ஐயப்படுதலின் சிறப்புகள்


அறம் பற்றிய ஒரு தெளிவுக்கு வருவதற்கு நமக்கு நம் சூழல் மற்றும் அதில் நமக்கு வசதிப்படும் சாத்தியங்கள், நம் விழுமியங்கள் மற்றும் அற விழுமியங்களின் விசைகள் குறித்த தெளிவு தேவைப்படுகிறது என்று சொல்கிறார் குர்ட்ஸ். எதிர்த்துப் பேசும் மனைவியை அடிக்கலாமா கூடாதா என்ற அறச் சிக்கலுக்கு, அவள் எந்த சூழ்நிலையில் எதிர்த்துப் பேசுகிறாள், அவளது அற நம்பிக்கைகள், நமது அற நம்பிக்கைகள், வேறு என்ன செய்ய முடியும் என்ற சிந்தனை, மற்றவர்கள் இந்த சமயத்தில் என்ன செய்கிறார்கள், வேறு சமூகங்கள் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்கின்றன, வேறு காலகட்டங்களில் இதை எப்படி அணுகினார்கள், இப்படியெல்லாம் வேறுபடும் விழுமியங்களின் அடிப்படைகள் என்ன என்றெல்லாம் யோசித்து விஷயத்தைத் தெரிந்து கொண்டு தெளிய வேண்டும் என்று சொல்வது நம் கையைக் கட்டிப் போடும் காரியமாக இருக்குமே தவிர இதில் வேறொரு புண்ணியமும் இருப்பதாகச் சொல்ல முடியாது. இந்த விஷயங்களில் சட்டங்களை இயற்ற வேண்டுமானால் இவை எல்லாம் பயன்படலாம், தனி மனிதன் தன் செயல்களைத் தீர்மானிக்க இவ்வளவும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால் மணமுறிவு ஏற்பட்டு கவுன்சலிங் செல்லும் கட்டத்தில் இந்த விஷயங்கள் அவனது புரிதலுக்கு உதவி செய்யலாம்.

ஆக, இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்பவர்கள் சமைத்துச் சாப்பிடும் நிர்பந்தத்துக்கு வரவில்லை என்றாகிறது. இதெல்லாம் தேவையா இல்லையா என்பதற்கான பதில் அவற்றுக்கான அவசியமும் நிர்பந்தமும் ஏற்படும்போதுதான் முக்கியமாகிறது. மனச் சிதைவு பற்றியோ மரணம் பற்றியோ நாம் இப்போது யோசித்தால் அது வெட்டி யோசனையாக இருக்கும். ஆனால் நாம் அதனால் பாதிக்கப்படும்போது, நமக்குத் தெளிவு கிடைக்க அந்த யோசனைகளை தேவைப்படுகின்றன.

எனவே இந்த தத்துவ வியாதி நமக்கு வேண்டாம் என்று ஒரேயடியாக ஒதுக்கி வைக்காமல், தேவைப்படும்போது பயன்படக் கூடுமோ என்னவோ என்று தற்போதைக்கு கைக்கெட்டும் தூரத்தில் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.

அப்படியே ஒருவனுக்கு அறச் சம்சயாசாரத்தைக் கடைபிடிக்க வேண்டிய தேவை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? குர்ட்ஸை தாராளமாக மொழிபெயர்த்து மேற்கோள் காட்டுகிறேன்:

