காட்சி

ஜன்னலுக்கு வெளியே உள்ள வேப்ப மரத்தில் ஒரு நீலப் பறவை வலப்புறம் திரும்பி அமர்ந்திருக்கிறது. அதன் சிறிய, கருத்த தலையில் சன்னமாய் நீள்கிறது அழுக்கு மஞ்சள் அலகு. ஞானம் இதன் கானம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதைக் கேட்டுவிட்டது போல் தட்டையான, ஆனால் குறுகியத் தன் வாத்து அலகுகளை விரித்து ஒலியெழுப்புகிறது அந்த நீல பறவை. அதன் குலவையொலி சுற்றுப்புற மரங்களில் எதிரொலிக்கிறது. மீண்டும் மீண்டும் சிரிக்கிறது நீலப் பறவை.

பீட்டர்ஸனின் ஸ்விட்ச் ஹிட் போன்ற ஒரு குதியாட்டத்துடன் திரும்பி அமரும் அந்த நீலப் பறவை ஞானம் தன்னை கவனிப்பதைக் கண்டதும் உறைந்து நிற்கிறது. அதன் தலை மட்டுமல்ல, உடலின் நிறமே கருப்புதான் என்பதைக் காண்கிறான் ஞானம். தலைபின்னி நீல மலர்கள் சூடியதுபோல் அதன் கருத்த உடலில் அமர்ந்திருக்கின்றன நீலவண்ண இறகுகள் என்பதை இப்போது காண்கிறான் ஞானம். நீலப்பறவையின் கண்டத்தை நிறைக்கும் வெண்மை விரைந்தெழும்பி விரியும் அதன் நீலச் சிறகுகளின் உட்புறம் பளிச்சிடுகிறது.

“ஐந்து புலனும் அடங்கிப் போகும் ஆடைதனைப் போடணும்” என்று பாடிக் கொண்டிருக்கிறார் இளையராஜா.

22 thoughts on “காட்சி

 1. பாஸ்..நல்லாபார்த்தீங்களா? நீலப் பறவையா? நீலிப் பறவையா?

  நீலப் பறவையில் நீல நிறத்தைக் கண்டதில் காக்கைச் சிறகினில் கரிய நிற நந்தலாலாவைக் கண்ட பாரதிக்கு நிகரா இயற்கை கவிஞரா ஆகிட்டீங்க பாஸ்.

  🙂

  1. எதுக்கும் ராத்திரி பன்னெண்டு மணிக்கா அந்த வேப்ப மரத்தை ஒரு தடவை பாத்துக்கிடறேன்! நீங்க சொன்னதும்தான் அந்த டவுட் வருது. 🙂

 2. ஒரு பறவை போலத்தெரிகிறதே என்று தொலைநோக்கியையைக்கண்களில் பொருத்தி அதன் கழுத்தை மெல்லத்திருகி வர வர பறவையின் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக பறவை நெருங்கிவர வர அதன் வண்ணங்கள் பிரிந்து பறவை அதன் எல்லாப்பரிமாணங்களோடும் துல்லியமாகிறது.

  காட்சிகள் எம்மைச்சூழ்ந்து கிடக்கின்றன.நிகழ்வுகள் சூழ நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
  நாம் பிடித்தமானவற்றுள் புலன்களை பொருத்திக்கொண்டுவிடுகிறோம்.

  புலன்களை குவிக்க குவிக்க (அல்லது போகஸ் செய்கிறபோது) காட்சிமாறிக்கொண்டே செல்லுகிறது.

  புலன்கள் ஒருமிக்க காட்சி நிலையற்றதாயிருப்பது புலப்படுகிறது.

  ஒருகண் திறந்து உற்று நோக்க மறுகண் திறக்கும்.பார்வை மாறும்.கண்கள் திறந்து கண்கள் திறந்து காட்சி நிலையற்றுமாற மாற உண்மை நோக்கிநகர்ந்து கொண்டேயிருக்கிறது புலன்களுள் கட்டுண்ட ஆன்மா.
  கடைசிக்கண்ணும் திறக்க காட்சிகளற்ற வெளியில் கட்டவிழ்ந்து விடுகிறது காட்சிகளைக்கடந்த புலன்களை உதிர்த்துவிட்ட ஆன்மா.

