பேசக் கூடாதது

(தொலைந்து போன வாசகர்களில் மூன்று பேர் திரும்பி வந்துவிட்டதாக நம்ப இடமிருப்பதால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளத்தை உருக்கும் கதையொன்று)

தப்புதான். ஜெகனும் நட்டும் பேசிக் கொண்டு வரும்போது சார் தங்களைப் பார்த்ததை இருவரும் கவனித்திருந்தனர், அப்புறம் என்ன நடந்தது என்பதையும் கவனித்திருக்க வேண்டும் – சம்பவம் நடந்தபோது அவர் வாட்டர்கூலர் அருகே நின்று கொண்டிருந்தார்.- இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாய், “ஹா ஹாஹ் ஹாஹ்!” என்று சிரிக்க வேறு செய்திருந்தார்.

ஜெகன் அவரிடம் போய், “என்ன சார், பாத்து ரொம்ப நாள் ஆச்சு?” என்று கேட்டு நட்டுவும் “சார், நீங்க எங்களையெல்லாம் மறந்துட்டிங்க” என்று குற்றம் சாட்டி கொஞ்ச நேரம் போல ஆசை ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்புறம் சாரிடம் தங்களுக்கு வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு விடை பெற்றனர்.

கொஞ்ச தூரம் சென்றதும், நட்டு, “என்னடா ஜெகன், இன்னிக்கு சார் நம்மளைப் பாத்து இந்த சிரிப்பு சிரிக்கறார்?” என்று கேட்டான்.

“சும்மா நடிப்பு, ” என்றான் ஜெகன். “மனுஷன் நல்லா நடிக்கிறார்”

“நீ மட்டும் என்னவாம்?” என்று கேட்டான் நட்டு.

“நீயி?”

“அது சரி,” என்றான் நட்டு. “பாவம் அவருக்கு யாருமே பிரண்ட்ஸ் இல்லை”

“அதெப்படிடா இருக்க முடியும்? வாயைத் திறந்தாலே பொய்யி. ஒரே வேஷம்.’

“ஆமாமாம், எனக்கு அன்னிக்கு வந்த கோபத்துக்கு அவரை அடிச்சிருக்கணும். மறுபடியும் அந்த மாதிரி ஏதாவது செஞ்சா வகுந்திருவேன்!” என்றான் நட்டு.

ஜெகன் நட்டின் முகத்தைப் பார்த்தான். கோபமா அழுகையா என்று சொல்ல முடியவில்லை.

“எதுக்கு நீ இப்ப இப்படி எமோஷன் ஆவுற?” என்றான் சமாதானமாக.

“வேற வழி? நான் கோபப்பட்டாகணும், நீ காம் பண்ணியாகணும். நம்ம நிலைமை அப்படி,” என்றான் நட்டு விவேகமாக.

ஜெகன் நட்டை மெச்சும் வகையில் உச்சுக் கொட்டினான்.

“எனக்கும் சாரைப் பிடிக்கலைடா, ஆனா என்ன பண்ண? மனுஷன் சிரிக்கும்போது மூஞ்சியைத் திருப்பிக்கிட்டா போக முடியும்?”

ஏதேதோ பேசிக் கொண்டு சென்றவர்கள் அரை மணி நேரத்தில் சாரை மீண்டும் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரே இவர்களுடைய ரூமுக்கு வந்து விட்டார்.

“ஜெகன், நட்டு. நீங்க ரெண்டு பேரும் பெசிக்கிட்டதை நான் கேட்டேன். உங்க பின்னாலதான் வந்துக்கிட்டிருந்தேன். எல்லாம் தெளிவா கேட்டிச்சு”

இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“எதானாலும் முகத்துக்கு நேர சொல்லுங்கப்பா. முதுகுக்குப் பின்னால பேசினா என்ன அர்த்தம்? உங்ககிட்ட பிரண்ட்ஷிப்பா இருந்தது தப்புன்னு புரிஞ்சு போச்சு…” என்றார் சார் வலியால் துடிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு. ஆணால் அவர் கண்களில் தெரிந்த கோபத்தில் ஜெகனின் ரத்தம் உறைந்தது.