நமக்கு என்ன தெரியும் எவ்வளவு தெரியும் என்பதைக் கொண்டு மட்டும் அறவழியை ஆராய்ச்சி செய்கிற சமாசாரம் என்று அறச் சம்சயாசாரத்தை நினைத்து விடாதீர்கள். எந்த அடிப்படையும் இல்லாமல் பல அற விழுமியங்களில் நம்பிக்கை இருக்கத்தான் செய்யும் என்பதை அறச் சம்சயாசாரம் ஏற்றுக் கொள்கிறது. அது குழப்பம் இருக்கும் இடத்தில் தெளிவைத் தேடுகிறது, பிரமைகளைத் தாண்டி உண்மைக்குச் செல்கிறது. சம்சயித்தல் நமக்குத் தன்னடக்கத்தை போதிக்கிறது. மானுட யத்தனங்கள் அனைத்தும் சிக்கலானவை, அவற்றில் பிழை நேர்வதைத் தவிர்க்க முடியாது என்ற தெளிவைக் கொடுக்கிறது. மாற்றுப் பார்வைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தருகிறது. அறச் சம்சயம் வேறுபாடுகளைப் பேசித் தீர்க்கவும் சமாதானம் செய்து கொள்ளவும் தேவைப்படும் இடைவெளிக்கு ஏற்பாடு செய்கிறது. போலித்தனமான அறச் சார்புடையதான பாவனைகளிளிருந்து நம்மை விடுவிக்கிறது. சகிப்புத்தன்மையற்ற கோட்பாடுகளுக்கு மானுட நேயத்தைக் கற்பிக்கிறது, அவற்றின் வேகத்துக்கு அணை போடுகிறது. தீவிர அறச் சார்பாளர்கள் நம்மை பலி போட அழைக்கும்போது, “வர மாட்டேன் போ!” என்று அவர்களை மறுக்கக்கூடியதாக அறச் சம்சயங்கள் இருக்கின்றன. கொள்கை வீரர்களைப் போல் மனசாட்சியில்லாமல் நடந்து கொள்பவர்கள் யாரும் கிடையாது. அவர்கள் அறச் சூத்திரங்களின் பெயரால் பிறரை அடித்துச் சாப்பிட்டு விடுவதால் அவர்கள் வழிக்கே போக வேண்டாம் என்று சொல்கிறது.”

என்னதான் நம்பிக்கைகளை ச்ந்தேகித்தாலும் நம்பிக்கைகள் இல்லாமல் வாழ முடியாது என்பதை குர்ட்ஸ் ஏற்றுக் கொள்கிறார். நம்பிக்கைகளும் லட்சியங்களும் இல்லாத வாழ்க்கையில் வெறுமைதான் இருக்கும், உற்சாகப்படுத்துவதாக எதுவும் இருக்காது. நம்பிக்கைகள் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அறச் சம்சயியைக் காப்பாற்றும் ஒரு விஷயத்தை அவன் எப்போதும் மறந்து விடக்கூடாது- அவன் தன் கொள்கைகள் நம்பிக்கைகளின் எல்லைகளையும் குறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும், அவற்றை முழுமையானவையாக நம்பிவிடக் கூடாது.

அறம் கேள்விகளால்தான் காப்பாற்றப்படுகிறது; தீர்மானமான பதில்களால்ல. அதற்காக நம்பிக்கைகளே வேண்டாம் என்று சொல்வதற்கில்லை : நம்பிக்கைகள் இருக்கும்பொதுதானே சம்சயித்தல் சாத்தியமாகிறது? ஐயத்துக்கு இடம் தராத மறுப்பு தீவிர நம்பிக்கையின் மறுபக்கமாகிவிடுகிறது.

9 thoughts on “ஐயப்படுதலின் சிறப்புகள்

 1. நீங்க இங்க ஐயம் பற்றி பேசி இருப்பதால் சமீபத்தில் பார்த்த ஆங்கில படமான “doubt” ஞாபகம் வந்தது, முடிந்தால் பார்க்கவும்

 2. நான் பிறந்தபோதும் குழந்தையாயிருந்தபோதும் எனக்கு அறங்களெதுவுமிருக்கவில்லை.வீட்டில் யாரும் உண்ணவில்லையென்றாலும் பசிக்கும்போது நான் அழுவேன். என் குடும்பம் பட்டினிகிடந்தாவது எனக்கு உணவூட்டிவந்தது.

