எது ஆன்மிகம்?

அர்த்தத்தோடு எழுத வேண்டும், சிந்திக்கும்படி எழுத வேண்டும், நம்முடைய மேதைமை வெளிப்படும்படி எழுத வேண்டும் என்றெல்லாம் யோசித்தால் நம்முடைய இயலாமைதான் வெளிப்படுகிறது. அதனால் வழக்கப்படி பிளாக்கின் தீமையும் பெயரையும் மாற்றிக் கொண்டு கண்டது காணாதது பார்த்தது பார்க்காதது அறிந்தது அறியாதது என்று நினைத்தது நினைக்காததையெல்லாம் எழுத வேண்டியதுதான் என்று இன்னொரு ரவுண்ட் ஆரம்பிக்கிறேன்.

இன்று காலை ஒரு நண்பருடன் விவாதம் செய்ய நேர்ந்தது. ஆன்மீக விவாதம்!

அது ஒரு தனிப்பட்ட விவாதம் என்று நண்பர் பிடிவாதமாக இருப்பதால் நான் சொன்ன பதில்களை மட்டும் இங்கே வெட்டி ஒட்டுகிறேன். புரிகிறதா புரியவில்லையா என்பதல்ல முக்கியம், நமக்கு ஒரு பதிவு வேண்டும், அதற்கப்புறம்தான் மற்றதெல்லாம்.

இந்தப் பதிவைப் பொறுமையாகப் படிக்கும் நண்பர்களுக்கு இப்படிப்பட்ட விவாதங்களை சரியான திசையில் கொண்டு செல்வது எப்படி என்ற ஒரு மிக முக்கியமான பாடம் இறுதியில் கிடைக்கவிருக்கிறது.

இனி..

நண்பர் : எக்ஸ்எக்ஸ்எக்ஸ்

நான் : என்ன இது அநியாயம்! நீங்க படிச்சு முடிச்சு வளந்தப்புறம் அம்மா அப்பா தேவையில்லைன்னு சொன்னா அவங்க இல்லாம போயிடுவாங்களா!

பரோட்டாவுக்குக் குருமா தேவையில்லாம இருக்கலாம்ங்க, ஆனா அப்படியும் குருமான்னு ஒண்ணு இருக்கத்தானே செய்யுது?

நண்பர் : எக்ஸ்எக்ஸ்எக்ஸ்

நான் : நீங்க சொல்றது ஏறத்தாழ எல்லாத்தையும் ஒத்துக்கறேன். ஏறத்தாழல வேறுபடற இடம், எது ஆன்மிகம் என்பதுதான்.

பரோட்டா குருமா மாதிரி இதுக்கும் ஒரு உதாரணம் சொன்னா சிம்பிளா இருக்கும். குழந்தை பிறக்க அன்போ காதலோ தேவையில்ல. அதுக்கெல்லாம் அவசியமே இல்லாம இது நடக்குது அப்படிங்கறதால, அப்படி ஒண்ணு இல்லவே இல்லை, அதைப் பத்தி யோசிக்காமலே நாம் குடும்ப வாழ்க்கையைப் புரிஞ்சு கொள்ள முடியும், அப்படின்னு சொல்ல முடியுமா?

புலன்கள் மூலமா நாம அறியற விஷயங்கள் மாதிரியே, அறிவைக் கொண்டு அறியும் விஷயங்கள் மாதிரியே சில அசாதாரண அனுபவங்கள் நமக்கு ஏற்படுது. எல்லாருக்கும் இல்லை, நம்மில் ஒரு சிலருக்கு. அப்புறம் அவங்க வாழும் விதம, அது மத்தவங்களை பாதிக்கிற விதம் அதை வெச்சு நாம சில விஷயங்களை ஏத்துக்கறோம். முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில்.