  உற்று நோக்க நீலப்பறவையின் வண்ணங்கள் விரிந்து தெரிகிற ஞானத்துக்கு பறவையின் பாடலும் பறவையின் வண்ணங்களும் மறைந்துபோய்விடும் இன்னும் கொஞ்சம் உற்று நோக்க.

  சலனமற்ற குளத்துத்தண்ணீரில் பிரதிபலிக்கிற நிலவுக்காட்சி மீது கல்லெறிவது போன்ற கதை.
  பறவையின் அங்கலாவண்யங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.சன்னமாய் நீண்ட அலகு குறுகி வாத்தின் மொண்ணை அலகாகி நீலம் கருப்பாகி வெண்மையாகி…..
  கதை வளர்ந்திருந்தால்
  பார்ப்பவரும் பார்க்கப்படுவதும் ஒன்றாகிவிட்டிருக்கும்.

  இல்லையா சார். ஆழம்

  நன்றி

  1. நீங்கள் சொன்னதும்தான் இதெல்லாம் தெளிவாகப் புலப்படுகிறது, என்ன செய்வது நம்ம நிலைமை அப்படி 🙂

   சலனம். கண நேரச் சலனம், அதுதான் விஷயம், இல்லையா? நம் மனம் விசித்திர ரூபங்களைக் கண்டடையக் காரணம் அதன் அனுபவ எதிர்பார்ப்புகள் என்று நினைக்கிறேன் : அந்த எதிர்பார்ப்புகளை ஏளனம் செய்து சிரிக்கிறதோ என்னவோ அந்த நீலப பறவை.

   புலன்கள் வழி நாமறியும் உடலும் உலகும் நம்மைப் போர்த்திருக்கின்றன, அங்கு இருளும் ஒளியும் ஒன்றையொன்று துளைத்துச் செல்கின்றன. சலனம் உள்ளவரை நீலப்பறவையின் காட்சிகள் மாறுகின்றன, மறைகின்றன : காண்பான் மறைவதில்லை.

   ஒரு அதிபயங்கரமான தரிசனத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி டாக்டர் 🙂

   1. சார்
    விஞ்ஞானத்தையும் கலலக்கத்தான் இப்படித்தெரிகிறது. எங்கள் புலன்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது.
    பார்வையென்றால் அதனால் மிகச்சிறிய பொருட்களையோ மிகத்தொலைவுப்பொருட்களையோ பார்க்கமுடியாது.
    ஒரு பேச்சுக்கு எங்கள் கண்ணுக்கு இயற்கையாகவே நுணுக்குக்காட்டி ஆற்ற்லும் தொலைநோக்கி ஆற்றலும் இருப்பதாகக்கொள்வோம்.

    பறவையின் மீது கவனத்தைச்செலுத்த பார்வைகூர்மையடயத்தொடங்கும். தொலைக்காட்டி ஆற்றலால் பறவை நெருங்க வண்ணங்கள் தெரியும்.
    பிறகு வண்ணங்கள் மறைந்துவிடும் பறவையும் மறைந்து இன்னும் இன்னும் பார்வை நுணுக்கமாகி பறவையின் அணுக்களின் இடைவெளியூடே பார்க்கிறநிலைவருகிறபோது அதாவது பறவையினூடே பார்க்கிற நிலை (காற்றினூடே பார்க்கிறோமே அப்படி)
    பறவையினுள்ளே பார்வையாளன் இருப்பது போலாகிவிடுகிறது
    பார்க்கப்படுவதும் பார்ப்பவனும் ஒன்றாகிவிடுகிறது.
    ********************************************************************************
    microbiologist போன்ற நுண்ணுயிர் விஞ்ஞானிகளின் உலகம் மிக நுண்ணியது. அவர்கள் மனித சைஸில் இருந்தாலும் நுண்ணுக்குக்காட்டியினூடாக காணும் உலகுக்குள் தம்மைச்சுருக்கிக்கொள்கிறார்கள்.நீங்கள் ஒரு அறையை விபரிப்பதுபோலவே மிகநுண்ணியகலத்தை அவர்கள் விபரிப்பார்கள்.