“என்னடா இது, இப்படி சொல்லிட்டார்?” என்றான் நட்டு. “நாம நேருக்கு நேர் பேச முடியாத கோழைகள்னு சொல்லிட்டாரே!”

ஜெகன் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு அவர் சொன்னதில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது. எதுவானாலும் சாரிடம் நேருக்கு நேர் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நல்லவரோ கெட்டவரோ, தன்னைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசுவதைக் கேட்கும்போது மனசுக்குக் கஷ்டமாகத்தானே இருக்கும்?

நட்டை ஓரக் கண்ணால் பார்த்தான். அவன் பார்ப்பதைக் கண்டதும் நட்டு தன் தலையைக் குனிந்து கொண்டான்.

“சே, சார் பின்னால வரார்னு கவனிக்காம போயிட்டோம்டா,” என்றான் நட்டு, இதோ அழுது விடுவான் போலிருந்தான்.

ஜெகனுக்கு லேசாக வெளிச்சம் தெரிந்தது. “சீ, மனுசனாடா அவரு? நாம பேசறதை ஒட்டுக் கேட்டுக்கிட்டே பின்னால வந்திருக்கார் பாரு!” என்றான் ஜெகன். இந்தப் புது வெளிச்சத்தில் அவனுக்குக் கண்கள் திடீரென்று கூசுவது போலிருந்தது. உடம்பு லேசாகி, கோபத்தில் எந்நேரமும் பறந்து விடலாம் போலிருந்தது. “இந்த மாதிரி ஒட்டுக் கேக்கற மனுசனப் பத்தி என்ன பேசினா என்ன?”

நட்டு சந்தோஷமாகச் சிரித்தான். “மிஸ் பண்ணிட்டோம்டா…. சார் ஒட்டுக் கேக்கறார்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் பயங்கரமா நல்லா நான் திட்டியிருப்பேன்டா!”

ஜெகன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். யாருமில்லை.

Advertisements

21 thoughts on “பேசக் கூடாதது

 1. நான் உண்மையைத்தான் சொல்றேன்னு போய் சொல்றவங்க நாட்டுல இருக்கற வரைக்கும் ஒட்டு கேட்கிற பழக்கம் இருக்கதான் இருக்கும். அது சீரியஸ் ஒட்டு. சம்பந்தமில்லாத விஷயங்கள ஒட்டு கேக்கறது, அதுவும் கேக்காத மாதிரி, ஜாலி ஒட்டு. ஆக மொத்தம் ‘ஒட்ட’ குத்தம் சொல்லாதிங்கப்பா

 2. ஜெகன் சீரிஸ் கதைகளில் நட்டும் சேர்ந்திருக்கிறார்.நுண்ணுணர்வுகள்.

  அனேகமான கமெண்ட்களை காதில் விழட்டுமே என்றுதானே உரக்கக்கதைப்பார்கள்.

  “என்னடா பவுடரை முகத்திலை தடவிட்டா பெரிய அழகெண்ட மிதப்பு வந்திடுமோ?’’
  “டேய் நான் பவுடரே பொடுறேல்லை”
  “உன்னைசொல்லேல்லை.நீ பவுடர் தடவினா என்ன சாணி தடவினா என்ன பேசாமாக்கிடவடா சூழ்நிலை விளங்காத சூனியம்”
  *******
  “என்னடி அந்தக்கோணேசுக்கோவேறு கழுதை பவுடர் எண்டு கதைக்கிறான்.ஒருக்கா பார் முகத்தை”
  ’களுக்’

  ”என்னடி’’

  “மாச்சட்டிக்குள்ளை தலையைக்கொடுத்திட்டு வந்தனியே.”