  பிறகு நான் வளரவளர நல்லவைகளையும் கெட்டவைகளும் சொல்லித்தரப்பட்டன.
  என்னுடைய வளர்ச்சியை மதிபிட்ட மருத்துவர்கள் குழந்தை உடலால் வளருகிறானா என்று மாத்திரம் கவனிக்கவில்லை மனவளர்ச்சியயும் பார்த்தார்கள் எப்படி குழந்தை சிரிக்கிறானா பேசுகிறான தாயைக்கண்டு குதூகலிக்கிறான இப்படி.

  நான் ஒரு சமுகத்தில் வளரவேண்டியது என்விதி.
  மவுக்ளி போல காட்டில்பிறந்துவளர்ந்திருப்பேனானால் நான் இப்படியிருந்திருக்க மாட்டேன்.

  என் சமுகத்தில் என்னுடைய பாத்திரம் குழந்தை. ஒரு குழந்தை எப்படிக்கையாளுவது என்பது என் சமுகத்தில் உணரப்பட்ட விஷயமாக இருந்தது.
  பிறகு நான் வளரவளர நல்லவைகளையும் கெட்டவைகளும் சொல்லித்தரப்பட்டன
  குக்ஷந்தை என்ற பாத்திரத்திலிருந்து வளர்ந்து மகனக சகோதரனாக உறவினனாக சுற்றதினரில் ஒருவனகா என்கிராமத்துக்கு கிராமத்தவனாக எந்தேசத்துக்கு குடிமகனாக இப்படி எனது பாத்திரங்கள் விரிவடைந்து சிக்கலன உலகத்தின் ஒரு அங்கத்துவனாக இருக்கிறேன். தந்தையாக கணவனாக இருக்கிறபோதே என் தொழிலுகத்தில் என்பாத்திரம் இன்னும்பலவாகபிரிகிறது.
  என்னுடைய எல்லாப்பாத்திரங்களுக்கும் அவற்றுக்கு என கடமைகள் இருக்கின்றன.ஒழுங்குமுறைகள் இருக்கின்றன.
  தொழைலைத்தவிர மற்றையவைக்கென்று எழுத்தில் எந்த விதிக்கோவையும் இல்லை.
  ஆனாலும் எல்லாவற்றிலும் ஒரு உழுங்கு இருக்கத்தான் செய்கிறது.

  என்னுடை அறம் இந்த பாத்திரங்களைச்சிறப்பாக முறைப்படி செய்வதில் இருக்கிறது.
  எனது இயல்பு அதற்கேற்றவாறு கட்டியமைக்கப்பட்டிருக்கிறது.பாத்திரங்களின் கடமைகளிலில் ஏதாவதொரு பாத்திரத்தின் கடமையிலிருந்து தவறுகிறபோது அறந்தவறியனாக நிந்திக்கபடுவது நிகழுகிறபோது . துக்க சாகரத்தில் மூழ்கிவிடுகிறேன். குற்ற உணர்வும் என்னைப்பீடிக்கிறது.

  ஆனால் இன்றையவாழ்வு மிகவும் சிக்கலாக இருக்கியிருக்கிறது.எமது தேவைகள் எளிமையான நிலையிலிருந்து சிக்கலான நிலைக்கு மாறிவிட்டிருக்கின்றன.

  விளைவு என்னுடைய பாத்திரங்களுக்குளேயே முரண்பாடுகள் ஏற்படுகிறது. தொழில் குடும்பம் என்ற இரண்டு பாத்திரங்களை வகிக்கிற ஒருவன் கூடும்பத்தலைவன் என்கிற பாத்திரத்தை அதன் அதிகரிக்கும் தேவைகளுக்காக தொழிலின் அவன் வகிக்கும் பாத்திரத்தின் அறத்தை மீறிவிடுகிறான்.
  சூழ் நிலை குடும்ப சமூக தேசம் என வட்டங்களுக்கூடாக என் பாத்திரங்களின் மீது அழுத்தங்களைப்பிரயோகிக்கிறது.
  சமூகத்தின் அன்றைய காலகட்டத்துக்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப எனது பாத்திரங்களில் சில பாத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கிறது. சிலபாத்திரங்களின் கடமை தவறுவது அறமற்றதாக கருதப்படாமல் போவதும் சிலபாத்திரங்கள் கடமை தவறு மிகப்பெரிய அறவழுவலாகவும் சித்தரிக்கப்படுகிறது.
  இன்றைக்கு குடும்பத்துக்காக எதுவும் செய்யலாம் என்கிற போக்கு இர்யுக்கிறது. அரசியல் த்லைவர்களிலிருந்து கடைநிலை ஊழியர் வரை தொழைலை துஷ்பிரயோகம் செய்யலாம் என்கிற நிலை.