அப்படிதான் இத்தனைக்கும் லேலே ஒருத்தன் இருக்கான் அப்படின்னு நம்பறது. அவன் இல்லாமலேயே எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியும், ரைட்டு. ஆனால் நீங்க புரிஞ்சுக்கிட்டதுல ஒரு மர்மம் இருக்கு பாத்தீங்களா?

ஜான் வீலர் சொன்னது இது, “Suppose you write an equation to describe the universe on a tile of the floor, then you write another that you think is a better description and so on until you get to the door standing outside the room. If you take up a wand, wave it over the floor and command the equations to fly, not one will get up and fly. The universe flies, there’s a life to it that no equation has.””

http://www.fqxi.org/community/forum/topic/555

நம்மகிட்ட இருக்கறதெல்லாம் சமன்பாடுகள். நீங்க எவ்வளவுதான் அதைப் புரிஞ்சுக்குங்க, அந்த சமன்பாடுகள் ஏன் உருவம் பெறணும், ஏன் இயங்கணும்? அந்த சக்தி என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் கிடையாது. இந்தக் கேள்விக்கு அவசரப்பட்டு சொல்லப்படும் பதில்தான் கடவுள்.

நண்பர் : எக்ஸ்எக்ஸ்எக்ஸ்

நான் : கடவுளுக்குக் கண் இருக்கு, மூக்கு இருக்கு, அவர் நம்மளைப் பாத்துக்கிட்டிருக்கார், நம்ம பாவ புண்ணியத்துக்குத் தகுந்த மாதிரி நல்லது கெட்டதை அளந்து பாத்துக் கொடுப்பார் மாதிரியான நம்பிக்கைகளைத் தாண்டி ஒரு விஷயம்.

நமக்குக் கான்ஷியஸ்னஸ் இருக்கு. இது ஏதோ மனுஷ மூளைக்குள்ள மொளைச்ச விஷயமில்லை. பயாலஜில அப்படிதான் சொல்றாங்க. ஆனா க்வாண்டம் பிஸிக்ஸ்ல முதல் துகளணுவின் சுழற்சியையே இந்தப் பிரக்ஞைதான் தீர்மானிக்குது என்கிற மாதிரி சொல்றாங்க. எப்படிப் பாத்தாலும் மேட்டரும் கான்ஷியஸ்னஸ்சும் பின்னிப் பிணைஞ்சிருக்கு அப்படிங்கறதை நீங்க ஒத்துப்பீங்க அப்படின்னு நினைக்கறேன். ஆந்த்ரோபிக் பிரின்சிபிள்னே ஏதோ கூட இருக்கு.

ஆக, நாம பாக்கற உலகத்தைத் தாண்டி, அது பத்தி நாம அறிவாலும் புலன்களாலும் அடையக்கூடிய முடிவுகளைத் தாண்டி ஏதோ ஒரு மர்மம், அவற்றைத் தாண்டிய மர்மம் இருக்கு என்றுதானே சொல்ல வேண்டும்?

அந்த கான்ஷியஸ்னஸ் எப்படிப்பட்ட ஒன்று? எப்படி நாம அனைவர் உடலிலும் உள்ள அணுக்கள் ஒரே மாதிரி இருக்கோ, அதே மாதிரி அந்த கான்ஷியஸ்னஸ்கூட பொதுவாதானே இருக்கும்?

இந்த மாதிரி ,மானுட பிரக்ஞையைவிட பிரம்மாண்டமான ஒண்ணு என்ன, அதைத் தொட முடியுமா? அப்படி அதை அறிய வரும் அனுபவங்கள்தான் அசாதாரண அனுபவங்களா?

David Bohmனு ஒரு பெரிய விஞ்ஞானி இதைப் பத்தியெல்லாம் விவரமா பேசியிருக்கார்.

http://en.wikipedia.org/wiki/Implicate_and_explicate_order_according_to_David_Bohm

நாம தெய்வ நம்பிக்கையை சூடம் கொளுத்தி திருநீறு இட்டுக்கற விஷயமா மட்டும் பாக்காம, ஒரு மாபெரும் தேடலா பாக்கலாமே?

