நண்பர்களுக்கு நன்றி

சென்ற  சில வாரங்களின் ஏதோ ஒரு பொன்னான நாளில் நம் ப்ளாக் தனது முப்பதாயிரமாவது ஹிட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நாம் பத்தாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதிவையும் , இருபதாயிரமாவது ஹிட் பெற்றபோது எழுதியவையும் அனைத்தும் இன்றும் பொருந்தும்.

௧. சாய் இங்கு பின்னூட்டம் போடுவதில்லை. ஆனால், நேரிலும் தொலைபேசியிலும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்க்றார்.

௨. கிரி- அவ்வப்போது பின்னூட்டம் போட்டாலும், பதிவுலகில் நான் பழகிய ஆகப்பெரிய பதிவாளுமை நண்பர் என்ற வகையில் துணையாக இருக்கிறார்.  நிமிஷக்கதைகள் எழுதித் தருகிறேன் என்று சொன்னார், ஆனால் பாராட்டுக்குரிய கட்டுரையாளராகி விட்டார். எங்கிருந்தாலும் வாழ்க!

௩. அஞா- வளர்ந்து விட்டார்- அவரது பகிர்வுகளை ரீடரில் பார்க்கும்போது, நன்றாக இருக்கிறார் என்று அறிந்து மகிழ்கிறேன். குகூள் ப்ளஸில் அவ்வப்போது எதிர்படுகிறார். நண்பருக்கு நன்றி.

௩.. வரசித்தன்- மனச்சோர்வடைந்து இடைவெளி வரும்போதும், வேறு காரணங்களால் அமைதியாக இருக்கும்போதும் வரசித்தன் அவர்கள் எனக்கு புத்துணர்வு தரும் ஊக்க சக்தியாக இருக்கிறார் (தற்போது விடுப்பில் சென்றிருப்பதாக அறிகிறேன்)

௪.. ஜெயமோகன்- விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இந்த பிளாகின் நீண்ட நாள் வாசகர்கள்🙂 உண்மையை அறிவார்கள்- இன்னமும் தீவிரமாகவே அறிவார்கள்.

௫. பல புது எழுத்தாளர்கள் வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் அறிமுக அளவிலேயே நின்று விட்டது வருத்தமளிக்கிறது😦

———————–

வழக்கமாக எழுத்தில் தேக்க நிலை ஏற்படும்போது எதிர்பாராத திசையில் திரும்பிச் செல்வது வழக்கம். இங்கு இருமுறை அது நிகழ்ந்திருகிறது. மூன்றாவது முயற்சி தோற்றுப் போனது.  நான்காவது முயற்சி அரைகுறை நிலையில் கைவிடப்பட்டது. ஐந்தாவது முயற்சி தொடர்கிறது.

யாருக்காக எழுதுகிறேன் என்ற கேள்வியே என்ன எழுதுகிறேன் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதை முழுமையாக உணர்கிறேன்.   இன்றைய நிலையில் இனி தியான சுலோகங்களைதான் எழுத வேண்டும்.  தியானம் சித்திக்காத நிலையில் தியான சுலோகங்களை மட்டும் எழுதுவது எங்ஙனம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

வாழ்க!

9 thoughts on “நண்பர்களுக்கு நன்றி

    • மிக்க நன்றி சார்.

      உங்க ப்ளாகைப் படித்திருக்கிறேன் – ஒரு பரிந்துரை பதிவை விரைவிலேயே எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

      .

  1. வாழ்த்துகள் நட்பாஸ்!

    என்னை மறந்திட்டீங்களே! நானும் உங்க பிளாகின் நீண்ட நாள் வாசகன் – முப்பதாயிரத்தில் மூவாயிரத்துக்குச் சொந்தக்காரன்.

    கிரி

    • இப்படியெல்லாம் ரகசியத்தை உடைக்கக் கூடாது – நானே முப்பதாயிரம் ஹிட்டும் முப்பதாயிரம் வாசகர்கள்னு மெயின்டேய்ன் பண்ணிக்கிட்டிருக்கேன்.

      உங்களுக்கு ஒரு தனி பதிவு ரெடியாகிக்கிட்டு இருக்கு🙂

  2. வாழ்த்துக்கள் சார்.. இப்போதுதான் படிக்க முடிந்தது.🙂

    //அஞா- வளர்ந்து விட்டார்- அவரது பகிர்வுகளை ரீடரில் பார்க்கும்போது, நன்றாக இருக்கிறார் என்று அறிந்து மகிழ்கிறேன். குகூள் ப்ளஸில் அவ்வப்போது எதிர்படுகிறார். நண்பருக்கு நன்றி.//
    🙂 ரொம்ப நன்றி சார். ஆனால் நான் இன்னும் வளர்ந்துட்டு தான் இருக்கேன், இன்னமும் வளர்வேன்…

    //வரசித்தன்//

    நானும் ரொம்ப நாளா இவரை தேடிட்டிருக்கேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s