    எங்கள் காட்சிக்கும் அவர்கள் காட்சிக்கும் புற உலகில் பருமனில் மலையும் மடுவும்.
    ஆனால் அக உலகில் அதாவது மனதில் தோன்றும் சித்திரத்தில் நாங்கள் ஒரு அறையைக்காண்பது போல ஒரு கலத்தை(cell) கண்டுகொண்டிருப்பார்கள்.

    நாங்கள் கண்டதும் கொண்டதுந்தானே எங்கள் உலகமாக இருக்கிறது

    1. இப்படிப்பட்ட புரிதல் அவர்கள் வாழ்வில் எந்தத் தாக்கத்தையாவது ஏற்படுத்துகிறதா? உலகில் பருண்மையைவிட வெறுமைதான் அதிகம் என்று அறிந்தால் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

     கணிதத்தில் 1.01 க்கும் 1.02 க்கும் இடையே ஒரு அளவிலி (infinity) உண்டு என்று கேட்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. உலகத்தில் இருக்கவே சாத்தியமில்லாத எண்ணிகையை நம்மால் எப்படி கற்பனை செய்ய முடிகிறது என்று…

     ஒரு பக்கம் நீங்கள் சொல்கிற மாதிரி என்றால் இன்னொரு பக்கம் இப்படி!

     1. உண்மைதான்.
      உலகங்களை ஒப்பிடுகிறார்களா
      இப்படி எல்லைகடந்தவைகளுக்குள் செல்வதை அனேகர் விரும்புவதில்லை. விரும்புவதில்லை அல்ல செல்வது பதற்றத்தைத்தருகிறது. அதீதங்களுக்குள் சென்றவர்கள் தொலைந்துவிடுகிறார்கள்.
      எல்லைகடந்தவை திரும்புவதில்லை.

      நான் waltz with Bazhir என்ற இஸ்ரேலியத்திரைப்படத்தைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். படுகொலைகளில் ஈடுபட்ட சிப்பாய்களின் உளநிலைகளைப்பேசுகிறது .
      net /wicki/google இல் பாருங்கள்.
      இந்தப்படத்தை நான் பார்ப்பது தற்செயலானது. 🙂

      1. நாம் இது இது இப்படி என்று சில முடிவுகள் செய்து வைத்திருக்கிறோம், இது போன்ற விஷயங்கள் அவற்றைப் பொருளற்றவையாக ஆக்கிவிடுவ்தால் இப்படியோ என்னவோ!

       சில பேருக்கு இது இந்த மாதிரிதான் என்று எதையும் சொல்லாத குழப்பமான விஷயங்கள் வசீகரமாக இருப்பதற்கு அவர்களுடைய குழப்பமான மன நிலையும் காரணமாக இருக்கலாம், இல்லையா? – என்னைப் போல இன்னும் பலருக்கு 🙂

       நீங்கள் சொன்ன திரைப்படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

 3. யன்னலருகே நின்று கொண்டிருக்கிறான் அவன்; அந்தப்புறமாய் அந்தப்பெண் பாடுகிறாள். நீலப்பறவை போல . கவனத்தை ஈர்க்கிற அவள் ஆடையும் தோன்றுவதும் சலனத்தை ஏற்படுத்துகிறது.

  தெரிவனவற்றை தெரிவிப்பனவாக எண்ணும் ஆணாதிக்க சிந்தனைப்பாடலை ப்பாடிக்கொண்டிருக்கிறாரோ இளையராஜா. 🙂

  1. அருமையான கற்பனை.

   உண்மையைச் சொன்னால் இந்தப் பதிவுகள் உங்கள் பின்னூட்டங்களுக்கான முன்னோட்டம் மட்டுமே 🙂

   ““ஐந்து புலனும் அடங்கிப் போகும் ஆடைதனைப் போடணும்” என்று பாடிக் கொண்டிருக்கிறார் இளையராஜா” என்பது இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க விஷயமாக நினைத்துப் பதிவு செய்வதை ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்ல முடியுமா?

   உண்மையில் அவனல்லவா அந்த அழகிய ஆடையைப் போர்த்து அதனுள் தன் புலன்களுக்கு நிறைவு கண்டு அடங்கிப் போக நினைக்கிறான்?

   1. நன்றி சார் நீங்கள் உள்முகம் பார்ப்பவர்.வெளிமுகம் பார்த்து எழுதுவது எனக்கு நல்ல அனுபவத்தை தருகிறது

    சார் ஒரு பார்வைக்குத்தான் இப்படியும் பார்க்கிறேன்.