நண்பர் : எக்ஸ்எக்ஸ்எக்ஸ்

நான் : அப்படியெல்லாம் நினைக்காதீங்க. இது ரொம்ப சீரியசான விஷயம்.

http://www.thebigview.com/spacetime/uncertainty.html

http://roxanne.roxanne.org/epr/experiment.html

நண்பர் : எக்ஸ்எக்ஸ்எக்ஸ்

நான் : அதெல்லாம் அவ்வளவு ஈஸி இல்லீங்க…

http://en.wikipedia.org/wiki/Hard_problem_of_consciousness

நண்பரின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்தப் பதிவின் செய்திக்கு முக்கியமாக இருப்பதால் இதைத் தொடர்ந்து அவர் சொன்ன இறுதி வாக்கியத்தை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

நண்பர் : என்ன சார் கூகுள் மாதிரி லிங்க் தர்றீங்க… பொறுமையா படிச்சு பாக்கறேன்…

OoO

நம்மைப் போல் நுனிப்புல் மேய்பவரல்ல நண்பர். இதெல்லாம் உத்தரவாதமாக இரண்டு வருஷமாவது மண்டையை உடைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள். எனவே, நண்பர் கண்ணுக்கெட்டிய காலம் வரை நம் பக்கம் திரும்பப்போவதில்லை.

விவாதத்தில் வெற்றி என்பது எதிர்த்தரப்பை வாயடைக்கச் செய்வதுதான் என்பதால், இந்த மாதிரி பெரிய பெரிய பெயர்கள், கருதுகோள்கள் போன்றவற்றை எதிராளி மீது எடுத்து வீசுவது வெற்றிக்கு மிகவும் முக்கியமாகும்.

இந்த பிளாக்கின் புதிய அவதாரத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ள வாய்த்த வெகுமதி, முதல் பாடம், இதுதான். உங்களுக்கு வாழ்நாள் உள்ளளவும் துணை நிற்கக்கூடிய பாடம் இது.

Advertisements

3 thoughts on “எது ஆன்மிகம்?

 1. யாருசார் அந்த நண்பர்? விவாதத்தை இப்படி நட்டாத்துல விட்டுட்டு ஓடிட்டாரே? 🙂

  //நம்மைப் போல் நுனிப்புல் மேய்பவரல்ல நண்பர்.//

  இது அந்த நண்பருக்கு தெரியுமா? :))

  //இதெல்லாம் உத்தரவாதமாக இரண்டு வருஷமாவது மண்டையை உடைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள். எனவே, நண்பர் கண்ணுக்கெட்டிய காலம் வரை நம் பக்கம் திரும்பப்போவதில்லை.//

  அடடா… உண்மைதான். பிரக்ஞைன்னு ஒண்ணு இருக்கற மாதிரியும் இருக்கு, அதேசமயம் தேவையில்லைன்னும் தோணுது… யோசிக்கறேன்.

  அந்த எக்ஸ்எக்ஸ்எக்ஸ் இல்லாம சரியா புரியல சார். அதை தாராளமா போட்டிருக்கலாம். நான் ப்ரைவேட்னு சொன்னதுக்கு காரணம் நான் அந்தப் போஸ்டை சில தீவிர மதப்பற்றாளர்கள்கூடவும் சும்மா பாருங்கன்னு ஷேர் பண்ணியிருந்ததுதான். நாங்க சீரியஸா இதை விவாதிக்கப்போய், அவங்க பேஜ்-ல ஒவ்வொருமுறையும் அப்டேட் ஆக வேண்டாமேன்னுதான்… வேற ஒண்ணும் இல்ல.

 2. உங்க சிந்தனையைப் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க, நான் உங்களை இங்க எதிர்பார்க்கலீங்க, நல்ல இருக்கீங்களா? வாழ்த்துகள். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s