ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது

.. 🙂

மகளே ஜீவா, உன் ஒவ்வொரு தேர்விலும் இப்பேரண்டம்
பிளவுற்றுப் பல்கிப் பெருகும் – உன் பயணிக்காத பாதைகள்
வேறொரு அண்டத்தில் பயணித்தனவாகும்.

உன் முன் விரியும் இரு பாதைகளில் எதிலும் நீ செல்லலாம்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும் மாறி விடப் போவதில்லை,
இவ்வுலகம் ஆசையின் வடிவம்.

ஒன்றல்ல உலகம், மீண்டும் சொல்கிறேன் கேள்
(இது கவிதை), ஒன்றல்ல உலகம் – உன் ஒவ்வொரு தேர்விலும்
இப்பேரண்டம் பல்கிப் பெருகும்.

முகமற்ற சாத்தியங்களையும், இழந்த வாய்ப்புகளையும் எண்ணி
கலங்கி நில்லாதே – பலப் பேரண்டங்கள் பிறக்கக் கண்ட
முச்சந்திப் பிள்ளையார் நான்.

மகளே ஜீவா, நான் அறியாத உலகங்கள் எனக்களிக்கும் இன்பம்
நானறியும் இவ்வுலகில் என் துன்பங்கள் தீர்க்கும் மருந்தல்ல
எனில், உனக்காக வருந்துவேன்.

அறியாத போதும் அழ வைக்கும் உன் இழந்த சாத்தியங்கள்
உன்நினைவில் உனக்களிக்கும் துன்பம், நீயறியும் இவ்வுலகில்
நிழலாடவில்லையா, பெண்ணே கேள்.

காண்டீவனின் கேள்வியை எதிர்கொண்ட கண்ணன் முன்
இரு உலகங்கள் விரிந்தன – பகவத் கீதை பிறந்தது ஒன்றில்,
ஜீவகீதை பிறந்தது மற்றொன்றில்.

ஒவ்வொரு தேர்வும் ஓர் உலகாக்கும் – உண்மையைச் சொன்னால்
உனக்கழிவில்லை, உன் தேர்வுகள் பொய்க்காது, உன் சாத்தியங்கள்
இழக்கப்படுவதில்லை. நீ ஜீவபிரக்ஞா.

கேள், எனக்கொரு சிதறு தேங்காய் விடு/ விடாதே இன்னொரு உலகில்
வேறொரு ஜீவா அதைச் செய்வாள். போ. உன் வழி செல்.
என் ஆசிகள் உனக்கு உண்டெனினும்

நீ செல்லா வழியில் உன்னைப் பின் தொடர்வேன். முச்சந்தியின்
தனிமை அலுப்பாய் இருக்கிறது- கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதுவும்
மாறி விடாது எனினும்.

4 thoughts on “ஒரு முச்சந்திப் பிள்ளையார் சொன்னது

 1. இரு பாதைகளில் …. // முச்சந்தினா மூணு பாதைல இருக்கனும்

  எனிக்கி ரொம்ப நாளா ஒரு டவுட் சாரே புள்ளயாரை ஏன் சாரே முச்சந்தீல நிக்கவைக்கிறொங்க 🙂

  1. ௧. வந்த பாதை ஒண்ணு – நம் முன் நிற்கும் பாதைகள் ரெண்டு. ஆக மொத்தம் மூன்று பாதைகள் இருந்தாலும் நம்மை எதிர்கொள்ளும் பாதைகள் இரண்டே

   ௨. பிள்ளையார் முச்சந்தியில் நிற்கும் காரணம் இக்கவிதையிலேயே இருக்கிறது- முச்சந்தியில் நிற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

   ௩. கவிஞனே கவிதையை விளக்குவதைவிடக் கொடுமை வேறில்லை. ஆனால் நல்ல வேளையாக இங்கு நான் கவிஞன் இல்லை என்பதால் ஒரு சிறு குறிப்பு-

   இக்கவிதையின் கனபரிமாணங்களை முழுமையாக அறிந்து கொள்ள அவகாசப்பட்ட நேரத்தில் கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படிக்கலாம்-

   http://en.wikipedia.org/wiki/Multiverse

   http://www.quora.com/What-is-Richard-Feynmans-sum-over-paths-approach-to-quantum-mechanics

   🙂

   பின்னூட்டத்துக்கு நன்றிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s