    இளையராஜா பாடுவதன் அர்த்தம் நீங்கள் சொல்வதுதான் என்பது என் அபிப்பிராயமும்

    ஆனால் ஒரு பெண்ணைப்பார்த்துப்பாடினால் அது ஆ.ஆ சிந்தனை என்றுசொல்லலாமில்லையா.
    ஆண்
    “ஏ பெண்ணே என் புலன்களெல்லாம் அடங்கிப்போகும்படி நீ ஆடை போடணும்”

    பெண்ணைப்பார்த்தால் கையெடுத்துக்கும்பிடத்தோன்றும்படி ஆடை அணியவேண்டும் சொல்கிறார்கள் இல்லையா?
    அதாவது பக்தியும் மரியாதையும் வரும்படிக்கு அவள் ஆடையணியவேண்டுமாம் யாருக்கு மற்ற ஆண்களுக்கு. .

    இப்படியும் பார்க்கலாமே

    சும்மா ஜன்னலருகே நின்றவனின் கவனத்தை அவள் ஈர்த்துவிட்டாள் போதாக்குறைக்கு உட்புறம் கூடப்பளிச்சிடுகிற படிக்கு உடை. எழுத்தாளர் பெண்களுக்கு சூசகமாக சொல்லுகிறார் .பொருத்தமான இளையராஜா பாடலைச்சொல்லி. 🙂

    1. இங்கே அப்படிச் சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என்ன ஒரு வேடிக்கை என்றால் இப்படிச் சொல்வது தங்கள் புலன்களின் கட்டவிழ்ப்பைக் காப்பதற்காக அல்ல, மற்றவர்களின் மனம் அலைபாயுமே என்ற கருணையால் 🙂

     “ஐந்து புலனும் அடங்கிப் போகும் ஆடைதனைப் போடணும்” என்று சொல்லி, அதைச் செய்தாலும் கிடைக்கும் சிறு இடைவெளிகளில் புலன்கள் புறப்பட்டுப் புகுந்து விடுகின்றனவே, அதுதான் பிரச்சினை!

 4. சாமீ “ஒழுங்காயிரு”க்க ஒரு வழி சொல்லமாட்டேனென்கிறீர்கள் சரி .நித்தியமும் ஆனந்தமாயிருக்கவாவது ஒரு வழி சொல்லக்கூடாதா?

 5. 🙂 அறத்துக்கு தொண்டு செய்ய வேண்டியது நம் கடமை

  அறம் அருமைப்பொருளாகிவருவதால் கதையிலாவது வரக்கடவது.
  இன்னுமது அரிதாகுமெனக்கண்டால்

  அறத்துக்கென்று கோயில் எழுப்பி மூணுகாலப்பூஜைக்கு ஒரு ஆளையும் போட்டாற்போச்சு

  இன்னும் கொஞ்சம் கூடின அக்கறையானா

  அறம் என்று பதித்த டாலர்ச் சங்கிலி, காப்பு ,ஒட்டியாணம் அரைஞாண்கயிறு செய்து வினியோகிக்கலாம்.
  கவர்ச்சி உடையில் முன்னணி நடிகைகள் புன்னகை அள்ளி வீசி கொஞ்சு தமிழில் “அரம் செய்ய விரும்பு” என்று சொல்லிச்சொல்லி ஆடுவது போல விளம் பரம் தொலைக்காட்சியில் .

  அட அதெல்லாம் சின்னப்புள்ளத்தனம்

  நீங்க அறம் முன்னேற்றக்கழகம் (அமுக) கட்சி தொடங்குங்க சார் .முதல் தொண்டன் நான் தான் சார். அஞ்சு வருசத்திலை அமுக ஆட்சியைப்பிடிக்கும் சார்

  சொல்லுங்க சார் நம்ம அறத்துக்குச்செய்யாம வேற எதுக்குச்செய்யப்போறோம்?

  அமுக தலைவர்…. வருங்கால முதல்வர் அறங்காவலர் ; காக்கும் வரை உறங்காரவர்(பதவி கிடைக்கும் வரை) பதவி கிடைத்தால் இறங்காரவர்
  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s