அறச் சம்சயாசாரம்

பால் குர்ட்ஸ் என்பவர் எழுதிய ஒரு புத்தகம் படிக்கிறேன்.

அதில் ஒரு பகுதி அறம் சங்கதியைப் பேசுகிறது. அந்தப் பகுதியைப் பற்றித் தொடர் பதிவுகள் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

குர்ட்ஸ் தன்னை சம்சயக்காரன் (Skeptic) என்று அழைத்துக் கொள்கிறார். சம்சயிகள், நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பவர்கள் என்று தற்போதைக்குப் பொத்தாம்பொதுவாக சொல்லி வைக்கலாம்.

எது அறம், அதன் திசையை எப்படி நிர்ணயிப்பது, அதற்கான விழுமியங்களும் அடிப்படைகளும் எவையாக இருக்கும் என்று அவர் சில வழிமுறைகள் சொல்கிறார். அவை மட்டும் தற்போதைய பரிசீலனைக்கு:

1) அன்றாட வாழ்வு மற்றும் அறிவியல் அனுபவங்கள் வழியாக நமக்குக் கிடைத்த தகவல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாகப்பட்டது:

அ. நம் விசாரத்துக்குரிய சங்கதி பற்றிய தகவல்கள், நம்மை இந்த விசாரத்திலாழ்த்திய சூழ்நிலையின் சிறப்பியல்புகள்

ஆ. இதில் செயல்படும் காரணிகள்- நம்மை இந்நிலைக்கு இட்டு வந்த சமூக காரணங்கள், அவற்றின் தவிர்க்க முடியாத சமன்குலைவுகள்

இ. கைவசமுள்ள வழிமுறைகள், நடைமுறைச் சாத்தியங்கள்

ஈ. விளைவுகள், நாம் என்ன செய்தால் என்ன பயன், பலன் இருக்கும் என்ற கணக்கு

உ. மனிதனின் பொதுத் தேவைகள் – உயிர் வாழவும் செயல்படவும் அவசியமாக உள்ளவை.

இவற்றைக் கருதுவதில் நன்மை தீமை என்ற கேள்விக்கு இடமில்லை.

2) உள்ளபடி இருக்கும் விழுமியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் – அதாகப்பட்டது:

அ.. கடந்த காலத்திலும் இன்றும் மனிதர்கள் எப்படிப்பட்ட விழுமியங்களைக் கடைபிடித்தார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருத்தல்

ஆ. நமக்கு இன்று முக்கியமாய் உள்ள விழுமியங்கள், நம் வாழ்வை நெறிப்படுத்தும் விழுமியங்கள்.

3) அறத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் – அதாகப்பட்டது:

அ. மானுடத்தை வழிநடத்தும் வெவ்வேறு சட்டங்களும் விதிமுறைகளும்

ஆ. நமக்கும் நாம் நம்பிக்கை வைத்திருக்கும் சமுதாயத்துக்கும் தொடர்புடைய அற அடிப்படைகள்

படிக்கக் கொஞ்சம் ஆயாசமாக இருந்தாலும் ஏன் இதையெல்லாம் குர்ட்ஸ் பொருட்படுத்துகிறார் என்று பார்த்தால் சுவாரசியமாக இருக்கக் கூடும்.

image credit : Barnes and Noble

Advertisements

2 thoughts on “அறச் சம்சயாசாரம்

  1. Boss இதெல்லாம் படிக்க நல்லா தான் இருக்கு, இதுல சில விஷயங்கள் நானும் யோசிச்சு இருக்கேன், ஏன் இப்படி நிறைய பேரு பொய் பேசறாங்க, தப்பு ன்னு தெரிஞ்சும் பல விஷயங்கள் செய்யறாங்க. நான் மட்டும் ஏன் இப்படி எப்போதும் உண்மையே பேசறேன். என்னால ஏன் பொய் பேச முடியல,நான் செய்யற காரியங்கள் யாருக்கும் துன்பம் வராமல் இருக்கணுமே, மனசு அடிச்சுக்கும், கடைசில stress and anxiety disorder தான் வந்தது, நீங்களும் விடாம எழுதுங்க, ஐவரும் என்ன சொல்றாரு பாப்போம்.

    1. என்ன சொல்லி என்ன பிரயோசனம்? எதுவும் வேலைக்காவாது. சும்மா டைம்பாஸ்தான் 🙂

      சீரியஸா எடுத்துக்காம என்ஜாய் பண்ணுங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s