  சுதந்திரத்துக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது குடும்பங்களை உதறிவிட்டுச்சென்றவர்கள் தியாகிகளாக போற்றப்பட்டார்கள்.

  இப்படி பாத்திரங்களிடையெ முரண்பாடுகள் எழுகிற போது சில அறங்களை மீறவும் சில அறங்களைத்தக்கவைக்கவும் செய்யவேண்டியதாயிருக்கிறது.
  வாழ்வைத்தக்கவைத்தல் என்பது மனிதனின் அடிப்படை இயல்பல்லவா.

  இப்படிச்சூழ்நிலைகள் அழுத்தத்தைதருகிறபோது ஒருத்தருடை இயல்புகளும் இச்சைகளும் இன்னொருவிதமான அழுத்தத்தை தருகின்றன.
  காமத்தின் மீது அடங்காத நாட்டங்கொண்டவனால் இல்லறத்துக்கான அறம் மீறப்படுகிறது.
  புகழின் மீது நாட்டங்கொண்டவர்களாக சிலரின் இயல்பு அமைந்து விடுகிறது. பணத்தின் மீது நாட்டங்கொண்டவர்களாக சிலரின் இயல்பு அமைந்து விடுகிறது.
  பணத்தின் மீது நாட்டங்கொண்டவர் மருத்துவத்துறைக்குள் வருகிறபோது மருத்துவம் வியபார முனைப்புக்கொண்டதாகி தொழிலுக்கான அறம் மீறப்படுகிறது.
  இப்படி எனது பாத்திரங்களின் அறங்களைப்பேணமுடியாது போகிற போது துக்கிதல் நிகழுகிறது.

  என்னாலியன்றவரை எல்லாப்பாத்திரங்களௌயும் சரிவரச்செய்ய முயலுவதே எனது அறமாக இருக்கிறது. தவறவிடுவதும் சரிசெதுகொள்வதும் ஒரு சமநிலைதான் வாழ்க்கை.

  கதையில் ஜெகனுக்கு அலுவலக நண்பனை திருப்திப்படுத்தவோ அல்லது தனது கருத்தை ஸ்தபிக்க வேண்டுமென்ற ஆளுமை உந்தல் என்ற இயல்ப் முனைப்பட்டுபோகிறபோது இந்தக்கதை நிகழுகிறது. சூழ்நிலையும் இயல்பு அவனது பாத்திரங்களுக்கிடையில் முரண்களைத்தோறுவிக்கிறது.தந்தை , கணவன், நண்பன், தன் முனைப்பு என்கிற நன்கு பாத்திரங்கள்.
  தந்தை என்கிற பாத்திரத்திற்கான குடும்பத்தின் எத்ர்பார்ப்பபை அலுவலகத்தில் உருவான சூழ்நிலையால் நிறைவேற்றமுடியாமல் போகிறது.. அதனால் விளைகின்ற சிக்கலில் ஜெகன் தன்முனைப்புக்கு அல்லது சுயநலத்தை முன்னிறுத்துகிறான்.கதைகள் பபாத்திரங்களுக்கும் பாத்திரங்களின் பாத்திரங்களுக்கும் உள்ல முரண்பட்டையும் அதன் சிகல்களையும் பேசுகின்றன.

