முரண்நகைகள்

மற்றவர்களைவிட வக்கரித்துக் கொண்டவர்களுக்கு மனதின் இயல்பு, அதன் முடிச்சுகளும் இருட்பள்ளங்களும், தெளிவாகத் தெரிகிறது.  நம் மன ஓட்டத்தை எளிதில் அனுமானிக்கிறார்கள் அவர்கள், எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை கணப்பொழுதில் உணர்த்து கொள்கிறார்கள். உலகை நிறைத்திருக்கும் நகைமுரண்களில் இதுவும் ஒன்று :  இந்த உள்ளுணர்வின் வரம்தான் சாபமாகி அவர்கள் வாழ்வைப் பொசுக்கி விடுகிறதோ என்னவோ.

அன்றைக்கென்று பார்த்து ஜெகன் மேடத்தைத் தவிர்த்தான். அன்று மேடம் ஓய்வு பெரும் நாள்.  அதற்கு முந்தைய மூன்று மாதங்களாகவே அவன் மெல்ல மெல்ல விலகி வந்திருந்தான். இன்று முழுக்கவும் தவிர்த்து விட்டான். இத்தனைக்கும் மேடத்தின் நெருங்கிய தோழர் ஒருவர், “ஜெகன், உன்னை மேடம் தேடறாங்கடா,” என்று ஒரு தடவையும், “டேய், காலைல இருந்து எங்க ஜெகன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்கடா, வந்து பாத்துட்டுப் போயிடு,”  என்று ஒரு முறையும், “ஏண்டா ஜெகன், என்னடா ஆச்சு உனக்கு, மேடம் வருத்தப்படறாங்கடா, ஏன் ஜெகன் இப்படி நடந்துக்கறான்னு,” என்று ஒரு முறையும், “இன்னிக்கு அவங்களுக்குக் கடைசி நாள்டா, இப்படி செய்யாதடா, போய் ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடுடா,” என்று ஒரு முறையும், “மேடம் கிளம்பறாங்கடா, ஒரு ரெண்டு நிமிஷம் வந்துட்டு போயிடுடா” என்று கடைசியாகவும் அழைத்திருந்தார்.

“மேடத்தைச் சுத்தி நிறைய பேர் இருக்காங்க, கொஞ்சம் கூட்டம் குறையட்டும்,” என்பதுதான் ஜெகனின் ஒரே பதிலாக இருந்தது.  ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு வரும்போது ஐந்தாவது மாடியில் எதிர்பாரா உடன்நிகழ்வாய் மேடம் செல்லில் பேசியபடி எதிர்பட்டார்கள்.  நல்ல வேளை, தனியாகதான் வந்தார்கள்.

“ஹாப்பி ரிடையர்ட் லைப், மேடம்!” என்றான் ஜெகன்.

“ஏன் வரலை?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டுவிட்டு பதிலுக்குக்கூட நிற்காமல் வேகமாக அவனைக் கடந்து சென்றார்கள் மேடம்.

கன்னத்தில் அறைந்தது போல் அங்கேயே நின்றுவிட்டான் ஜெகன்.

அப்புறம் மாலை வீட்டுக்குக் கிளம்பும்போது மேடம் செய்யும் வேலையை நிறைவு செய்து முத்திரை பதிப்பவரைத் தாண்டிதான் செல்ல வேண்டியிருந்தது. அவருடன் அதிகம் பேசிக் கொள்வதில்லை ஜெகன்.

“ஜெகன்?” என்று அழைத்தார் அவர்.

“என்ன சார்?” என்று அவரருகில் சென்றான் ஜெகன்.

“மேடம் ரிடையர் ஆகிட்டாங்கன்னு வருத்தப்படாதீங்க ஜெகன், உங்களுக்கு நாங்கல்லாம் இருக்கோம்”.

ஜெகன் அவர் முகத்தைப் பார்த்தான்.

சிரித்துக் கொண்டிருந்தார்.

அன்புதான் அலட்சியப்படுத்தப்படும்போது வக்கரித்துக் கொள்கிறது என்று நினைத்தான் ஜெகன், அதனால்தான் அது அன்பிருக்கும் இடத்தை உடனே அறிந்து கொள்கிறது, அதன் பலங்களையும் பலவீனங்களையும் புரிந்து கொண்டிருக்கிறது.  பேச்சாலும் மௌனத்தாலும் காயப்படுத்துகிறது.

ஜெகனும் அவரைப் பார்த்து சிரித்தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s