு பாடி டெடிகேட் செய்தால் கூடுதல் ஆசிகள் கிடைக்கலாம் 🙂

    அப்புறம்?

    ஏதோ புக்கெல்லாம் வாங்கினீங்கன்னு டிவிட்டரில் படித்தேன், எப்போ அதைப் பற்றி கட்டுரையில் எழுதப் போறீங்க? அங்கே இசை மட்டும்தானா?

    நினைவின் நதியில் பற்றி நீங்க எழுதுவதைப் படிக்க ஆவலா இருக்கேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s