  நார்பாதாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அபொரிஜினர்கள் தங்கள் பாத்திரங்களை நிலத்தோடு தொடர்புபடுத்தினார்கள்.அதாவது நிலத்துக்கு அவர்கள் சொந்தம்(நிலம் அவர்களுக்கு சொந்தமல்ல) இயற்கையின் ஒரு பகுதிதான் அவர்கள். ஒவ்வொரு அபொரிஜினனும் பிறந்த்து வளரும்போதும் அவன் தான் நிலத்தின் ஒரு பகுதியாகவெ தன்னை உணர்ந்துகொண்டிருந்தான்.நிலம். அவனது மற்ற ரோல்களை விட நிலத்துக்கு அவர்கள் ஆற்றவேண்டிய கடமைதான் பிரதான அறமாக இருந்தது.மலைகளை குன்றுகளை மரங்களை ஆறுகள் எல்லாமே அவர்களுக்கு உறவு.இயற்கையைப்பயபக்தியுடன் கையாண்டார்கள்.அவர்களுடையபிரதேசத்தை கோபங்கொள்ளவைக்காமல் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழ்வதுதான் அவர்களுடைய அறம்.
  நாற்பதாயிரம் வருடம் அவர்கள் அப்படி வந்திருக்கிறார்கள்.

  நிலம் எனப்படுவது விற்பனைப்பொருள் , இயற்கைவளம் எனப்படுவது மனிதனின் உபயோகப்பொருள் மனிதனுக்குச்சொந்தம் என்ற வளங்களைப்பகுத்துக்கொள்வதில் மாத்திரம் அறங்களைக்கொண்டிருந்த
  பிரிட்டிஷாரின் அறமும் அபொரிஜினர்களின் அறமும் இரண்டு முரண்பட்ட அறங்கள் சந்தித்தபோது நிகழ்ந்தது ஒரு அறத்தின் அழிவு.காரணம்

  குர்ட்ஸ் உம் நாங்களும் பேசிக்கொண்டிருக்கிற அறம் பற்றிய பார்வை எங்களுக்கு மாத்திரமே பொருந்துகிறது.

  உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் நாகரிகத்தின்(என்றுசொல்லப்பட்டதன்) எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்ந்துகொண்டிருக்க நாற்பதாயிரம் வருடம் நிலைத்துவாழ்ந்த அவர்கள் எழுச்சியடையவுமில்லை வீழ்ச்சியடையவுமில்லை. இப்படி ஒரு சமநிலையைத்தக்கவைத்த அறம் ஒரு உன்னதமான அறமல்லவா.
  பூமிக்கு வாயிருந்து அது பேசியிருந்தால் அவர்கள் தான் என்குழந்தைகள் என்று சொல்லியிருக்கும் அவர்கள் பூமியின் உண்மையான குழந்தைகள் போல நடந்திருந்தார்கள்.

  ஏனென்றால் நாங்கள் மனிதர்களுக்கிடையிலலான அறத்தைப்பற்றி வெட்டிக்குத்தி முழங்கிக்கொண்டிருக்கிறோம்.

  இயற்கையையும் உள்ளடக்கியதாக தங்கள் வாழ்வின் அறத்தைகொண்டிருந்தார்கள்.

  1. role playing பற்றி ரமணர் செய்த யோக வாசிட்டப் பாடல்:

   போலி மன எழுச்சி மகிழ்வு உற்றோனாகிப்
   போலி மனப் பதைப்பு வெறுப்பு உற்றோனாகிப்
   போலி முயல்வாம் தொடக்கம் உற்றோனாகிப்
   புரையிலனாய் உலகில் விளையாடு வீரா
   மாலெனும் பல்கட்டு விடுபட்டோன் ஆகி
   மன்னு சமனாகி எல்லா நிலைமைக் கண்ணும்
   வேலைகள் வேடத்து இயைவ வெளியில் செய்து
   வேண்டியவாறு உலகில் விளையாடு வீரா

   நிசர்கதத்த மகராஜ் என்ற மராத்தி ஞானி, ‘ஆவது நீயல்ல, ஆவதெல்லாம் உனக்கு,’ என்பார் (You are not what happens; you are to whom it happens). சட்டை அழுக்காவதால் நாம் அழுக்காவதில்லை. அறம், பாபம், புண்ணியம் இதெல்லாமும் இப்படிதான். எதுவானாலும் நம்மைத் தொடுவதில்லை. எனவே நம் செயல்கள் குறித்து கவலை பதட்டம் குற்ற உணர்வு போன்றவை தேவையில்லை.

