பலபார்வைகள்

நான் அண்மையில் வாசித்தவற்றில் மிகவும் ரசித்த பதிவு இது : இது போல் பல நாவல்களையும் பல்வேறு விமரிசகர்கள் எப்படி அணுகினார்கள் என்று யாராவது எழுதினால் நன்றாக இருக்கும்: நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

 முதல் பதிப்பு ஜூன் 1942 ஆம் ஆண்டு கு.ப.ராஜகோபாலனின் ஆசியோடு வெளியானது. பிற்காலத்தில் வெளியான சில விமர்சனங்கள் மூலம் இந்த நாவல் மீண்டும் மீண்டும் பல விதமான வாசிப்புகளைச் சுமந்து வந்துள்ளது.
கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத் தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்..மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாகவேண்டும்..கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா’, என கு.ப.ராஜகோபாலன் நாவல் முன்னுரையில் எழுதுகிறார். கிராம வாழ்க்கையின் எளிமையில் நற்குணங்கள் இருக்கின்றன, பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது என்பதால் கிராமப் புனருத்தாரணம் செய்வது போல நாவலின் பண்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி தனது விமர்சனத்தில் ‘பாத்திரங்கள் ஆயாசம் எதுவுமின்றித் தம் போக்கில் எழும்பிவருகிறார்கள். வாழ்வு மீது ஆசிரியர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெற்றி என இந்த நாவலைச் சொல்லலாம்..நாகம்மாள் எவ்வித ஒப்பனையும் செய்யப்படாமல் உயிர்ப்புடன் இயங்குகிறாள்’, எனக் குறிப்பிடுகிறார். பெரும்பாலும் நாவலின் எளிமையான உருவாக்கம், செறிவான பாத்திரப் படைப்பு மற்றும் கதையின் இயல்பானப் போக்கு போன்றவை இதன் பலம் என்கிறார்.
அம்பையின் பிரபலமான விமர்சனம் மண்ணாசை கொண்ட பெண்ணின் கதையாக நாகம்மாளை அணுகுகிறது. நாவல் ‘மண்பற்றிய தகவல்களைத் தரும் முனைப்புடன் எழுதப்பட்டது அல்ல..ஒரு பெண் மண்ணுக்கு ஆசைப்பட்டு, அவள் மூலம் பலனடைய நினைக்கும் சில ஆண்களின் திட்டத்தால் ஒரு கொலைக்குக் காரணமாவது பற்றியது’ என அம்பை எழுதுகிறார். ‘பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்திலும் முதன்மைத் தன்மை வாய்ந்தது..சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவாக நாகம்மாள் விளங்குகிறாள்’, என பெருமாள்முருகன் தனது பார்வையை முன்வைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட விமர்சனங்களைப் படிக்கும்போது வாசகர்களான விமர்சகர்கள் நாவலை அந்தந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வாசித்திருக்கிறார்கள் எனப் புலனாகிறது. பெண்ணியப் படைப்பாகவும், உலகின் இயங்குவிதியில் பெண்களின் பங்கு குறித்த கதைக்களனாகவும், கிராம வாழ்வின் புனருத்தாரண வித்தாகவும் நாவல் பலவித வாசிப்புக்கு உள்ளாகிறது. ஒரு விதத்தில் இவை புது வாசகர்களுக்கு பலவிதத் திறப்புகளைத் தந்தாலும் படைப்பை நேரடியாகச் சீர் தூக்கிப் பார்க்கத் தடையாகவும் அமைகிறது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s