பூமியை அழிக்க வந்த ஏலியன்கள்

அஞாவின் சென்ற பதிவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு நண்பர் மட்டும் அது சுஜாதாவை இன்ஸ்பைர் செய்த கதை அல்லது காப்பி அடிக்க வைத்த கதை என்றும், அந்த உண்மை அஞா.வுக்குத் தெரியவில்லை என்றும் சொன்னார். தேர்ந்த வாசகரான அஞா இப்படிப்பட்ட அடிப்படைப் பிழைகளைச் செய்திருக்க மாட்டாரே என்ற கவலையுடன் அவரது முந்தைய பகிர்வுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது அன்னாரது “திசை கண்டேன் வான் கண்டேன்” கதைக்கான விமரிசனம்.

இன்றே வாசித்து மகிழ்க!

௦௦௦௦௦


சுஜாதாவின் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஒரு அறிவியல் புனைவு. ‘The Hitchhiker’s Guide to the Galaxy’ எனும் Douglas Adams அவர்களின் நாவலின் கதைக்கருவை (மட்டும்) கொண்டு எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. அண்டைய கேலக்ஸியில், தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட நோரா கிரகத்தின் இனத்திலிருந்து, விண்வெளி பாதையொன்று அமைப்பதற்காக பூமி அழியப்போகும் செய்தியைக் கொண்டு தமிழ்நாட்டில் தரையிறங்கும் வேற்றுக்கிரகவாசியான பாரியும், அவனது புத்திசாலி வாகனமும் இங்கே சந்திக்கும் இன்னல்களையும் அவர்களுக்கு உதவும் மணி, செங்கமலம் ஆகியோரைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி பூமி அழிகிறதா, இல்லையா என விறுவிறுப்பாக முடித்திருக்கிறார் சுஜாதா.

அறிவியல் புனைவுகளுக்கேயுரிய அறிவியல் சொல்லாடல்கள் (டாக்கியான் என்ஜின், ஹைப்பரயான் கதிர்கள்…) கதைமுழுதும் வந்தாலும், நகைச்சுவையும் சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையவில்லை. எல்லாவற்றையும் விட, உலகம் அழிய சில நிமிடங்களே இருக்கிறது என்று தெரிந்ததும், உலகமெங்கும் நடக்கும் விஷயங்களை விபரிப்பதிலும், கடைசியில், உலகம் அழியவில்லை என்றதும் மக்களின் ரியாக்ஷன்களை சொல்வதிலும் “பூமி ஜனங்கள் தத்தமது துரோகங்களுக்கு திரும்பினார்கள்” என்று முடிக்கையிலும் சுஜாதாவின் எழுத்துநடை அற்புதம்… பின்குறிப்பாக சுடலைமாடன் கோயிலில் வேற்றுக்கிரகவாசிகளை வழிபடுவதாக சொல்வது… 😀

வில்லனான பாரியுடனேயே கதை பயணிப்பதால், பாரியை வெறுக்கவோ, பூமியை அழிப்பது தவறு எனவோ நினைக்க முடியவில்லை. உண்மையில், பூமி அழியவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே கதையை வாசித்து வந்தேன். இருந்தும், கதையின் முடிவு எனக்குப் பிடித்திருந்தது.

மொத்தத்தில் சுஜாதாவின் அறிவியலுக்கே உரிய துள்ளலும், நகைச்சுவையும், நையாண்டியும், சுவாரஸ்யமும், ஸ்டைலும் புத்தகம் முழுவதும், குறிப்பாக முடிவில் விரவிக்கிடக்கின்றன. ஒரு நல்ல sci-fi entertainer.

Advertisements

14 thoughts on “பூமியை அழிக்க வந்த ஏலியன்கள்

 1. //தேர்ந்த வாசகரான அஞா இப்படிப்பட்ட அடிப்படைப் பிழைகளைச் செய்திருக்க மாட்டாரே என்ற கவலையுடன்//

  ஐயோ ஐயோ… 🙂

  http://www.ommachi.net/archives/2412

  இந்தப் பதிவை மட்டும் நான் படிக்காம இருந்திருந்தா, H2G2 ங்கற பேர்ல ஒரு மொக்கைப் படம் (அதையும் ஒழுங்கா பார்க்கல) மட்டுமே இருக்குங்கற அறிவோட சுஜாதாவை இன்னும் புகழ்ந்து, குட்டு வாங்கியிருப்பேன்… எல்லாப் புகழும் அருண் சாருக்கே…

   1. கிட்டதட்ட அப்படித்தான் சார்.. எனக்கு அறிவியல்ல (popular science) ஆர்வம் வர்றதுக்கு அவரும், இப்போ கிட்டத்துல சமுத்ரா சாரும் தான் காரணம். ஒரு வகைல இணையத்தை என்னோட வாத்தியார்னு சொல்லிக்கலாம்.

 2. தெரியாமதான் கேக்கறேன்…

  “உண்மையில், பூமி அழியவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே கதையை வாசித்து வந்தேன். இருந்தும், கதையின் முடிவு எனக்குப் பிடித்திருந்தது.”

  ஏன் இந்த கொலைவெறி?

  1. சார், இதுக்கு என்னைப் பதில் சொல்ல வச்சு உங்க வாசகர் வட்டத்துல என்னை ஒரு சேடிஸ்ட்-ஆ காட்ட முயற்சி பண்றீங்க போலிருக்கே? 🙂

   //பின்ன, பூமிய காப்பாத்தறதுல ஒரு பிரயோசனம்கூட யோசிக்க நேரம் குடுக்காம இழுத்துட்டு போறாரே… நாம ரோடு போடறதுக்கு காடு வெட்ற மாதிரிதான். //

   இது நான் கூகிள் ப்ளஸ்ல்ல சொன்னது….

    1. அடடா… சுஜாதாவோட எழுத்து நடை, என்னை அப்படியெல்லாம் யோசிக்க விடாம கட்டிப் போட்டுடுச்சுன்னு சொல்ல வந்தேன்னு வச்சுக்குங்க…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s