   எதைச் செய்ய வேண்டுமோ, எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்கிறோம். அதன் பலனை பிற்பாடு அனுபவிக்கிறோம். இந்த இரண்டிலும் – செய்தல், அனுபவித்தல், இந்த இரண்டு நிலையிலும் எதுவும் நம்மைத் தொடுவதில்லை என்ற தெளிவு இருந்தால் போகப் போக நாம் செயல்கள் ஒழுங்காகிவிடும் என்பது எதிர்பார்ப்பு.

   நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிவசப்பட்ட நிலைகள் இவற்றுக்கான முக்கியத்துவம் குறைவதால் புறவயச் சூழலை சரியாக அறிந்து சரியாக நடந்து கொள்ள முடியும் என்பது எதிர்பார்ப்பு.

   இதுவும் ஒரு வகையான அணுகல். நீங்கள் பாத்திரங்களை ஏற்றல் பற்றி எழுதியதால் இதைச் சொன்னேன். இது சம்பந்தமாக, “நாடகத்தில் ராமன் வேடம் போடுபவன் தன்னை ராமன் என்று நம்புவதில்லை” என்பதையும் ஒரு உதாரணமாகச் சொல்வதுண்டு (இது தமிழ் சினிமா நடிகர்களுக்குப் பொருந்தாது என்பது வேறு விஷயம்).

   உங்களுக்குத் தெரியாத தகவல்களல்ல. 🙂

 3. இந்தப்பாத்திரங்களையும் அதனால் அவருக்லிற அறங்களோடும் வாழுகிற வாழ்க்கை இல்லறம்.
  எல்லாப்பாத்திரங்களையும் சம்பந்தமான அறங்களையும் துறந்துவிட்டால் துறவறம். அதைத்தான் செய்யவேண்டும் 🙂

 4. உண்மைதான் சார் இந்த அறம், வாழ்க்கை, பாத்திரம் ,சாட்சியாக இரு
  இப்படி பேசிப்பேசி அதைக்கேட்டுப்புளித்துப்போய்விட்டது.
  ஓஷோ சமயத்தத்துவங்களைக் கலக்கி அதனோடு மேலைத்தேய உளவியலையும் தூவித்தொடங்கியது அதைவைத்து பலசாமியார்கள் வந்துவிட்டார்கள்.
  condition பண்ணப்பட்டதைப்பிரிக்கவேண்டும் பிறகு மீண்டும் பூட்டவேண்டும்.

  அறத்தை விடுங்கள்.

  மனைவியை அடிப்பது அதுவும் குழந்தைகள் முன்னால் , குழந்தைகளை அடிப்பது இவையெல்லாம் குழந்தைகளுக்கு சிக்கல்களுக்கு வன்முறை ஒரு தீர்வு என்று சொல்லித்தருகிறது என்கிறார்கள்.
  அடிப்பதிலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்வது இதைத்தானென்கிறார்கள்.

  தந்தைகள் பையன்களுக்கு ரோல் மாடல்.

  1. அப்படியானால் தனி அறைக்குள் பூட்டி வைத்து உதைப்பதுதான் நல்லதோ?

   (விளையாட்டுக்குச் சொல்கிறேன், இந்த மாதிரியெல்லாம் நான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டால் அதை வெளியே சொல்ல முடியாது – என் உறவினர்கள் சிலரும் இந்த ப்ளாக்கைப் படிக்கிறார்கள்)

 5. தனியறைக்குள் பூட்டிக்கொண்டால் யார் யாரை உதைக்கிறார்கள் என்று வெளியே தெரியாது 🙂

  உங்களை நான் அப்படி நினைப்பேனா .

  ஒரு கொசுவைக்கூட அடிக்கமாட்டீர்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s