ஒரு சிறு கெட்ட கனவு

நல்ல வேளை கிருஷ்ணசாமி சார் கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தார் அவர் பேசுவது ஞானத்துக்குக் கேட்டது ஞானம் பேசுவது அவருக்குக் கேட்கும் கேட்காமலும் இருக்கலாம் ஆனால் அவரால் அந்தக் கண்ணாடி அறையிலிருந்து வெளியே வந்து வகுப்பு மாதிரி ஞானத்தின் மீது கை வைக்க முடியவில்லை அது வாசல்களே இல்லாத ஒரு கண்ணாடி அறை மாதிரி இருந்தது கண்ணாடி அறை என்று சொல்வதுகூட சரியில்லை தீவு என்பதுதான் சரியாக இருக்கும் மூன்றடி தொலைவில் இருக்கும் தீவு ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பவன்கூட இந்த காலத்தில் ஒரு நொடியில் கைபேசியில் அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டுவிட முடிகிறது ஆனால் இந்த மாதிரி இருவேறு மூன்றடி தொலைவு தீவுகளில் இருந்து கொண்டு  பேச முடிவதில்லை சில விஷயங்களை மட்டும்தான் பேச முடிகிறது அப்படியே பேசினாலும் சில விஷயங்கள்தான் காதில் சரியாக விழுகிறது இந்த மாதிரி மூன்றடி தூர கண்ணாடி அறைகளில் இருப்பதைவிட ஆர்க்டிக் கண்டத்துக்கே போய் விடலாம் என்று ஞானம் நினைத்துக் கொண்டான் இருந்தாலும் இந்த மாதிரி கண்ணாடி அறைக்குள் கிருஷ்ணசாமி சார் இருப்பதில் ஒரு சௌகரியம் இருந்தது அவர் வெளியே வந்து அடிக்கவே மாட்டார் வகுப்பில் பாடத்தை கவனிப்பதைவிட அவரை கவனிக்கும் நேரமே அதிகமாக இருக்கும் சுர்ரென்று கோபம் வந்து விடும் வரச்சோலை சார் மாதிரி குனிய வைத்து முதுகில் குத்து மழை பொழிய மாட்டார் என்பதென்னவோ சரிதான் ஆனால் கிருஷ்ணசாமி சார் கையில் இருக்கும் பிரம்பு இருக்கிறதே அது எப்போது எப்படி எங்கே பாயும் என்பதைச் சொல்லவே முடியாது எனவே இந்த மாதிரி கண்ணாடி அறையில் அவர் இருந்ததும் வசதியாகத்தான் இருந்தது சில அசௌகரியங்கள் இருந்தது இல்லை என்று சொல்ல முடியாது என்ன இருந்தாலும் நேரில் பார்த்து பேசுகிற மாதிரி வருமா என்று நில்னைத்துக் கொண்டிருந்தபோது கிருஷ்ணசாமி சாரை சாலையில் கொஞ்சம் முன்னே ஞானம் பார்த்துவிட்டான் சார் சார் ரெண்டு நிமிஷம் என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் தன்னையறியாமல் ஓடினான் ஆனால் அவர் காதில் அவனது குரல் விவிவிழவில்லையோ என்னவோ கிருஷ்ணசாமி சார் சடுதியில் கூட்டத்தில் இருந்த தலைகளுள் தலையாக மறைந்து விட்டார் அப்புறம் இரண்டொரு தடவை அவரது தலை தென்பட்ட மாதிரி இருந்தது ஞானத்தை அவர் கடைசி வரை பார்க்கவே இல்லை எப்படி நடந்தது என்பது கூட புரியவில்லை கிருஷ்ணசாமி சார் கண்ணாடி அறைக்குள் இருந்தார் ஞானம் நல்ல வேளை அவர் என்னுடன் பேசியிருந்தால் அப்புறம் கண்ணாடி அறைக்குள் போயிருக்க மாட்டார் நான் இந்த மாதிரி ப்ரீயாக இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்

எரிமலைக் குழம்பில் விழுந்த மாதிரி ஞானத்தின் உலகம் சிவந்தது. அவனது கன்னங்கள் வெம்மைகூடி எரிச்சலாகி கண்ணில் முள்ளைக் குத்திய மாதிரி கண்ணீர் வடிந்தது.

“இடியட்! ராஸ்கல்!” போடா வெளியே!”

கையில் பிரம்போடு கிருஷ்ணசாமி சார் நின்று கொண்டிருந்தார்.

OoOoOoO

(ரெண்டாவது பரிசு அது இது என்று பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் யார் யாரையோ தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள்,  நமக்கு யாரும் எதுவும் கொடுக்க மாட்டேனென்கிறார்களே என்று, உங்களிடம் சொல்வதற்கென்ன, பொறாமையாக இருக்கிறது. அதனால்தான் இந்த பின் நவீனத்துவ முயற்சி. நமக்கு என்ன கிடைக்கிறது பார்க்கலாம்)

4 thoughts on “ஒரு சிறு கெட்ட கனவு

 1. சார்..நீங்க சொல்றதை நானும் கேள்விபட்டேன் சார். கிருஷ்ணசாமி சார் மட்டும் கண்ணாடி அறையை விட்டு வெளியே வரட்டும் சார், அவருக்கு தான் முதல் பரிசு 🙂

  1. பரிசு இல்லாட்டிகூட பரவாயில்லை சார், கிருஷ்ணசாமி சார் கண்ணாடி ரூமுக்குள்ளயே சிங்கமா சிங்கிளா இருக்கட்டும் சார், அதுதான் ஹீரோவுக்கு நல்லது சார்! 🙂

 2. முதலில் மன்னிக்கவும். நான் பதில் போட வேண்டியது முந்தைய வீட்டுக்கு. அங்கே பூட்டியிருந்ததால் இங்கே போடுகிறேன். (இந்த கூரியர்காரர்களெல்லாம் ஒரு வீட்டில் ஆளில்லை என்றால் அடுத்த வீட்டிலோ எதிர் வீட்டிலோ கொடுப்பார்களே அதுமாதிரி)

  இனி என் மறுமொழி…

  //ஆங்கில எழுத்துப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளேன்.// வாழ்த்துக்கள் சார்! 🙂

  1. According to me, as per your wishes, we will become international writers sir. All proud adding toTamil people sir.

   Letter delivered to the right address, thank you, irregardless of the neighbour’s locked doors policy.

   Thanks for your encouraging commentrary!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s