ஆம்னிபஸ் அப்டேட்

சென்ற மாதத்தின் துவக்கத்தில் தினம் ஒரு புத்தகம் பற்றி எழுதலாமா என்று நண்பர் ஸஸரிரி கிரி கேட்டார், சரி என்றேன். ஆனால் அடுத்த நாளே, என்னதான் ஏற்கனவே வாசித்த புத்தகங்களைப் பற்றி எழுதுவதானாலும், எழுத்து என்று வந்தால் தப்பு தவறின்றி தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத வேண்டும் என்றால் அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படித்தாக வேண்டும், இரண்டு நாளைக்கு ஒரு பதிவு எழுதுவது இயலாத காரியம், இன்னும் சில பேரைக் கேட்போம் என்று முடிவு செய்தோம்.

அப்படியாகத் துவக்கப்பட்டதுதான் ஆம்னிபஸ் ப்ளாக். இதன் கவர்ச்சியான வடிவம் இங்கே, ஒரு புத்தக அலமாரி வடிவில் இருக்கிறது – ஆம்னிபுக்ஸ் கொள்ளை அழகு. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் : பதிவு எழுத வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகவாயினும் நண்பர்கள் வாரம் ஒரு புத்தகம் படிக்க இந்த முயற்சி உதவக்கூடும். இதுவரை இதில் வெற்றி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் – எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது, இதில் சிலருக்கு ஆர்வம் குறையலாம். எனவே தற்போதைக்கு நான் எழுதும் குறிப்புகளைக் கையிருப்பில் வைத்திருக்கிறோம் : அவை போஸ்ட் செய்யப்பட வேண்டிய தேவை வராது என்பது என் நம்பிக்கை.

இந்தப் பதினொன்று நாட்கள் ஒரு புதிய, பெரிய உலகைத் திறந்து காட்டியிருக்கின்றன. சுஜாதா, சுகுமாரன், மார்க்வெஸ், விக்ரம் சேத், வாலி, ஆதவன், யதுகிரி அம்மாள் (பாரதி), நாஞ்சில் நாடன், யாரோ ஆண்ட்ரியா மரியா ஷெங்கல், தரம்பால், யுவன் சந்திரசேகர், விட்டல் ராவின் சிறுகதைத் தொகுப்பு, கலாப்ரியா என்று விரிகிறது இந்த உலகம். தொடர்ந்து வாசிக்கப்படும் அலமாரியைப் போல் இந்த உலகம் வரிசை கலைக்கப்பட்ட உலகம் என்பது இதன் சுவாரஸ்யம்.

நண்பர்கள் வாசிக்கவும் எழுதவும் தேர்வு செய்த புத்தகங்கள் ஒரு ஆச்சரியம் என்றால், இவர்கள் அனைவரும் எந்தவிதமான பாவனைகளும் இல்லாதவர்களாக இருப்பது இன்னொரு ஆச்சரியம். இலக்கியவாதிக்கும் இலக்கியவியாதிக்கும் வேறுபாடில்லாதது போல் ஏளனம் செய்யப்படுகிற இன்றைய சூழலில், நாம் ரசித்ததை மட்டுமே பகிர வேண்டும், எதிர்மறை விமரிசனங்களைத் தற்போதைக்குத் தள்ளி வைப்போம் என்று பேசி வைத்து எழுத இணைந்தோம் – இவர்கள் அனைவரும் பிழைகளை விவாதித்துத் திருத்திக் கொள்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அது குறித்து கோபப்படுவதில்லை என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்.

இவையனைத்தையும்விட ஒரு பெரிய ஆச்சரியம் – நண்பர் அஞா நல்ல ஒரு வாசகராக இருப்பதை அறிய நேர்ந்தது. எழுதுவதைவிட முக்கியமான பணிகள் அவர் முன் இருக்கின்றன என்பதால் அவரை ஆம்னிபஸ்ஸில் அழைக்கவில்லை, அவரது திறமை குறித்து தர்போதைக்குப் புகழப்போவதுமில்லை.

ஆம்னிபஸ்

ஆம்னிபுக்ஸ்

Advertisements

5 thoughts on “ஆம்னிபஸ் அப்டேட்

 1. very nice. Thank you all for this good effort.

  natural stream of writings from heart .. not polluted by the droppings of tunnel visioned critics and not yet infected by intellectual/ literary ‘veneer’ ial disease

  sorry for English crap.I have been incapacitated of typing tamil.
  be back in few months

  Thanks Natbas and AG keep it up

  1. இங்க நண்பர் அஞா கிட்ட எழுதச் சொன்னதுக்கு நான் என் தொழில் சார்ந்து எழுத வாய்ப்பு கிடைக்கும்போது எழுதிக்கறேன், அதுவரை ஆளை விடுங்க அப்படின்னு சொன்னார். எழுதறதானா அப்படிதான் எழுதணும்…

   ஆனா புத்தகங்களை, அனுபவங்களை, எண்ணங்களைப் பகிர்வது அபப்டின்னு ஆரம்பிச்சு, ஒரு அளவுக்கு மேல போனதும் நம்மை நாம் சொன்னவை சிறைபடுத்திவிடுகின்றன… அப்போ ரேட்டிங் குடுக்காம இருக்க முடியறதில்லை…

   இதே மாதிரி இன்னும் ஆறு மாசம் கழிச்சு பேசினா, அப்ப பாராட்டலாம். அதுக்குள்ளே எல்லாரும் விமரிசகர்கள் ஆயிடுவோம்னு நினைக்கறேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s