ஒரு சிறு டெர்ரர் பதிவு

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: சரியோ தவறோ, நாம் பாஷ்யம் எழுதுவதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கில்லை. கதை மற்றும் கவிதை முயற்சிகள் கற்பனை வறட்சியை அம்பலப்படுத்த மட்டுமே பயன்பட்டன. அந்த அளவில் அவை வெற்றி பெற்ற முயற்சிகள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனாலும் அது, புதைகுழியில் விழுந்தவனுக்கு மரணம் சித்திக்கவில்லை, அவன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற காலி டப்பாவின் பெருங்காய வெற்றி மட்டுமே. இந்த நிலையில் இருக்கும் தங்கள் அபிமான எழுத்தாளருக்கு வெக்கப்புல் மட்டுமல்ல, இலை, இலைக்காம்பு என்று எது கிடைத்தாலும் அதில் கொழுகொம்பின் செறிந்த சாத்தியங்கள் தென்படுகின்றன.

அப்படி ஒரு கொழுகொம்பை நம் டிவிட்டர் நண்பர் திரு மண்குதிரை அவர்கள் அளித்தார். சன்னல்களாலான மாளிகையைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறது எம் டி முத்துக்குமாரசாமி அவர்களின் பராக்குரமத்துவங்கள். அந்த சன்னல்களில் ஒன்றை திரு மண்குதிரை நம் பார்வைக்குப் பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.

https://twitter.com/#!/mankuthirai/status/167595255770775552

என்ன சொல்றார்? ஏதாவது புரியுதா? இதுக்கே நோட்ஸ் எழுதணும் போல. ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு நோட்ஸ். 🙂

என்று கமெண்ட்டி விட்டு சும்மா இருக்க முடிகிறதா?

மண்குதிரை புண்ணியத்தில் அடியேனுக்கு ஒரு பதிவு கிடைத்தது- இன்று ஒரு நாற்பது ஹிட்டுகள் கிடைக்க வழி செய்த ஜீவனோபாவி திரு மண்குதிரை அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

இனி என்ஜாயுங்கள்!

அழகுக் குறிப்புகளுக்கு அடிக் குறிப்புகள் 
அல்லது

ஒரு சிறு டெர்ரர் பதிவு

சூத்திரம்:

“காலம் தன்னிருப்போடு மனித சமூக பெரு வரலாற்றுக் கதையாக உறவாடும்போதுதான் செயலும் நகர்வும் பயணமும் எனவே செயலின்மையும், நகர்வின்மையும் உறைதலும் சாத்தியமா?”

பாஷ்யம்:

காலம். காலம் இருக்கிறது. காலம் காலமாக இருக்கிறது. காலங்காலமாக இருக்கிறது. காலத்தின் இருப்பு தவிர்க்க முடியாதது. காலமே தன்னிருப்பு. காலத்தின் தன்னிருப்பு.

காலப்பயணி. இருக்கிறான். காலத்துக்கு உள்ளும் வெளியும் இருக்கிறான். அவன் காலத்தின் உள்ளே வரும்போது காலம் நினைவின் உருவம் பெறுகிறது. நினைவு கடந்த காலச் சுமை. நினைவின் வார்ப்பில் காலம் உருவம் பெறும் திசையில் வரலாறு விரிகிறது. காலப்பயணி காலத்துக்கு வெளியே செயல்பட்டாலும் அச்செயல்களின் தடங்கள் காற்றில் தடயங்களற்றுக் கரைந்து விடுகின்றன. ததாகத!- போக்கும் வரவுமற்ற புண்ணியன். இவன் தானாக இருக்கிறான். இவன் நானாவதில்லை.

காலத்துள் நுழைந்த காலப்பயணி நிற்குமிடத்தையும் அவனது காலடித் தடம் நிறைக்கிறது. ஆடாது அசையாது அமர்ந்திருந்தாலும் கணத்துக்கு கணம் அவனிருக்கும் கால வெளி நினைவுகளாக உருவம் பெற்று, நானெனும் வரலாற்றை எழுதிக் கொண்டே இருக்கிறது : நின்ற நிலையிலும் இவன் செயலாடுகிறான், நகர்ந்து கொண்டிக்கிறான், பயணித்துக் கொண்டே இருக்கிறான். காலம் ஒரு நதியாக சுழித்தொடுகிறது. இதில் காலப்பயணி காலம் உருவாக்கிய சுழியல், காலத்தால் கடத்திச் செல்லப்படும் மிதவை. இவனுக்கு செயலின்மை சாத்தியமா? இவனால் நகராதிருக்க முடியுமா? இவன் தானாய், தன்னில் உறைதல் சாத்தியமா?

வேறோரிடத்தில்ம் வேறோர் பொருளில் போர்ஹே கூறியது போல் நானாதலில் வாழ்வாய் விரியும் காலம் இடையறாது, “புனைந்து கலைக்கிறது தன களைத்த சரித்திரத்தை.”

ததாகத! 

மேலதிக விவரங்கள் இங்கே-  சும்மா ஜாலிக்கு 🙂

Advertisements

2 thoughts on “ஒரு சிறு டெர்ரர் பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s