என்றென்றும் உன் நினைவில்…

ஆர்.ஜி. பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ.3-50 விலையுள்ள மாயா ஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள், பல சித்துக்கள், விளையாடும் மைவகைகள், சிங்கி வித்தை, சொக்குப் பொடி குக்ஷி, அஷ்ட கர்ம கருமை முனிவர்கள், வாராகி, ஜாலாக்கள், குட்டிச் சாத்தான், யஷ்ணி, அனுமான், மாடன், பகவதி, இருளி, காட்டேரி வசியங்களும், கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும், குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல், வேப்பிலை அடித்தல், பேய் பிசாசுகளை ஓட்டுதல், பில்லி சூனியங்களை அகற்றல், சதிபதிகள் பிரியாதிருத்தல், ஈடு மருந்தை முறித்தல், பாம்பு, தேள், நாய், பூனை, எலி கடி விஷங்களை ஒழித்தல், ஜாலாக்கனின் ஜெகஜ்ஜால வித்தைகள், முள் மீது படுத்தல், நெருப்பைக் கையில் அள்ளுதல், மிதித்தல், சட்டி ஏந்துதல், மடியில் கட்டுதல், ஜலத்தின் மீது படுத்தல், உட்காருதல், வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரமாக இதில் அடங்கியுள்ளன.

விலாசம் : 4, வெங்கட்ராமய்யர் தெரு, சென்னை – 1.

1976ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.

கணையாழியின் கடைசி பக்கங்கள், செப்டம்பர் 1976.

இன்று வாத்தியாரின் நான்காம் நினைவு தினம். தமிழ் கூறும் நல்லுலகம் அன்னாரின் நினைவு பேண எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புகைப்படத்துக்கு நன்றி : இயற்கை 

Advertisements

6 thoughts on “என்றென்றும் உன் நினைவில்…

 1. இப்பொழுதும் அவரது இல்லாமை மனதை வலிமையாக தைக்கிறது. எதுக்கு அவர் இல்லைன்னு நினைக்கணும். இருக்காரு, அவர் எழுத்துக்கள் மூலமா நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

  சும்மா நினைவு நாள்னு அது இதுன்னு சொல்லி மனச சங்கடபடுத்தாதிங்கப்பா

  1. 🙂

   இருக்கறவங்களயே நினைக்கறதில்லை – இல்லாதவங்களையும் மறந்திடணுமா!

   இருந்தாலும் தங்கள் உணர்ச்சிகரமான பின்னூட்டத்துக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s