ஒரு சிறு அறிவிப்பு

“ஒரு படைப்பு வந்தா, அதைப் படித்தவன், அந்தப் படைப்பைப் பற்றி அது என்ன, அதன் தரம் என்ன, அது நம்மை எப்படி பாதித்தது, எப்படி ரசித்தேன் என்று அதைச் சொல்லத் தெரியாதா? ஒரு ஸ்வீட்டைக் கொடுத்தால் அந்த ருசியைச் சொல்லத் தெரியாதா? அந்த அக்கறையே இல்ல. ஏதோ மாடு வெக்கலைத் திங்கற மாதிரி…. அதுகூட ரசிச்சு சாப்பிடும்”
– சி.சு. செல்லப்பா

நண்பர் ஸஸரிரி கிரி ஒரு புக் ப்ளாக் துவக்குவதாக இருக்கிறார். என்னைப் போல வளவள என்று எழுதாமல் நறுக் என்று விஷயத்தை மட்டும் சொல்லும்படியாக 250-300 சொற்களில் புத்தகங்களைப் பேசவிருக்கிறார் கிரி.நன்றி கிரி, நல்ல முடிவு.

சிலிகான் ஷெல்ப் போல் புத்தகங்களை மட்டும் பேசும் தமிழ் தளங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே கிரி மேற்கொள்ளவிருக்கும் தளம் முதல் சில முன்னோடிகளில் ஒன்று என்பதாலேயே முக்கியமான முயற்சியாகிறது.

இதில் என்னையும் எழுத அழைத்திருக்கிறார் அவர். இந்த சாக்கிலாவது வாரம் இரண்டு தமிழ் புத்தகங்கள் படிக்கலாம் என்ற பேராசையில் நான் சரி என்று சொல்லிவிட்டேன். வாரத்தில் கிரிக்கு இரண்டு நாட்கள் எனக்கு இரண்டு நாட்கள் என்று வைத்துக் கொண்டாலும் மூன்று நாட்கள் துண்டு விழுகின்றன.

கள்ளிப் பெட்டி என்றழைக்கப்பட்டு இலக்கியம் பேசிய காலத்தில்தான் இந்த ப்ளாக் முப்பதுக்கும் மேற்பட்ட வாசக அன்பர்களைப் பெற்றது. அவர்கள் இன்னும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில், உங்களையும் நண்பரின் ப்ளாக்கில் எழுத அழைக்கிறேன் நீங்களும் வாரம் இரண்டு புத்தகங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை, எப்போது இயல்கிறதோ அப்போது ஒரு 250 – 300 சொற்களில் உங்கள் வாசிப்பு அனுபவத்தை நண்பர் கிரியின் ப்ளாகிலும் பகிர்ந்து கொள்ளலாமே?

போதுமான பதிவுகள், எழுத்தாள அன்பர்கள் கூடியதும் புதிய தளம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நன்றி.

4 thoughts on “ஒரு சிறு அறிவிப்பு

  1. அவ்வப்போது எழுத முடியும் என நினைக்கின்றேன். இது கூட செய்ய மாட்டோமா? புத்தெழுச்சி பெறும் புத்தகப் (வலை)ப் பூவிற்கு எனது வாழ்த்துக்கள்.

    • வீரா, நீங்க எழுதறேன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி.

      விரைவில் வரசித்தன், ரா கிரிதரன், விநட்டு, அபராஜிதன் ஆகிய சக இலக்கியவாதிகளும் பஸ்ஸில் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்🙂

  2. வாழ்த்துக்கள் சார்.நல்லமுயற்சி.
    புத்தகத்தை வாசித்து புத்தகத்தைப்பற்றி எழுதுவதற்கும்,
    வாசித்தபுத்தகத்தை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s