  1. 🙂

   எல்லாரும் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள், ஆணால் எனக்கு இதையெல்லாம் இப்படி உள்ளபடியே எழுத வருவதில்லை 😦

   இப்படி எழுத முடிந்தால் எழுதிக் கொண்டே இருப்பேன்…

 3. வள்ளுவரே ஒட்டுக்கேட்கறத பத்தி சொல்லியிருக்காரே? அதுவும் ஒட்டுக்கேக்கறவனையே ஒட்டுக்கேக்கணும்னு.. ?! இவரு தமிழ் வாத்தியாரோ?

  1. என்ன சொன்னார் வள்ளுவர்?

   ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கணும்னா, ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறது யாராம்? அதுக்கப்புறம் ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறது யாராம்? சரி அதுக்கும் ஒரு ஆள் கிடைச்சா, ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறவனை ஒட்டுக் கேக்கறது யாராம்? கடைசியில ஒட்டுக் கேக்கறவங்களைத் தவிர யாருமே இருக்க மாட்டாங்களே, அப்போ யார் பேசறதை ஒட்டுக் கேக்கறதாம்?

   லாஜிக்கா பேசுங்க தலைவரே!

   1. ஒட்டுக் கேக்கற எல்லாரையும் ஒட்டு மொத்தமா ஒட்டுக் கேட்டுட்டு ஒருத்தர் இருக்காராமேசார்… அதான் காட், கடவுள்.. ஆனா அவரை ஒட்டுக் கேக்கறதுக்கு யாரும் இல்லையே?

    அப்படின்னா வள்ளுவர் நாத்திகரா? (அதாவது ஒட்டுக் கேக்கரவங்களை ஒட்டுக் கேக்கணும்னா, ஒட்டுக் கேட்க முடியாத கடவுள் இல்லாம இருக்கணுமே?!) ஆனா What about ஆதி பகவன்? வள்ளுவரே லாஜிக் இல்லாமத்தானே எழுதியிருக்காரு?

    (ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா… யாராவது கொஞ்சம் சோடா குடுங்க ப்ளீஸ்…)

    1. சார், கதை நல்லாயிருக்கு, இந்த மாதிரி கதையைப் படிச்சதேயில்லை, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நூறு வார்த்தை மாதிரி, இந்தக் கதை நுட்பமானது, உன்னதமானது, உச்சமானது, இந்தக் கதையைப் படிச்சவங்க வேற எந்தக் கதையையும் படிக்க வேண்டாம், இந்தக் கதையை விளக்க எனக்கு ஏழு ஜென்மம் போறாது அப்படின்னுல்லாம் ஆக்கப்பூர்வமா விமரிசனம் பண்ணுங்க சார்.

     அதைவிட்டுட்டு கடவுள் இருக்காரா, இருந்தா அவருக்கு காது கேக்குமா அது இதுன்னு ஆன்மிகத் தேடல் பண்ணிக்கிட்டு…

     😦

     1. 🙂 எனக்கு அவ்வளவு ப்ளோவா பொய் சொல்ல வராதே சார்…?!

      இதல்லாம் ஆன்மீகத் தேடல்னா சுற்றி புற்று கட்டற ரேஞ்சுக்கு தவம் தியானமெல்லாம் பண்றாங்களே அதுக்கு என்ன பேரு?

        1. யாரோ ஒரு முனிவரா!

         எத்தனை எத்தனை பொன்மொழிகளை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் மட்டும் பொன்மொழிகளை உதிர்க்காமல் இருந்திருந்தால் இந்த ஊர் காலண்டர்காரர்களின் பிழைப்பு வீண் போயிருக்கும்.

         நன்றி நண்பரே, எப்படி அவர் முனிவர்னு கண்டுபிடிச்சீங்க? என்ன க்ளூ?

 4. யாரோ நாலு நாளுக்கு இணையம் பக்கம் வரமாட்டோம்னு சொன்னாங்க?

  ஒட்டுக் கேக்கற மாதிரி ஒரு பொழுதுபோக்கு உலகத்துலையே கிடையாது. 100% Entertainment Guarenteed. இது தப்புன்னு சொல்றவங்க ஒட்டு கேட்க ட்ரை பண்ணிக்கு அப்பால வந்து சொல்லுங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s